அழித்தாலும் அழியாது : இது வாட்ஸ்ஆப் அட்டகாசம்!

Written By:

ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் முழுமையான என்க்ரிப்ஷன் வழங்கி பயனர்களின் குறுந்தகவல்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கியது. இதன் மூலம் முழுமையான என்க்ரிப்ஷன் வழங்கும் சில நிறுவனங்களின் பட்டியலில் இணைந்தது.

புதிய அப்டேட் மூலம் அவ்வப்போது அமைதியாக அம்சங்களை வழங்கி வரும் வாட்ஸ்ஆப் செயலியில் பாதுகாப்பு கோளாறுகள் இருப்பதாக சைபர் செக்யூரிட்டி வல்லுநர் தெரிவித்துள்ளார்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஐஒஎஸ் நிபுணர்

'வாட்ஸ்ஆப் செயலியில் பயனர்கள் அழிக்கும் குறுந்தகவல்கள் உண்மையில் அழியாது, என ஐஒஎஸ் நிபுணர் ஜொனாதன் சியார்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஆப்ஷன்

இதோடு செயலியின் அனைத்து குறுந்தகவல்களையும் கிளியர் ஆல் சாட்ஸ் 'Clear All Chats' ஆப்ஷன் பயன்படுத்தி அழித்தாலும் அவை முழுமையாக அழியாது, முழுமையாக அழிக்க ஒரே வழி வாட்ஸ்ஆப் செயலியை அன் இன்ஸ்டால் செய்வது மட்டும் தான் என்றும் ஜொனாதன் குறிப்பிட்டுள்ளார்.

டேட்டாபேஸ்

இதனை உறுதி செய்ய வாட்ஸ்ஆப் செயலியில் குறுந்தகவல்களை ஆர்ச்சீவ், கிளியர், டெலீட் மற்றும் கிளியர் ஆல் சாட்ஸ் செய்து குறுந்தகவல்களை பேக்கப் செய்யப்பட்டது. பேக்கப் செய்ததில் செயலியில் இருந்த அனைத்து குறுந்தகவல்களும் டேட்டாபேஸில் இருந்தது.

பேக்கப்

குறுந்தகவல்களை அழிக்கப் பயன்படுத்தப்பட்ட அனைத்து ஆப்ஷன்களும் ஒரே மாதிரி தான் வேலை செய்தது, இதற்கு வாட்ஸ்ஆப் காரணம் இல்லை, உண்மையில் வாட்ஸ்ஆப் உங்களது அனைத்துத் தரவுகளை அழித்து விடும் என்றும் அவர் தெரிவித்தார்.

எஸ்கியூ லைட்

வாட்ஸ்ஆப் அனைத்துத் தரவுகளின் தகவல்களை மீட்கக் கூடிய வகையில் விட்டு விடுகின்றது. இது எஸ்கியூ லைட் 'SQLite' சேவையைப் பயன்படுத்தும் போது ஏற்படும் பிரச்சனை தான் என்றும் ஜொனாதன் விளக்கினார்.

அழித்தல்

ஐஒஎஸ் இயங்குதளங்களில் எஸ்கியூ லைட் 'SQLite' சாதாரணமாகவே தகவல்களை அழிக்காது. ஒரு தகவல் அழிக்கப்படும் போது அவை இலவச பட்டியல் என்ற புதிய பக்கத்தில் சேர்க்கப்பட்டு விடும்.

பாதிப்பு

இந்தப் பிரச்சனை ஐஒஎஸ் இயங்குதளங்களை மட்டும் தான் பாதிக்கும் என்றாலும் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தும் போது கவனமாக இருத்தல் அவசியம் ஆகும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
WhatsApp chats never get deleted actually Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்