வாட்ஸ்ஆப் செயலியில் இதெல்லாம் இருந்தால்..?!

Posted by:

வாட்ஸ்ஆப் செயலி உலகம் முழுவதிலும் பிரபலமாக இருக்கும் குறுந்தகவல் செயலி என்பதோடு, ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் அத்தியாவசிய தேவையாகவும் இருக்கின்றது.

குறுந்தகவல் அனுப்புவதில் துவங்கி புகைப்படம், வீயோக்கள் மற்றும் இண்டர்நெட் மூலம் அழைப்புகளை மேற்கொள்வது வரை இன்று பல்வேறு சேவைகளை வாட்ஸ்ஆப் செயலி வழங்கி வருகின்றது.

அவ்வாறான செயலியில் இது போன்ற அம்சங்கள் இருந்தால் எப்படி இருக்கும், எவ்வாறான அம்சங்கள் என்பதை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

தகவல்கள்

வாட்ஸ்ஆப் எந்தளவு பதிவிறக்கம் செய்யப்படுகின்றதோ அதே அளவு இதன் மூலம் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கின்றது.

பாதுகாப்பு

100 கோடி பேர் தினமும் பயன்படுத்தும் செயலியில் இருக்க வேண்டிய சில அத்தியாவசிய அம்சங்களை தொடர்ந்து பாருங்கள்..

இன்பில்ட் ஆப் லாக்

ஏற்கனவே பல செயலிகள் இருந்தாலும் வாட்ஸ்ஆப்பில் பில்ட் இன் லாக் ஆப் இருந்தால் அதன் தகவல்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்படலாம்.

இன்விசிபிள் மோடு

பல குறுந்தகவல் செயலிகளிலும் இருக்கும் இந்த சேவை வாட்ஸ்ஆப் செயலியிலும் அறிமுகம் செய்யப்பட்டால் பயனுள்ளதாக இருக்கும்.

பிஸி மோடு

பணியில் இருக்கும் போது வாட்ஸ்ஆப் நோட்டிபிகேஷன்கள் பலருக்கும் தொல்லையாகவே இருக்கின்றது, இதனால் பிஸி மோடு எனும் அம்சம் அறிமுகம் செய்யப்படலாம்.

ஃப்ரென்டு ரிக்வஸ்ட்

பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்ஆப் செயலியை கைப்பற்றிய போது பலரும் எதிர்பார்த்த இந்த அம்சம் உண்மையில் வாட்ஸ்ஆப் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டால் எப்படி இருக்கும்.

ரீகால் மெசேஜஸ்

சில சமயங்களில் தவறான தகவல்களை பறிமாறும் சம்பவங்கள் நடைபெற்று கொண்டு தான் இருக்கும், இதை தடுக்க குறுந்தகவல் அனுப்பப்பட்ட சில நொடி வரை அவற்றை ரீகால் செய்யும் அம்சம் வழங்கப்படலாம்.

டெக்ஸ்ட் ஒன்லி மெசேஜஸ்

சிலரிடம் இருந்து டெக்ஸ்ட் மட்டும் வந்தால் போதும் எனில் இந்த அம்சம் அவர்களிடம் இருந்து வீடியோ, புகைப்படம் போன்றவற்றை வராமல் தடுக்கும். இப்படி ஒரு அம்சம் இருந்தால் அதிகளவு டேட்டா மிச்சப்படுத்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்ப்பு

இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் அம்சங்கள் சந்தை வல்லுநர்களின் எதிர்பார்ப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிச்சயம்

இந்த அம்சங்கள் அனைத்தும் யூகங்களின் அடிப்படையில் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளது. இவை செயலியில் செயல்படுத்துவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை அந்நிறுவனம் மட்டுமே அறிவிக்க முடியும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Here you will find WhatsApp privacy features we would love to have. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்