வாட்ஸ்ஆப்பும் நவம்பரும் : தயவு செய்து இதை வீட்டில் முயற்சித்து பார்க்கவும்.!

வாட்ஸ்ஆப் அதன் பயனர்களின் வாழ்க்கை முறையை எளிமையாக்கும் நோக்கத்தில் இந்த நவம்பர் மாதம் அறிமுகம் செய்த அம்சங்களை நீங்கள் முயற்சி செய்தீர்களா.?

|

வாட்ஸ்ஆப் எப்போதுமே ஒரு புதிய, அற்புதமான அம்சத்தை அறிமுகம் செய்ய தயங்குவதே இல்லை. அப்படி பார்க்கையில் இந்த நவம்பர் மாதம் வாட்ஸ்ஆப் பயனர்களுக்கு ஒரு நல்ல என்ற கூறலாம்.

இந்த நவம்பர் மாதத்தில் வாட்ஸ்ஆப் மெசேஜிங் ஆப் ஆனது பல புதிய அம்சங்களை கொண்டு வந்தது. எடுத்துக்காட்டுக்கு க்ரூப் சாட்டில் @ குறியீடு பயன்படுத்தி குறிப்பிட்ட நண்பருக்கு மெஸேஜ் அனுப்பும் அம்சம், படங்களில் டெக்ஸ்ட் சேர்த்து அனுப்பும் அம்சம் போன்றவைகள். இவைகள் மட்டுமின்றி இந்த மாதம் மிகவும் பிரபலமான வீடியோ அம்சங்கள் மற்றும் பயனர் பாதுகாப்பு மேம்படுத்துவதில் வாட்ஸ்ஆப் அதிக கவனம் செலுத்தியது.

அப்படியாக வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்த புத்தம்புதிய அம்சங்களின் தொகுப்பே இது.!

வீடியோ காலிங்

வீடியோ காலிங்

நீண்ட கால சோதனைக்கு பின்னர் வாட்ஸ்ஆப் இறுதியாக அதன் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் பயனர்கள் ஆகிய அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீடியோ அழைப்பு வசதியை அறிமுகப்படுத்தியது. வாட்ஸ்ஆப்பின் வீடியோ அழைப்பு அம்சமானது மற்ற போட்டியாளர்களின் வீடியோ தளங்கள் போலல்லாமல், 2ஜி மற்றும் வரையறுக்கப்பட்ட நெட்ர்க்கில் கூட வேலை செய்யுமே என்றுகூறப்படுகிறது. பயனர் வீடியோ காலில் இருக்கும் போதே ஒரே நேரத்தில் உரை செய்தியையும் அனுப்ப முடியும் என்பது சிறப்பம்சம்.

வீடியோ ஸ்ட்ரீமிங்

வீடியோ ஸ்ட்ரீமிங்

வீடியோ காலிங் அம்சத்தை அறிமுகப்படுத்திய பின் வாட்ஸ்ஆப் அதன் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் பயனர்களுக்கு ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் வசதியை வெளியிட்டது. இந்த வசதியை பயன்படுத்தி பயனர்கள் நண்பர்கள் அனுப்பிய விடியோவை டவுன்லோட் செய்யாமலேயே பார்க்க முடியும். பயனர் எந்த விதமான பப்பரிங் சிக்கலும் இல்லாமல் வீடியோ பார்க்க முடியும், மற்றும் அதே நேரத்தில் வீடியோ பதிவிறக்கமும் செய்ய முடியும்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வெரிஃபிக்கேஷன் ஆப்ஷன்

வெரிஃபிக்கேஷன் ஆப்ஷன்

முன்பை விட வாட்ஸ்ஆப் இப்போது அதிக பாதுகாப்பானதாக உள்ளது என்றே கூறலாம். குறிப்பாக அதன் டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் ஆப்ஷனை அறிமுகம் செய்த பின்னரே மிக பாதுகாப்பான ஒன்றாக மாறிவிட்டது. அதாவது பயனர் அவரின் எண்ட் டு எண்ட் என்க்ரைப்டட்தனை ஒரு இரகசிய கடவுக்குறியீடு கொண்டு செட்டிங் செய்து கொள்ள முடியும்.

கிப் வீடியோ

கிப் வீடியோ

இந்த மாத முற்பகுதியில், வாட்ஸ்ஆப் கிப் (GIF) அம்சத்தை அதன் ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் பயனர்களுக்கு அறிமுகம் செய்தது. அதன் மூலம் பயனர்கள் எளிதாக தங்கள் சொந்த கிப் வீடியோக்களை உருவாக்கி தங்கள் நண்பர்களுக்கு அனுப்ப அனுமதிக்கப்படுகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

இந்தியாவில் பேஸ்புக் எக்ஸ்பிரஸ் வைஃபை, உங்க ஏரியாவிற்கு வருமா.?

Best Mobiles in India

Read more about:
English summary
WhatsApp Just Made Life Easier by Introducing these Features this November: Did You Try Them. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X