கணினியில் வாட்ஸ்ஆப் ஆப் அறிமுகம்.!!

Written By:

கணினிகளில் பயன்படுத்தக்கூடிய வாட்ஸ்ஆப் சேவையை வாட்ஸ்ஆப் நிறுவனம் நேற்று அறிமுகம் செய்தது. புதிய செயலிகள் வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் இணைய பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இவைகளை பயன்படுத்த கணினியில் குறைந்தபட்சம் விண்டோஸ் 8 இயங்குதளம் அல்லது மேக் ஓஎஸ் 10.9 இயங்குதளம் அவசியம் ஆகும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

1

கணினிகளுக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து வாட்ஸ்ஆப் செயலி அனைத்து பிரபல இயங்குதளங்களிலும் கிடைக்கின்றது. வாட்ஸ்ஆப் செயலியின் கணினி பதிப்பானது செயலி வெளியாகி 14 மாதங்களுக்கு பின் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2

முன்னதாக வாட்ஸ்ஆப் வெப் என்ற பதிப்பு மொபைல் இல்லாத இயங்குதளங்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்ஆப் டெஸ்க்டாப் செயலிகள் வாட்ஸ்ஆப்வெப் போன்றே குறுந்தகவல்களை மொபைல் கருவிகளில் இருந்து பயன்படுத்தும்.

3

கணினிகளில் வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்திருக்கின்றோம். இனி மொபைல் அல்லது கணினி அன எங்கும் எப்போதும் வாட்ஸ்ஆப் மூலம் இணைந்திருக்க முடியும் என வாட்ஸ்ஆப் இணையப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

4

புதிய வாட்ஸ்ஆப் செயலிகள் மொபைல் கருவிகளுடன் சின்க் செய்யப்பட்டுள்ளதல், இந்த செயலிகள் கணினியிலும் வேலை செய்வதோடு நோட்டிபிகேஷன்களுக்கும் சப்போர்ட் செய்யும்.

5

வாட்ஸ்ஆப் டெஸ்க்டாப் செயலிகளை பயன்படுத்த வாட்ஸ்ஆப் வெப் போன்றே மொபைலில் பயன்படுத்தப்படும் வாட்ஸ்ஆப் செயலியை கணினியில் QR கோடு மூலம் ஸ்கேன் செய்து அதன் பின் கணினியில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியும்.

6

ஸ்மார்ட்போனில் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்ஆப் செட்டிங்ஸ் சென்று வாட்ஸ்ஆப் வெப் மெனுவை பார்க்க வேண்டும். இதற்கு வாடிக்கையாளர்கள் தங்களது கருவியில் புதிய அப்டேட் கொண்ட வாட்ஸ்ஆப் செயலி கொண்டிருப்பதும் அவசியம் ஆகும்.

8

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
WhatsApp Launched Desktop Apps for Windows and Mac Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்