100 கோடி சாதனை வாட்ஸ்ஆப் ஜிமெயில் அதிரடி.!!

By Meganathan
|

ஃபேஸ்புக் மற்றும் கூகுள் ஒரே நேரத்தில் புதிய சாதனை படைத்துள்ளனர். கூகுள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் சேவைகளை உலகளவில் தற்சமயம் சுமார் 100 கோடி பேர் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 கோடி சாதனை வாட்ஸ்ஆப் ஜிமெயில் அதிரடி.!!

இந்த இரு செய்திகளும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. கூகுள் சாதனை அந்நிறுவனத்தின் நான்காவது காலாண்டு அறிக்கை வெளியீட்டின் போது அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சில நிமிடங்கள் கழித்து வாட்ஸ்ஆப் சாதனை அறிவிக்கப்பட்டது.

100 கோடி சாதனை வாட்ஸ்ஆப் ஜிமெயில் அதிரடி.!!

இந்த சாதனையில் ஆச்சர்யப்பட எதுவும் இல்லை என்றாலும் இரு சேவைகளும் ஒரே சமயத்தில் புதிய மைல்கல்லை எட்டியிருப்பதோடு இரு சேவைகள் குறித்த விரிவான தகவல்கள் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த தகவல்களும் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

100 கோடி சாதனை வாட்ஸ்ஆப் ஜிமெயில் அதிரடி.!!

புதிய சாதனை புரிந்தமைக்கு வாட்ஸ்ஆப் நிறுவனர்களான ஜான் கௌம் மற்றும் ப்ரியான் ஆக்டன் ஆகிய இருவரையும் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்க சூக்கர்பர்க் பாராட்டு தெரிவித்தார். புதிய சாதனையை தொடர்ந்து வணிக ரீதியாக மக்கள் தொடர்பு கொள்ளும் முறையை எளிமையாக்கும் சேவைகளை வழங்கும் பணிகளில் ஈடுப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.

100 கோடி சாதனை வாட்ஸ்ஆப் ஜிமெயில் அதிரடி.!!

2004 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஜிமெயில் சேவை 100 கோடி பயனர்களை பெற நிறைய கால அவகாசம் எடுத்து கொண்டாலும் அந்நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு, க்ரோம், யூட்யூப், மேப்ஸ், சர்ச் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோர் போன்ற சேவைகளை ஏற்கனவே 100 கோடிக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
WhatsApp and Gmail top 1 billion users Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X