இந்தியாவில் வாட்ஸ்ஆப் செயலிக்கு தடை.!?

Written By:

ஸ்மார்ட்போனில் குறுந்தகவல் அனுப்ப பெரும்பாலானோர் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ்ஆப் இருக்கின்றது. இந்தியாவில் மட்டும் சுமார் 7 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதோடு வாட்ஸ்ஆப் பயனர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் வாட்ஸ்ஆப் செயலியானது சமீபத்தில் முழுமையான என்க்ரிப்ஷன் சேவையை சில தினங்களுக்கு முன் அறிவித்தது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் அனைத்து குறுந்தகவல்களும் முழுவதுமாக பாதுகாக்கப்படுகின்றது.

வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் புதிய என்க்ரிப்ஷன் சேவை வழங்கப்பட்டது முதல் இந்த செயலி இந்தியாவில் தடை செய்யப்படுவது குறித்து ஏராளமான தகவல்கள் இணையத்தில் உலவி வருகின்றது. உண்மையில் வாட்ஸ்ஆப் இந்தியாவில் தடை செய்யப்படுமா, இல்லையா.? உண்மை நிலை ஸ்லைடர்களில்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சிக்னல் ப்ரோடோகால்

சிக்னல் ப்ரோடோகால் எனும் முறையை பயன்படுத்தும் இந்த என்க்ரிப்ஷன் ராணுவ தகவல் பறிமாற்றங்களை போன்ற பாதுகாப்பை வழங்கும். இவ்வகை பாதுகாப்பே தற்சமயம் பிரச்சனையை கிளப்பி இருக்கின்றது.

பயன்பாடு

இந்தளவு உயரிய பாதுகாப்பு கொண்டு சட்ட விரோத நடவடிக்கைகளுக்காக தகவல் பரிமாற்றம் செய்யப்படும் போது அரசாங்கத்திற்கு தெரியாது. இதனால் எந்நேரமும் ஆபத்து நிகழ வழி செய்வதாகி விடும்.

அரசு

இந்திய அரசு சட்டத்திட்டங்களின் படி இண்டர்நெட் சர்வீஸ் வழங்கும் (ISP Internet Service Provider) சேவைகளுக்கு அதிகபட்சம் 40-பிட் வரை என்க்ரிப்ஷன் செய்ய அனுமதியளிக்கப்படுகின்றது. இதற்கும் முறையான அனுமதி பெற்றிருத்தல் அவசியம் ஆகும்.

ஒழுங்கு

எனினும் வாட்ஸ்ஆப் நிலையை பொருத்த வரை ஸ்கைப், வைபர், கூகுள் ஹேங் அவுட் போன்ற சேவைகள் ஓவர் தி டாப் (OTP Over The Top)சேவைகளுக்கு கீழ் வரும் என்பதால் இவைகளுக்கு அதிகபட்ச குறுக்கீடுகள் கிடையாது.

தெளிவு

முறையான தெளிவு இல்லாததால் வாட்ஸ்ஆப் அறிவித்திருக்கும் 256-பிட் என்க்ரிப்ஷன் சேவையானது இன்று வரை சட்டப்படி செல்லுபடியாகும் என்றே கூற வேண்டும்.

முடிவு

எனினும் இது போன்ற சேவைகளின் என்க்ரிப்ஷன் சார்ந்து அரசாங்கம் ஏதேனும் புதிய முடிவு எடுக்கும் பட்சத்தில் இந்நிறுவனங்களுக்கு நெருக்கடி நிலை ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.

சட்டம்

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69வது பிரிவில் மத்திய அல்லது மாநில அரசாங்கம் நினைத்தால் தகவல்களை கண்கானித்தல் அல்லது இடைமறிக்கவோ அதிகாரம் இருக்கின்றது எனினும் இச்சட்டம் வாட்ஸ்ஆப் செயலிக்கு பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.

முடிவு

இதனால் தற்சமயம் வரை அரசாங்கும் டிஜிட்டல் தகவல் பரிமாற்றத்தில் தகவல்களை கண்கானிக்க புதிய சட்டம் இயற்றப்படுமா என்பது கேள்வி குறியாகவே இருக்கின்றது.

நிலை

இது போன்ற புதிய தொழில்நுட்ப சேவைகளின் மூலம் நன்மை மற்றும் தீமை என இரண்டும் இருக்கத் தான் செய்கின்றது என்றாலும் இன்றைய தேதியில் வாட்ஸ்ஆப் சேவை இந்தியாவில் சட்டப்பூர்வமானது.

மாற்றம்

எதிர்காலத்தில், இந்த நிலையில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால் நிச்சயம் நெட் நியூட்ராலிட்டி சேவைக்கு ஏற்பட்டதை போன்ற விவாதங்கள் நடத்தப்பட்டு அதன் பின் முடிவு எட்டப்படும்.

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Whatsapp ban in India all you need to know Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்