ஐபோனில் தவறு செய்தால் என்னவாகும்..??

By Meganathan
|

உலகம் முழுக்க ஆப்பிள் நிறுவனம் மற்றும் ஐபோன்களுக்கான மவுசு தினமும் அதிகரித்து கொண்டே தான் இருக்கின்றது எனலாம். நம்ம ஊரில் ஐபோன் வைத்திருப்போருக்கு கிடைக்கும் மறியாதையே இதற்கு முக்கிய எடுத்து காட்டு ஆகும்.

கடன் வாங்கியாவது ஐபோன் வாங்கிடனும் என்றிருப்போருக்கும், கடன் வாங்கி ஐபோன் வாங்கியிருப்போர் என ஒட்டு மொத்த ஐபோன் பயனாளிகளும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் தான் இவை..

பாஸ்வேர்டு

ஐபோனில் தவறு செய்தால் என்னவாகும்..??

ஐபோன் கருவியை பாதுகாக்கும் வழிமுறைகளில் ஒன்று தான் 4 இலக்கு பாஸ்வேர்டு. இதை செட் செய்த பின் ஒவ்வொரு முறையும் பாஸ்வேர்டினை என்டர் செய்து போனினை அன்லாக் செய்யலாம். ஒரு வேலை பாஸ்வேர்டினை மறந்து விட்டால் வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகாக்கும் நோக்கில் ஐபோன் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

ஆறு முறை தவறான பாஸ்வேர்டு

ஐபோனில் தவறு செய்தால் என்னவாகும்..??

ஒரு வேலை உங்களது ஐபோன் கருவியில் ஆறு முறை தவறான பாஸ்வேர்டினை என்டர் செய்தால் ஐபோன் திரையில் ஐபோன் செயல் இழக்க செய்யப்பட்டுள்ளது "iPhone is Disabled" என்ற வார்த்தை சிவப்பு நிறத்தில் தெரியும். இந்த தகவல் கிடைத்தால் அடுத்த ஒரு நிமிடத்திற்கது பாஸ்வேர்டு என்டர் செய்ய முடியாது. ஒரு நிமிடம் முடிந்தவுடன் மீண்டும் பாஸ்வேர்டினை என்டர் செய்யலாம்.

டிசேபிள்டு

ஐபோனில் தவறு செய்தால் என்னவாகும்..??

பல முறை தவறான பாஸ்வேர்டினை என்டர் செய்த பின் ஐபோனின் திரையில் ஐபோன் செயல் இழக்க செய்யப்பட்டுள்ளது "iPhone is Disabled" மற்றும் கருவியை ஐட்யூன்ஸ் உடன் இணைக்க வேண்டும் "Connect to iTunes" என்ற தகவலும் தெரியும். இந்த தகவல் கிடைத்ததும் ஐபோன் தானாக ஸ்லிட்ச் ஆஃப் ஆகிவிடும், இதன் பின் பாஸ்வேர்டினை என்டர் செய்ய முடியாது.

ஐபோனில் தவறு செய்தால் என்னவாகும்..??

பாஸ்வேர்டினை மீட்க கருவியை ரீஸ்டோர் செய்வதை தவிற வேறு வழி கிடையாது. இதற்கு ஐபோனினை ஐட்யூன்ஸ் இன்ஸ்டால் செய்யப்பட்ட கருவியுடன் இணைக்க வேண்டும். குறிப்பாக ஐபோனினை சின்க் செய்ய பயன்படுத்தப்பட்ட கணினியுடன் இணைப்பது நல்லது.

ரீஸ்டோர்

ஐபோனில் தவறு செய்தால் என்னவாகும்..??

அடுத்து ஐபோனினை கணினியுடன் இணைத்து ஐட்யூன்ஸ் செயலியை ஓபன் செய்ய வேண்டும். ஐட்யூன்ஸ் இல் ஐபோன் ஆப்ஷனினை ரைட் க்ளிக் செய்து பேக்கப் ஆப்ஷனினை தேர்வு செய்ய வேண்டும். பேக்கப் முழுமையானவுடன் ரீஸ்டோர் ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.

ஐபோனில் தவறு செய்தால் என்னவாகும்..??

ரீஸ்டோர் ஆப்ஷனினை க்ளிக் செய்யும் போது பாஸ்வேர்டு என்டர் செய்ய வேண்டும் என்ற தகவல் கிடைத்தால் கருவியை கணினியில் இருந்து எடுத்து ஐபோனின் ஹோம் பட்டனை க்ளிக் செய்தவாறு கணினியில் இணைக்க வேண்டும், திரையில் கனெக்ட் டூ ஐட்யூன்ஸ் என்ற தகவல் கிடைக்கும் வரை ஹோம் பட்டனை தொடர்ந்து க்ளிக் செய்ய வேண்டும், அதன் பின் ரீஸ்டோர் ஆப்ஷனினை தேர்வு செய்யலாம்.

எச்சரிக்கை

ஐபோனில் தவறு செய்தால் என்னவாகும்..??


தவறான பாஸ்வேர்டு என்டர் செய்யும் போது தகவல்களை அழிக்க வேண்டும் என்ற ஆப்ஷன் ஐபோனில் தேர்வு செய்யப்பட்டிருந்தால் 10 முறை தவறான பாஸ்வேர்டு என்டர் செய்யும் போது ஐபோனில் இருக்கும் தகவல்கள் தானாக அழிக்கப்பட்டு விடும். ஒரு வேலை தகவல்கள் ஐக்ளவுடில் பேக்கப் செய்யப்பட்டிருந்தால் அதனினை மீட்க முடியும், மாறாக பேக்கப் செய்யப்படவில்லை எனில் தகவல்களை மீட்கவே முடியாது.

Best Mobiles in India

English summary
What Happens if You Enter Wrong Password In an iPhone Many Times. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X