இனி வாட்ஸ்ஆப் மூலம் வாய்ஸ் கால் செய்ய முடியும், நம்புங்க பாஸ் இது உண்மை தான்

By Meganathan
|

தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளிடம் சோதனை செய்யப்பட்டு வந்த வாட்ஸ்ஆப் காலிங் சேவை பல வாட்ஸ்ஆப் பயனாளிகளுக்கும் வழங்க துவங்கி இருக்கின்றது வாட்ஸ்ஆப் நிறுவனம்.

இனி வாட்ஸ்ஆப் மூலம் வாய்ஸ் கால் செய்ய முடியும்

ஆன்டிராய்டு இயங்குதளங்களின் மூலம் வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் பலருக்கும் வாய்ஸ் கால் சேவை செயல்படுத்தப்பட்டது. ஏற்கனவே வாய்ஸ் கால் சேவையை வைத்திருப்பவர் மற்றவர்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ளும் போது அவர்களுக்கும் இந்த சேவை வழங்கப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும் இந்த சேவை அனைவருக்கும் வழங்கப்பட்டதாக தெரியவில்லை.

இனி வாட்ஸ்ஆப் மூலம் வாய்ஸ் கால் செய்ய முடியும்

தற்போது வரை ஆன்டிராய்டு மற்றும் ப்ளாக்பெரி பயனாளிகளுக்கு வாட்ஸ்ஆப் மூலம் அழைப்புகளை மேற்கொள்ளும் போது இந்த சேவை ஆக்டிவேட் ஆகின்றது, என்றாலும் ஒருவரால் இத்தனை பேருக்கு மட்டும் தான் அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்று வாட்ஸ்ஆப் வரையறுத்துள்ளதாகவும் தெரிகின்றது.

இனி வாட்ஸ்ஆப் மூலம் வாய்ஸ் கால் செய்ய முடியும்

இந்த சேவையானது ஐபோன் மற்றும் விண்டோஸ் போன்களுக்கு வழங்கப்படவில்லை. இந்த சேவை ஆக்டிவேட் செய்யப்பட்ட பின் வாட்ஸ்ஆபு் கான்டாக்ட்களுக்கு வாய்ஸ் கால் செய்ய தனி ஸ்கிரீனும், சாட் விண்டோ காலிங் பட்டன் ஒன்றையும் காண்பிக்கின்றது. ஆக்டிவ் கால் ஸ்கிரீனில் லவுட் ஸ்பீக்கர், சாட் விண்டோ மற்றும் ம்யூட் செய்ய தனித்தனியே பட்டன்கள் இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
WhatsApp starts rolling out voice calling feature. After testing with select users, WhatsApp is rolling out much awaited internet calling functionality to a wider set of people.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X