நைட் மோட் அம்சம் : நிஜமாகவே பயனுள்ளதா.? இல்லை வெட்டி பந்தாவா.?

இப்போது அனைத்து வகையிலான ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படுகின்ற 'நைட் மோட்' என்கிற என்கிற வசதியினைப் பற்றிய விளக்கமும் அதன் பயன்பாடுகள் குறித்த பதிவு.

Written By:

முதன் முதலில் ஆப்பிள் ஐஓஎஸ் 9.3யில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நைட் மோட் என்கிற வசதியானது இப்போது பரவலாக அனைத்து வகையிலான ஸ்மார்ட்போன்களில் சேர்த்தே வெளியிடப்படுகிறது.

ஏனெனில் ஸ்மார்ட்போன்,கணினி உள்ளிட்டவைகளினாலே அதிகப்படியான கண் தொடர்பான பிரச்சனைகள் உருவாகின்றன.

இத்தகைய காரணங்களை வைத்துப்பார்க்கும் போது ஸ்மார்ட்போன் உபயோகிப்பாளர்களுக்கு பயனுள்ள ஒன்றா? என்பவன உள்ளிட்ட மேலதிக தகவல்கள் கீழே.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

நைட் மோட்:

இரவு நேரங்களுக்கு ஏற்ப ஸ்மாட்ர்போன்களின் திரையிலிருந்து வெளிப்படக்கூடிய ஒளியின் அடர்த்தியனை இரவு நேரங்களில் குறைத்து வழங்குவதற்காகவே இந்த வசதி.

பயனுள்ள ஒன்றா:

ஸ்மார்ட்போன்களில் பகலில் நாம் சுற்றுபுறவெளிச்சத்திற்கு ஏற்ப திரையின் ஒளி அளவினை வைத்திருப்போம்.இதுவே இரவு நேரங்களில் பெரும்பாலானோர் ஸ்மார்ட்போனாக்களுடனேயே உறங்குகின்றனர்.
அவ்வாறு ஸ்மார்ட்போன்களை மிகவும் குறைந்த தொலைவில் வைத்து அதிக நேரம் உற்றுநோக்குகையில் ஸ்மார்ட்போனிலிருந்து வெளிப்படும் ஒளியானது நமது கண்களை பாதிக்க வாய்ப்புள்ளது.
அதனை தடுக்க இந்த முறையினை பயன்படுத்துவதன் மூலம் திரை ஒளியின் அடர்த்தியானது குறையும் இதனால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பினை குறைக்கலாம்.

டீபால்ட்டாக ஆண்ட்ராய்டு நொவ்கட்டில்:

இந்த வசதியானது ஆண்ட்ராய்டு நொவ்கட்டில் டீபால்ட்டாகவே சேர்க்கப்பட்டுள்ளது.இதனைப் பயன்படுத்தி நாம் மொபைல் போன்களின் டிஸ்பிளே வழியாக வெளிப்படும் வண்ண ஒலிகளின் அடர்த்தியினையும் குறைத்துக்கொள்ளலாம்.மேலும்,மூன்றாம் தரப்பு செயலிகளும் இதற்காக உள்ளன.அவற்றையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

எப்படி உபயோகிப்பது:

நொவ்கட் வகையைச் சேர்ந்த ஸ்மார்ட்போன்களில் நீங்கள் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று டிஸ்பிளே>நைட் மோட் என்கிற ஆப்ஷன் வழியே செலக்ட் செய்து பயன்படுத்தலாம்.மேலும் நமக்கு தேவையான அளவு டிஸ்பிளே ஒளியின் அளவினை குறைத்துக்கொள்ளவும் இயலும்.

மூன்றாம் தரப்பு ஆப்ஸ்களும்:

இந்த வசதியானது இப்போது அனைத்துவகையிலான ஸ்மார்ட்போன்களில் உள்ளது.அப்படி இல்லையெனில் இந்த வசதிக்காக மூன்ற தரப்பு ஆப்ஸ்கள் நிறைய உள்ளன.அவற்றை இன்ஸ்டால் செய்தும் பயன்படுத்தலாம்.அதில் குறிப்பிடத் தகுந்தது ப்ளூலைட் பில்டர் என்பதாகும்.இவற்றை பயன்படுத்தி நாம் கண்களை பாதுகாப்போம்.

மேலும் படிக்க

இரகசியமான ஆன்லைன் உரையாடல்களில் ஈடுபடுபவர் நீங்கள்.? உஷார்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
What exactly is Night Mode and does it help smartphone users.Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்