வாட்ஸ்ஆப் அப்டேட் : புது சங்கதியை பார்த்தீர்களா??

Written By:

உலகம் முழுக்க வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 100 கோடியை எட்டி சில நாட்களே நிறைவடைந்திருக்கும் நிலையில் அந்நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர தீவிரமாக வேலை செய்வதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது அந்நிறுவனத்தின் புதிய முடிவு.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் செயலியானது சர்வர் பக்கம் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. சத்தமில்லாமல் மட்டும் வழங்கப்பட்டுள்ள இந்த அப்டேட் குழுவாக சாட் செய்வோருக்கு பயன் தரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

எண்ணிக்கை

முன்னதாக வாட்ஸ்ஆப் க்ரூப் சாட் எனப்படும் குழுவாக சாட் செய்யும் ஆப்ஷனில் அதிகபட்சம் 100 பேர் வரை பங்கேற்க முடியும் என்பது அனைவரும் அறிந்ததே.

அதிகரிப்பு

இதையடுத்து வாட்ஸ்ஆப் 2.12.13 எனும் புதிய அப்டேட் மூலம் க்ரூப் சாட்டில் அதிகபட்சம் 256 பேர் வரை இணைத்து கொள்ள முடியும்.

வெர்ஷன்

ஆண்ட்ராய்டில் க்ரூப் நபர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பது வெர்ஷன் v2.12.367 மற்றும் அதற்கும் அதிகமான அப்டேட் செய்தோருக்கு மட்டும் தெரிகின்றது. மற்ற பயனர்களும் இந்த அப்டேட் பெற v2.12.437 எனும் புதிய அப்டேட்டினை பதிவிறக்கம் செய்யலாம்.

இயங்குதளம்

தற்சமயம் இந்த அப்டேட் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மற்ற இயங்குதளங்களில் விரைவில் இந்த அப்டேட் வழங்கப்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை

கடந்த மாதம் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை என அந்நிறுவனம் அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

திட்டம்

கட்டணங்கள் இல்லை என்பதை தொடர்ந்து வணிகம் செய்வோருடன் இணைப்பில் இருக்கும் வகையில் வாட்ஸ்ஆப் செயலியில் அப்டேட்கள் வழங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயன்பாடு

சமீபத்தில் 100 கோடி பயனர்களை பெற்றதோடு நாள் ஒன்றிற்க்கு வாட்ஸ்ஆப் செயலியில் சுமார் 42 பில்லியன் குறுந்தகவல்கள், 1.6 பில்லியன் புகைப்படம், 250 மில்லியன் வீடியோக்கள் பரிமாற்றம் செய்யப்படுவதோடு 1 பில்லியன் க்ரூப்கள் இருக்கின்றன.

ஃபேஸ்புக்

மேலும் வாட்ஸ்ஆப் பயனர்களை ஃபேஸ்புக் அக்கவுன்டின் குறுந்தகவல் மற்றும் வாய்ஸ் காலிங் செயலியுடன் ஒன்றிணைக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம். 

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
WhatsApp New Update Now Supports Up to 256 Users in Group Chat Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்