'மாயமான' ஜப்பான் செயற்கைகோள், நடந்தது என்ன..??

|

ஹிடோமி ஆனது ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் ( Japan Aerospace Exploration Agency - JAXA) ஆய்வு விண்கலம் ஆகும். ஆஸ்ட்ரோ-எச் மற்றும் நியூ எக்ஸ்-ரே டெலஸ்கோப் என்றும் கூறப்படும் ஹிடோமி ஆனது பிரபஞ்சத்தில் உள்ள மிகவும் ஆற்றல் வாய்ந்த செயல்பாடுகளை (குறிப்பாக பிளாக்ஹோல் எனப்படும் கருங்குழிகள் ) ஆய்வு செய்யும் நோக்கம் கொண்டது.

இந்தாண்டு பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட ஹிடோமி ஆனது கடந்த மாதம் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து பிரிந்து மாயமானது. ஒரு மாத தேடல் மற்றும் ஆய்விற்கு பின்பு ஹிடோமிக்கு என்ன நேர்ந்தது என்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது..!

தொடர்பு :

தொடர்பு :

மார்ச் 26, 2016 அன்று ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் இருந்த தொடர்பு, கட்டுப்பாடு ஆகியவைகளை இழந்த ஹிடோமி தான் ஜப்பானின் பெரிய அளவிலான செலவு செய்யப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்ட விண்கலம் ஆகும்.

உருவாக்கம் :

உருவாக்கம் :

சுமார் 273 மில்லியன் டாலர்கள் செலவில் உருவாக்கம் பெற்ற ஹிடோமி ஆனது குறிப்பாக விண்வெளியில் இருக்கும் பிளாக் ஹோல்களை ஆராயவே செலுத்தப்பட்டது.

திரும்ப பெற முடியாத நிலை :

திரும்ப பெற முடியாத நிலை :

ஒரு மாத காலமாய் கட்டுப்பாடு இன்றி விண்வெளியில் திரிந்து கொண்டிருந்த ஹிடோமி திரும்ப பெற முடியாத நிலைக்குள் சென்று விட்டது என்பது, தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

இழப்பு :

இழப்பு :

ஹிடோமி ஆனது ஜப்பானுக்கு திரும்ப பெற கிடைக்காது என்கிறபோதும், இந்த இழப்பு எதனால் ஏற்பட்டது என்ற விளக்கத்தை ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் அளித்துள்ளது.

பிரச்சனைகள் :

பிரச்சனைகள் :

ஹிடோமி, விண்ணில் செலுத்தப்பட்ட உடனே அதில் சாத்தியமான செயற்கைகோள் பிரச்சனைகள் இருப்பதை உணர்ந்ததாக ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.

சிஸ்டம் எரர் :

சிஸ்டம் எரர் :

மேலும் ஹிடோமி ஆனது எந்த விதமான மோதலிலும் அல்லது தவறான உந்து சக்தி மூலம் இழக்கப்படவில்லை என்று ஊகிக்கப்படுகிறது, சிஸ்டம் எரர் (System
error) அதாவது மென்பொருள் மற்றும் மனிதப்பிழை தான் ஹிடோமி இழப்பிற்கு காரணம் ஆகும் என்றும் தெரிவித்துள்ளது.

பிரிந்து விழுந்துவிட்டது :

பிரிந்து விழுந்துவிட்டது :

எல்லாவற்றையும் விட மோசமாக ஹிடோமியின் இருபக்கமும் பொருத்தப்பட்டிருந்த சோலார் பேனல்கள் ஆனது ஏவு தளத்திலேயே பிரிந்து விழுந்துவிட்டது.

முதன்மையான ஆற்றல் :

முதன்மையான ஆற்றல் :

சூரிய சக்தியை பெரும் ஹிடோமியின் முதன்மையான ஆற்றல் மூலமே இழக்கப்பட்டுவிட்டது, என்கிற நிலையில் சத்தியமான சிக்கல் ஆனது ஏவு தளத்திலேயே உணரப்பட்டுவிட்டது என்று ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் விளக்கம் தெரிவித்துள்ளது.

நம்பிக்கை :

நம்பிக்கை :

முதலில் ஹிடோமியிடம் இருந்து சில விசித்திரமான மற்றும் ஒழுங்கான செய்திகளை ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பிய போது, ஆராய்ச்சியாளர்கள் சிறிய அளவு சேதம் என்று தான் நம்பினர்.

ஏமாற்றம் :

ஏமாற்றம் :

செயற்கைகோளை பிளாக் ஹோல்கள் சார்ந்த கண்காணிப்பு ஆய்வுப்பாதையில் செலுத்த வழியை கண்டுப்பிடிக்க வேண்டும் என்று போராடிய ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுனத்திற்கு ஏமாற்றம் தான் மிச்சம்.

முரண்பாடான தடயங்கள்:

முரண்பாடான தடயங்கள்:

செயற்கைகோள் இழப்பிற்கு ஜப்பான் பொறுப்பேற்றுக் கொண்டாலும் கூட அதில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலில் இருந்து முரண்பாடான தடயங்கள் ஏதேனும் கிடைக்கிறதா என்பதையும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் கூர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கிறது.

 வெவ்வேறு அலைவரிசை :

வெவ்வேறு அலைவரிசை :

ஏனெனில் கிடைக்கப்பெற்ற தகவல் அனைத்துமே சற்று வெவ்வேறு அலைவரிசைகளில் இருந்து வந்துள்ளது சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

பிளாக்ஹோல் விளைவுகள் : உயிரினங்கள் 'கிழிந்து அல்லது 'எரிந்து' சாகும்..!


2 மணி நேரம் பூமியின் காந்தப்புலம் 'செயலிழந்தது' உண்மையா..?!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
We Finally Know What Happened to Japan's Lost Black Hole Satellite. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X