எடிட் & ரீவோக் : வாட்ஸ்ஆப் பயனர்களின் "கனவு" அம்சங்கள், விரைவில்.!?

ஆரம்பித்த நாளில் இருந்து ஒரே மாதிரியாக இருந்தால் ஒன்று பயணர்களுக்கு "போர்" அடித்துவிடும் அல்லது போட்டியாளர்கள் தூக்கி சாப்பிட்டு விடுவார்கள்.

Written By:

"முன்னேற வேண்டுமென்றால் அனுதினமும் ஏதாவது ஒன்றை செய்துகொண்டே இருக்க வேண்டும்" என்ற ஒற்றை வெற்றி வாசகத்தை அப்படியே பின்பற்றும் நிறுவனமாக வாட்ஸ்ஆப் திகழ்கிறது. ஆரம்பித்த நாளில் இருந்து ஒரே மாதிரியாக இருந்தால் ஒன்று பயணர்களுக்கு "போர்" அடித்துவிடும் அல்லது போட்டியாளர்கள் தூக்கி சாப்பிட்டு விடுவார்கள்.

இதை நன்கு அறிந்த வாட்ஸ்ஆப் தன் பயனர்களுக்கு என்னென்ன அம்சங்களை வழங்கலாம் என்பதை தெளிந்து ஆராய்ந்து வழங்குவதில் கில்லாடியாகும். அதனால் தான் ஆரம்ப நாட்களில் இருந்து இன்றுவரை வாட்ஸ்ஆப் நிலைத்து நிற்கிறது. அப்படியாக வாட்ஸ்ஆப்பின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் வெர்ஷன்களில் விரைவில் அறிமுகமாகி அசத்தப்போகும் புதிய அம்சங்கள் இவைகளாக இருக்கலாம் என்ற தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. அதை பற்றிய விரிவான தொகுப்பே இது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

சோதனை

வாட்ஸ்ஆப் அதன் ஐபோன் பீட்டா பதிப்பில் ஒரு புதிய அம்சத்தை அதாவது அனுப்பிய மெசேஜை திரும்ப பெறும் (ரீவோக்) மற்றும் எடிட் செய்யும் அம்சம் சோதனை செய்யப்பட்டு வருகிறது என்ற தகவல்கள் கசிந்தன இப்போது அதே அம்சங்கள் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பிலும் சோதனை செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது.

ஆண்ட்ராய்டு பீட்டா

அனுப்பிய செய்தியை ரீவோக் அல்லது ரீகால் செய்யும் அம்சம் மற்றும் எடிட் செய்யும் அம்சம் ஆனது டீபால்ட் அம்சமாக ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் இடம் பெறாது. இதை பெற ரூட் செய்யப்பட்ட கருவியில் கைமுறையாக இந்த அம்சங்களை எனேபிள் செய்ய வேண்டும் என்பது போல் இருக்கலாம்.

எடிட் மற்றும் ரீவோக்

@டபுள்யூஏபேட்டாஇன்போ (@WABetaInfo) தகவலின்படி ஆண்ட்ராய்டு பதிப்புகள் 2.17.25 மற்றும் 2.17.26 ஆகிய பதிப்புகளில் முறையே எடிட் மற்றும் ரீவோக் அம்சங்கள் வெளியாகலாம் என்று அறியப்படுகிறது.

ரீசிவர் பார்க்கும் முன்னர்

எடிட் அம்சம் என்பது நீங்கள் தவறாக டைப் செய்து அனுப்பிய மெசஜை மீண்டும் திருத்தி எடிட் செய்ய உதவும் மறுபக்கம் ரீவோக் அம்சமானது நீங்கள் அனுப்பிய மெசேஜை இல்லாமல் ஆக்க உதவும். எனினும், இந்த புதிய இரண்டு அம்சங்களும் ஒருவேளை அனுப்பட்ட மெசேஜ் ஆந்தை ரீசிவர் பார்க்கும் முன்னர் மட்டுமே வேலை செய்யும் வண்ணம் வடிவமைக்கப்படலாம்.

டெலிட்

தற்போது, வாட்ஸ்ஆப்பில் பயனர்கள் அவர்களின் சாதனத்தில் இருந்து மெசேஜ்களை டெலிட் செய்யும் அளவில் அம்சங்களை வழங்குகிறது ஆனால் டெலிட் செய்யப்பட்ட செய்திகளை பெறுநர் தொடர்ந்து பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. துரதிருஷ்டவசமாக, இந்த இரண்டு புதிய அம்சங்களும் எப்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கிடைக்கும் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதுமில்லை.

மறுவடிவமைப்பு

ஒரே நேரத்தில் 30 மீடியா (போட்டோ, வீடியோ) பைல்கள் அனுப்ப முடியும், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஸ்டோரேஜ் யூசேஜ் ஸ்க்ரீன், செய்திகளை வரிசைப்படுத்தும் திறன் உட்பட சமீபத்தில் ஐபோன் வாட்ஸ்ஆப் பயனர்கள் பல புதிய அம்சங்களின் மேம்படுத்தலை பெற்றுள்ளனர். இந்த அம்சங்கள் உட்பட புதிய எடிட் மற்றும் ரீவோக் அம்சங்கள் விரைவில் ஆண்ட்ராய்டு பதிப்புகளில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

ஸ்க்ரீன்ஷார்ட் செய்வதை பிறருக்கு வாட்ஸ்ஆப் காட்டிக்கொடுக்குமா.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
WhatsApp for Android Could Soon Let You Recall, Edit Messages After Sending Them. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்