வாட்ஸ்ஆப் செயலியில் புதிய அம்சம், உங்களுக்குப் பிடிக்குமா பாஸ்.??

Written By:

வாட்ஸ்ஆப் செயலி குறுந்தகவல் அனுப்புவோரின் பணத்தை மிச்சம் செய்து உலகெங்கும் தனக்கான இடத்தை நிரந்தரமாக பிடித்து விட்டது. இதோடு இல்லாமல் ஒவ்வொரு முறையும் பயனர்களை நினைவில் கொண்டு புது புது அம்சங்களை வழங்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.

இதுவரை எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு அம்சங்களில் ஒவ்வொன்றாக அந்நிறுவனம் புதிய அப்டேட் மூலம் வழங்கி வருகின்றது. அந்த வகையில் வாட்ஸ்ஆப் புதிய அம்சம் ஒன்றினை வழங்க இருப்பது தெரியவந்திருக்கின்றது. இது குறித்த விரிவான தகவல்கள் ஸ்லைடர்களில்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

பீட்டா

வாட்ஸ்ஆப் பீட்டா 2.16.242 பதிப்பில் புதிய அம்சம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. தற்சமயம் வரை இந்த அம்சம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோக்ள் ஜிஃப் வடிவில் மாறும்.

ஜிஃப்

இண்டர்நெட்டில் அதிகம் உலா வரும் ஜிஃப் என்பது அதாவது சில நொடி வீடியோ எனலாம். இது பார்க்க அனிமேஷன் போன்று இருக்கும். கண்டறியப்பட்டிருக்கும் புதிய அம்சம் வீடியோக்களை ஜிஃப் வடிவில் மாற்றும்.

பகிர்வு

ஆனால் தற்சமயம் வரை இந்த ஜிஃப்'களை மற்றவர்களுக்கு அனுப்ப முடியாது, மாறாக அனுப்பினாலும் அது புகைப்படம் அல்லது வீடியோ போன்றே காட்சியளிக்கும்.

இணையதளம்

வாட்ட்ஸ்ஆப் தளத்தின் புதிய அம்சம் முதலில் ஆண்ட்ராய்டு போலீஸ் எனும் இணையதளம் கண்டறிந்தது. வீடியோக்களை ஜிஃப் வடிவில் மாற்றுவது எப்படி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜிஃப் வசதி

முதலில் குறுந்தகவலில் இணைக்கப்பட்டுள்ள அதாவது அட்டாச்மென்ட் ஆப்ஷனினை கிளிக் செய்து கேமரா பயன்படுத்தி வீடியோ பதிவு செய்ய வேண்டும்.

வீடியோ

பின் வீடியோ ட்ரிம் செய்யும் இன்டர்ஃபேஸின் வீடியோ ஐகானினை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் வீடியோ ஜிஃப் வடிவில் மாற்றப்படும், இனி மாற்றப்பட்ட ஜிஃப் ஃபைலினை மற்றவர்களுக்கு அனுப்ப முடியும்.

அறிவிப்பு

வாட்ஸ்ஆப் செயலியில் ஜிஃப் வழங்குவது குறித்த அறிவிப்பு ஜூன் மாதம் கசிந்தது, எனினும் இந்த அம்சம் வெளியாவது மற்றும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கு வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் வழங்கப்படவில்லை.

வீடியோ காலிங்

வாட்ஸ்ஆப் செயலியின் வீடியோ காலிங் வசதி வெர்ஷன் 2.16.80 பீட்டா பதிப்பில் காணப்பட்டது. இந்த அம்சமும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

செயலி

தசற்சமயம் வரை வீடியோ காலிங் செய்யும் வசதிகள் ஃபேஸ்புக் மெசன்ஜர், வைபர், கூகுள் ஹேங் அவுட்ஸ், ஸ்னாப்சாட் போன்ற செயலிகளில் வழங்கப்பட்டுள்ளது.

அறிமுகம்

வாட்ஸ்ஆப் செயலியில் வாய்ஸ் மெயில், கால் பேக் போன்ற அம்சங்கள் சமீபத்தில் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
WhatsApp Android Beta shows GIF support is coming Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்