'யாராலும் ஊடுறுவ முடியாது' பாதுகாப்பு வளையத்தில் வாட்ஸ்ஆப்.!!

Written By:

உலகம் முழுக்க சுமார் 100 கோடி பேர் பயன்படுத்தி வரும் வாட்ஸ்ஆப் செயலி ஆண்ட்ராய்டு, ஐபோன், ப்ளாக்பெரி மற்றும் இதர இயங்குதளங்கிலும் என்க்ரிப்ட் எனப்படும் மறையாக்கம் வசதி முழுமையாக பெற்று விட்டது.

பாதுகாப்பு காரணம் குறித்து வருந்துவோருக்கு இது நற்செய்தியாகும். புதிய வசதியின் மூலம் வாட்ஸ்ஆப் குறுந்தகவல்கள் முழுமையாக பாதுகாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

பாதுகாப்பு

புதிய வசதியின் மூலம் வாட்ஸ்ஆப் செயலியில் ஒருவர் அனுப்பிய குறுந்தகவல் யாருக்கு அனுப்பப்பட்டதோ அவரால் மட்டும் தான் குறுந்தகவலை பார்க்க முடியும். இதன் மூலம் அனைத்து குறுந்தகவல்களும் பாதுகாக்கப்படுகின்றது.

உறுதி

புதிய மறையாக்கம் வசதி சார்ந்த தகவல்கள் வாட்ஸ்ஆப் இணை நிறுவனர்கள் ஜான் கௌம் மற்றும் ப்ரியான் ஆக்டன் வலைப்பக்கத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கட்டுப்பாடு

இது போன்ற மறையாக்க வசதியின் மூலம் குறுந்தகவல் அனுப்புவோர் மற்றும் பெறுவர் மட்டுமே பார்க்க முடியும். இதனால் மற்ற அரசாங்கம் மற்றும் அமெரிக்க நிறுவனங்களால் கூட வாட்ஸ்ஆப் குறுந்தகவல்களை பார்க்க முடியாது.

எதிர்ப்பு

இது போன்ற பாதுகாப்பு சேவைகளுக்கு தடை விதிக்க வேண்டும் அல்லது பின்புற வழியமைக்க வேண்டும் என இங்கிலாந்தில் ஏற்கனவே எதிர்ப்பு குரல் எழுப்பப்பட்டு வருகின்றது.

துவக்கம்

இந்த மறையாக்க சேவைானது வாடிக்கையாளர்களுக்கு முழுமையான தனிப்பட்ட தகவல் தொடர்பினை வழங்கும் என வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
WhatsApp announces end-to-end encryption on Android and other OS Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்