வாட்ஸ்ஆப்பில் ரீவேம்ப் அம்சம் - இனி உங்கள் ஸ்டைலே மாறும்.!

வாட்ஸ்ஆப் தனது பயனாளர்களுக்காக ஸ்டேட்டஸ் பகுதியினை அப்டேட் செய்துள்ளது.

By Ilamparidi
|

முன்னணி சமூக வலைத்தளங்களுள் ஒன்றான வாட்ஸ்ஆப் மிக நீண்ட நாட்களாக தனது ஸ்டேட்டஸ் பகுதியினை புதிய அம்சங்களுடன் சீரமைக்கக்கூடும் என பேச்சு நிலவி வந்த நிலையில் இப்போது தனது பயனாளர்களுக்காக அப்டேட் செய்துள்ளது.

இதன் மூலமாக இனி வாட்ஸ்ஆப் பயனாளர்கள் தனது அன்றாட நிகழ்வுகளை புகைப்படம், வீடியோ,மல்டிமீடியா கன்டென்ட்,மற்றும் கிப்ட் போன்றவற்றை வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் ஆக தனது நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள இயலும்.

இதுகுறித்த தகவல் கீழே.

வாட்ஸ்ஆப்:

வாட்ஸ்ஆப்:

தற்போது உலகு தழுவிய அளவில் அதிகப்படியான பயனாளர்களைக் கொண்டுள்ள ஓர் முன்னணி சமூக வலைத்தளம் வாட்ஸ்ஆப் ஆகும்.இதன் வருகைக்குப் பின்னால் குறுஞ்செய்தி முறையானது முற்றிலுமாக குறைந்து போனது என்று கூட குறிப்பிடலாம்.அத்தகைய அளவினுக்கு பயனாளர்கள் இதன் வழியாக புகைப்படங்கள்,வீடியோக்கள் செய்திகள் ஆகியனவற்றை இணைய வசதி மட்டுமிருந்தால் இலவசமாக பகிர்ந்துகொள்ளலாம் என்ற நிலையினை இது உருவாக்கி இருந்ததே காரணமாகும்.நண்பர்கள் மற்றும் காதலர்களுக்கிடையே சாட் செய்யவும் இது அதிகப்படியாக பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டேட்டஸ்:

ஸ்டேட்டஸ்:

வாட்ஸ்ஆப்பில் இன்னுமோர் குறிப்பிடத்தகுந்த அம்சம் அதன் ஸ்டேட்டஸ் பகுதியாகும்.இந்தப் பகுதியில் டீபால்டாக சில ஸ்டேட்டஸ்கள் இருந்தாலும் அதனை பயனாளர்கள் தங்களுக்கேற்றவகையில் மாற்றியமைத்துக்கொள்ள இயலும்.இதன் மூலமாக பயனாளர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தங்களுக்குப் பிடித்தவற்றை ப்ரொபைல் ஸ்டேட்டஸ் மூலமாக பகிர்ந்துகொள்ள இயலும்.

அப்டேட்:

அப்டேட்:

இந்த நிலையில்,வாட்ஸ்ஆப் தனது ஸ்டேட்டஸ் பகுதியில் புதிய அப்டேட் செய்துள்ளது.அது என்னவெனில் இனி தனது பயனாளர்கள் தங்களது அன்றாட நிகழ்வுகள் மற்றும் தங்களுக்குப் பிடித்தமானவற்றை புகைப்படம்,விடீயோ,மல்டிமீடியா கன்டென்ட் மற்றும் கிப்ட் ஆகியவற்றின் மூலமாக பகிர்ந்துகொள்ளலாம் என்பதே அது.

எப்படி பயன்படுத்துவது:

எப்படி பயன்படுத்துவது:

வாட்ஸ்ஆப்பின் இத்தகைய புதிய அம்சமானது இப்போது உள்ள சாட்ஸ்,கால்ஸ் என்ற பகுதிகளுக்கிடையில் ஸ்டேட்டஸ் என்று இன்னுமோர் டேப் புகுத்தப்படும்.இதனை டச் செய்வதன் மூலமாக உங்களது புதிய ஸ்டேட்டஸ்தனை வீடியோ,புகைப்படம்,மல்டிமீடியா கன்டென்ட் போன்றவற்றினை அமைத்துக்கொள்ளலாம்.இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் போன்றவற்றில் உள்ளது போல ஸ்டோரியாகவும் பகிர்ந்துகொள்ளலாம்.

பிரைவசி:

பிரைவசி:

வாட்ஸ்ஆப்பின் இப்புதிய முறையில் நீங்கள் மேற்கொள்ளும் ஸ்டேட்டஸ் ஆனது உங்களது காண்டாக்ட்டில் உள்ள அனைவருக்கும் டீபால்டாக பகிர்ந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.இதனை நீங்கள் யாருடன் மட்டும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறீர்களோ அவர்களுடன் மட்டும் பகிர்ந்துகொள்ளக்கூடிய வகையில் அமைப்பினை மாற்றியமைத்துக் கொள்ளலாம்.

கமண்ட்:

கமண்ட்:

மேற்குறிய வகையில் வாட்ஸ்ஆப் புதிய அம்சத்தின் மூலம் நீங்கள் பகிர்ந்துகொள்கிற ஸ்டேட்டஸ்களுக்கு உங்கள் நண்பர்களால் அதற்கான ரியாக்க்ஷன் மற்றும் கமன்ட் ஆகியவற்றை தெரிவிக்க இயலும்.அத்தகைய கமன்ட் போன்றவை உங்களுக்கு மட்டுமே காட்டப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எப்போது இந்தியாவில்:

எப்போது இந்தியாவில்:

வாட்ஸ்ஆப் பின் இத்தகைய புதிய ஸ்டேட்டஸ் அம்சமானது இப்போது யூரோப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.படிப்படியாக பிற பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்டு,ஐபோன் மற்றும் ஐஓஎஸ் ஆகியவற்றிக்கு ஏற்றவகையில் உள்ளது.இந்தியாவிற்கு வரும் வரை கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பிரண்ட்ஸ்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஜியோவின் அழிவு காலம் ஆரம்பமாகிறது - ஏன்.? எப்படி.? எதனால்.?

Best Mobiles in India

Read more about:
English summary
WhatsApp Status Revamp Goes Official, Changes the Way You Use the Messaging App.Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X