வாட்ஸ்ஆப்பில் 2 புதிய அம்சங்கள் விரைவில் அறிமுகம், அவைகள் என்னென்ன.?

லைவ் லோக்கேஷன் ஷேரிங் அம்சம் உடன் மேம்படுத்தப்பட்ட ஸ்டேட்டஸ் அம்சம் ஒன்றையும் வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுக்கிறது.

Written By:

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கான வாட்ஸ்ஆப் வெர்ஷன்களில் மிகவும் சுவாரஸ்யமான அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சமீபத்திய பீட்டா ஆப் கசிவு தகவலின் படி, வாட்ஸ் ஆப் நேரடி இட பகிர்வு அம்சத்தினை அதாவது எங்கு சென்றாலும் மக்களை எளிமையாக கண்டுபிடிக்க உதவும் லைவ் லோக்கேஷன் ஷேரிங் அம்சம் அறிமுகமாக உள்ளதாக எதிர்பார்க்கப்படுக்கிறது.

உடன் சேர்த்து ஆப்பில் எதிர்கால பதிப்புகளில் உள்வரும் ஒரு புதிய மேம்படுத்தப்பட்ட ஸ்டேட்டஸ் அம்சம் ஒன்றையும் வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுக்கிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்க்ரீன் ஷார்ட்

வாட்ஸ்ஆப் பீட்டாவின் மாற்றங்களை கண்காணிக்கும் டபுள்யூஏபீட்டாஇன்போ (ABetaInfo) புதிய இட பகிர்வு அம்சம் சார்ந்த ஸ்க்ரீன் ஷார்ட்களை பகிர்ந்துள்ளது மற்றும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் வாட்ஸ்ஆப் பீட்டா பயன்பாடுகளில் இந்த அம்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

வேலை

இந்த அம்சம் மூலம் ஒரு க்ரூப் சாட்டில் உள்ள நண்பர்கள் அவர்களின் இட பகிர்வை நிகழ்த்திக்கொள்ளும் வண்ணம் பீட்டா பதிப்புகளாகிய ஐபோன் 2.17.3.28 மற்றும் ஆண்ட்ராய்டு 2.16.399 ஆகியவைகளில் வேலைகள் நடக்கிறதாம்.

வேலை

இந்த அம்சம் மூலம் ஒரு க்ரூப் சாட்டில் உள்ள நண்பர்கள் அவர்களின் இட பகிர்வை நிகழ்த்திக்கொள்ளும் வண்ணம் பீட்டா பதிப்புகளாகிய ஐபோன் 2.17.3.28 மற்றும் ஆண்ட்ராய்டு 2.16.399 ஆகியவைகளில் வேலைகள் நடக்கிறதாம்.

ஒரு சில நிமிடங்கள்

புதிய 'ஷோ மை பிரெண்ட்ஸ்' என்ற அம்சம் தான் ஒரு சில நிமிடங்கள் அல்லது குறிப்பிட்ட பார்வையாளர்களுக்கு உங்கள் நேரடி இடத்தின் அணுகலை வழங்க செய்கிறது.

டெவலப்பர்

இந்த நேரடி இட பகிர்வு அம்சம் தவிர்த்து ஐஓஎஸ் வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பு 2.17.3.28-ல் புகைப்படங்கள் இயல்பாகவே ஒரு தனி கோப்புறையில் சேமிக்கும் திறன் கொண்டுவரப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. உடன் மறைமுகமாக நீங்கள் நேரடியாக டெவலப்பர்க்ளுக்கு உங்கள் கருத்தை தெரிவிக்க உதவும் காண்டாக்ட் அஸ்' என்றவொரு புதிய பொத்தானையும் எதிர்பார்க்கலாம்.

நேரடி அழைப்பின் போது

உடன் பேட்டரி குறைவாக உள்ளதை அறிவிக்கும் வண்ணம் நேரடி அழைப்பின் போது கூட ஒரு நோட்டிபிகேஷன் அனுப்பும் திறனும் விரைவில் சேர்க்கப்படலாம்.

மேலும் படிக்க

எடிட் & ரீவோக் : வாட்ஸ்ஆப் பயனர்களின் "கனவு" அம்சங்கள், விரைவில்.!?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
WhatsApp Leak Tips Live Location Sharing Feature, Overhaul of Status Messages. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்