டவுன்லோடு செய்யாதீங்க : மால்வேர் மூலம் ஆப்பு வைக்கும் 'வாட்ஸ்ஆப் கோல்டு'.!!

Written By:

ஸ்மார்ட்போன்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் மால்வேர் ஒன்று வாட்ஸ்ஆப் கோல்டு எனும் பெயரை கொண்டு இணையங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. தற்சமயம் ட்விட்டரில் அதிகம் பகிர்ந்து கொள்ளப்படும் செய்தியும் இது தான்.

குறுந்தகவல் வடிவில் இணையத்தில் வலம் வரும் இந்த மால்வேர் வைரஸ் வாட்ஸ்ஆப் செயலியின் புதிய பதிப்பினை பதிவிறக்கம் செய்ய கோரும். தவறுதலாக இதனினை இன்ஸ்டால் செய்தால் ஸ்மார்ட்போன் கருவியானது குறிப்பிட்ட மால்வேர் மூலம் பாதிக்கப்படுகின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

1

அதன் படி குறுந்தகவலில் வாட்ஸ்ஆப் கோல்டு பதிப்பு செயலியை பலவேறு பிரபலங்களும் பயன்படுத்தி வருகின்றனர். இதில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்படுகின்றது.

2

வாட்ஸ்ஆப் கோல்டு செயலியில் வீடியோ காலிங் அம்சம், ஒரே நேரத்தில் 100 புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் வசதி, இலவச அழைப்பு, வாட்ஸ்ஆப் தீம்களை மாற்றி கொள்ளும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

3

இதோடு வாட்ஸ்ஆப் கோல்டு பதிப்பினை அழைப்பிதழ் இல்லாமல் பதிவிறக்கம் செய்ய முடியாது என்றும் கூறப்படுகின்றது.

4

மேலும் அழைப்பிதழில் வழங்கப்பட்டுள்ள லின்க் www.goldenversion.com என்ற தளத்திற்கு வழி செய்கின்றது, இதனை க்ளிக் செய்தால் பிழை 404 என்ற தகவல் கிடைக்கின்றது. இந்த முறைகேடில் இதுவரை எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

5

இந்த செயலியானது ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோரிலும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

6

வாட்ஸ்ஆப் ப்ளஸ் செயலி போன்றே இதுவும் போலியானது தான் என்பதோடு இதனால் ஸ்மார்ட்போன்கள் தேவையில்லா மால்வேர் மூலம் பாதிக்கப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

7

வாட்ஸ்ஆப் ப்ளஸ் செயலியானது வாட்ஸ்ஆப் மூலம் உருவாக்கப்படவில்லை என்பதோடு இது அந்நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

8

இதோடு வாட்ஸ்ஆப் நிறுவனம் குறுந்தகவல் மூலம் மற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்ய வாடிக்கையாளர்களுக்கு வலியுறுத்தாது என தெரிவித்துள்ளது.

9

வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள வாட்ஸ்ஆப் நிறுவனம் மின்னஞ்சல் போன்ற சேவையை பயன்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் குறுந்தகவல்களில் அனுப்பப்படும் லின்க்'களை க்ளிக் செய்ய வேண்டாம் என்றும் வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

10

வாட்ஸ்ஆப் செயலியானது தற்சமயம் வரை சுமார் 109 நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது உலகில் சுமார் 55.6% ஆகும். இச்செயலியை சுமார் 100 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர் என்பதோடு இந்தியாவில் மட்டும் சுமார் 7 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக சமீபத்தில் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
'WhatsApp Gold' Tricksters users to download malware. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்