வாட்ஸ்ஆப் புதிய வடிவமைப்பு எப்படி இருக்கு

By Meganathan
|

பேஸ்புக் நிறுவனம் கைப்பற்றிய பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்ஆப் புதிய வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய வாட்ஸ்ஆப் வெர்ஷன் 2.12.38 நிறுவனத்தின் தளத்தில் கிடைக்கின்றது. அப்டேட் செய்யப்பட்ட பின் புதிய ஐகான்கள், அனிமேஷன் மற்றும் பல நிறங்களில் எமோஜி ட்ரே மற்றும் வாய்ஸ்கால் அம்சம் இருக்கின்றது. அப்டேட் செய்யப்பட்ட பின் ஆப் டாஸ்க் பாரில் கால், சாட் மற்றும் கான்டாக்ட் பார் இருக்கின்றது.

வாட்ஸ்ஆப் புதிய வடிவமைப்பு எப்படி இருக்கு

சாட் ஓபன் செய்யும் போது வாய்ஸ் ரெக்கார்டு செய்ய வட்ட வடிவில் பச்சை நிற ஐகான் பின்னணியில் இருக்கின்றது. இதோடு புது அனிமேஷன்கள் வழங்கப்பட்டிருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.

போனில் ஸ்கிரீன் ரோடேஷன் ஆன் செய்யப்பட்டிருக்கும் போது ப்ளிப் செய்தால் பெரிய வாட்ஸ்ஆப் ப்ரோஃபைல் படம் தெரியும். இந்த அப்டேட் விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் நிறுவனம் apk ஃபைலினை பதிவிறக்கம் செய்ய வழங்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் புதிய வடிவமைப்பு எப்படி இருக்கு

கடந்த வாரம் வாட்ஸ்ஆப் தெரிவிக்கும் போது விண்டோஸ் போன்களில் வாய்ஸ் கால் அம்சம் விண்டோஸ் போன்களுக்கு விரைவில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் ஆன்டிராய்டு பயனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில் ஐஓஎஸ் கருவிகளுக்கு விரைவில் இந்த அப்டேட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
WhatsApp, has revamped its Android app for smartphones with a Material Design makeover.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X