கூகுள் அசிஸ்டண்ட் அப்படியென்றால் என்ன, இதை எப்படிப் பயன்படுத்துவது?

By Meganathan
|

முதன் முதலில் கூகுள் I/O நிகழ்வில் 2016, மே மாதம் கூகுள் அசிஸ்டண்ட் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. மைக்ரோசாப்ட் கார்டணா, ஆப்பிள் சிரி மற்றும் அமேசான் அலெக்ஸா போன்ற சேவைகளுக்கு போட்டியளிக்கும் விதமாகக் கூகுள் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் சேவை தான் கூகுள் அசிஸ்டண்ட்.

கூகுள் அசிஸ்டண்ட் சேவையானது கூகுள் நௌ செயலியின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது. கூகுள் அசிஸ்டண்ட் சேவையென்றால் என்ன, இதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பார்ப்போமா?

விர்ச்சுவல் அசிஸ்டண்ட்

விர்ச்சுவல் அசிஸ்டண்ட்

தொழில்நுட்ப சந்தையில் விர்ச்சுவல் அசிஸ்டண்ட் சேவையை ஆப்பிள் நிறுவனம் 2011 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. ஆப்பிள் சிரி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தச் சேவை பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் வழங்கும்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

போட்டி

போட்டி

ஆப்பிள் நிறுவனத்துடன் போட்டியிடும் நோக்கில் கூகுள் நிறுவனம் கூகுள் நௌ சேவையை அறிமுகம் செய்தது. ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் வழங்கப்பட்டது.

உரையாடல்

உரையாடல்

கூகுள் அசிஸ்டண்ட் சேவையானது உரையாடல் வடிவில் இருக்கும் எனக் கூகுள் தெரிவித்துள்ளது. நீங்கள் கேட்கும் கேள்விகளுக்குக் கூகுள் பதில் அளிப்பதோடு, திரைப்பட டிக்கெட் முன்பதிவு, அருகாமையில் இருக்கும் உணவகம், போன்ற இடங்களைத் தேடி சரியாக வழி காட்டும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இது எப்படி வேலை செய்யும்

இது எப்படி வேலை செய்யும்

கூகுள் அசிஸ்டண்ட் சேவையானது உரையாடல் வடிவில் வேலை செய்யும் என்பதால் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும். கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியான தகவல்களுடன் உரையாடல்களைக் கவனித்து கூகுள் அசிஸ்டண்ட் பதில் வழங்கும். இது குறித்த அதிக தகவல்கள் இல்லையென்றாலும் கூகுள் அசிஸ்டண்ட் சேவையானது கூகுள் பிக்ஸல், கூகுள் ஹோம் மற்றும் கூகுள் அல்லோ போன்ற சேவைகளுக்கு வழங்கப்பட இருக்கின்றது

கூகுள் பிக்ஸல்

கூகுள் பிக்ஸல்

கூகுள் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த கூகுள் பிக்ஸல் மற்றும் பிக்ஸல் XL ஸ்மார்ட்போன்களில் கூகுள் அசிஸ்டண்ட் சேவை வழங்கப்பட்டுள்ளது. அசிஸ்டண்ட் இயந்திர கற்றல் முறைகளில் கூகுள் அல்லோ, கூகுள் குறுந்தகவல் ஆப் மற்றும் கூகுள் ஹோம் உள்ளிட்ட சேவைகளும் அடங்கும்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கூகுள் ஹோம்

கூகுள் ஹோம்

கூகுள் ஹோம் என்பது வை-பை ஸ்பீக்கர் ஆகும். இது ஒரு ஸ்மார்ட்ஹோம் கண்ட்ரோல் சென்டர் மையம் போன்று செயல்படும். இதைக் கொண்டு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ரசிக்க முடியும். இதோடு வீட்டின் பல்வேறு பணிகளையும் சிரமம் இன்றி மேற்கொள்ள முடியும்.

கூகுள் அல்லோ

கூகுள் அல்லோ

கூகுள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் சாட் ஆப் தான் கூகுள் அல்லோ. இந்தச் செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கின்றது. இதிலும் கூகுள் அசிஸ்டண்ட் சேவை வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
What is Google Assistant, how does it work Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X