Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

என் பாஸ்வேர்டு உங்களுக்குத் தான் தெரியுமே!

Updated: Monday, March 25, 2013, 18:56 [IST]

what is your password if it is password  more chance to hack

யாஹூ ஈமெயில் உறுப்பினர்களது முகவரி மற்றும் ரகசிய குறியீடுகள் சமீபத்தில் திருடப்பட்டுவிட்டதாக ஒரு செய்தி பரபரப்பை உருவாக்கியது.

இந்த செய்தி என்னமோ பரபரப்பான ஒன்று தான். ஆனால் மக்கள் எந்த மாதிரியான பாய்வேர்டுகளை பயன்படுத்துகிறார்கள் என்பது கொஞ்சம் வேடிக்கையான விஷயமாகத்தான் இருக்கிறது.

மக்கள் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் வெகு சாதாரணமான ஒன்றாக இருக்கிறது. கிட்டத்தட்ட 4 லட்சத்தி 50 ஆயிரம் பாஸ்வேர்டுகள் திருடப்பட்டுள்ளது.

இவையனைத்தும் எந்த மாதிரியான பாஸ்வேர்கள் என்று பார்த்தால், பெரும்பாலான பாஸ்வேர்டுகள் 123456-ஆக இருக்கிறது என்று ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.

ஆம்! களவாடப்பட்ட பாஸ்வேர்டுகள் அனைத்தும் எளிதாக யூகித்து கண்டுபிடித்துவிடலாம். அந்த மாதிரியான பாஸ்வேர்டுகள் தான் திருடப்பட்டிருக்கின்றது.

நாம் தானே இந்த பாஸ்வேர்டை திறக்க போகிறோம் என்று எளிதாக 123456, வெல்கம், ஏபிசிடிஇஎஃப் என்று வேடிக்கையாக இருக்கும் வகையில் பலரது பாஸ்வேர்கள் இருக்கின்றது என்பது இசெட் என்ற பாதுகாப்பு நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தினம் புதிதாக முளைத்து கொண்டிருக்கும் ஹேக்கர்கள் மூலம் நிறைய ரகசியத் தகவல்கள் திருடப்பட்டு வருகிறது.

இன்னும் தெளிவாக, எத்தனை பேர் எந்த மாதிரியான பாஸ்வேர்டுகள் வைத்திருந்தனர் என்பதையும் பார்க்கலாம்.

123456 என்ற பாஸ்வேர்டு 0.38 சதவிகிதம் பேர் வைத்திருக்கின்றனர். வெல்கம் (welcome) என்ற பாஸ்வேர்டை 0.18 சதவிகிதம் பேரும் நின்ஜா (ninja) என்ற பாஸ்வேர்டை 0.08 சதவிகதம் பேரும் பயன்படுத்தியிருக்கின்றனர்.

ஏபிசி ஒன்டூத்ரீ (abc123) என்ற பாஸ்வேர்டு 0.06 சதவிகிதம் பேரும், 123456789 என்று வரிசையாக 1-னில் இருந்து ஆரம்பித்து 9 வரையிலும் சில பேர் பாஸ்வேர்டு வைத்திருக்கிறார்கள். இந்த 1 இருந்து 9 வரை எண்களை பாஸ்வேர்டாக 0.05 சதவிகிதம் பேர் பயன்படுத்தியிருக்கின்றனர்.

இது அல்லாமல் பிரின்சஸ் (princess) என்ற இந்த பாஸ்வேர்டு 202 பேரால் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் சில பேர் கியூவர்டி (qwerty) என்று எளிதாக கண்டு பிடிக்கும் வகையிலும் பாஸ்வேர்டுகள் வைத்திருக்கிறார்கள். கியூவர்டி என்ற பாஸ்வேர்டை 172 பேர் வைத்திருக்கின்றனர்.

இதில் இன்னும் ஒரு வேடிக்கையான விஷயம் என்வென்றால் பல பேர் பாஸ்வேர்டு என்ற வார்த்தையையே பாஸ்வேர்டாக வைத்திருக்கிறார்கள். இது போல் பாஸ்வேர்டு என்று 780 பேர் பாஸ்வேர்டு வைத்திருக்கிறார்கள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

இதனால் ஊர் பொது மக்களுக்கு சொல்வதென்னவென்றால் பாஸ்வேர்டு பயன்படுத்தும் அனைவரும் கண்டுபிடிக்க கடினமாக இருக்கும் வகையில் வைத்துக்கொள்வது நல்லது.

ஏனெனில் 123 போன்ற எளிதான பாஸ்வேர்கள் வைத்திருந்தால் ஹேக்கர்கள் மூலம் களவாடப்படும் பாஸ்வேர்டுகளில் முதலில் இது போன்ற எளிதான பாஸ்வேர்டுகள் தான் அடிபடும். அதனால் நமது பக்கம் நாம் ஸ்ட்ராங்கான பாஸ்வேர்டை வைத்திருப்பது சிறந்தது.

Story first published:  Tuesday, July 17, 2012, 13:49 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll