வோடபோன் வழங்கும் புதிய வாய்ப்பு : ஒரே ரீசார்ஜில் இரட்டிப்பு நன்மைகள்.!

ஏர்டெல், வோடபோன் இந்தியா ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து வோடபோன் அதன் அனைத்து 4ஜி திட்டத்திலும் இரண்டு அளவிலான தரவை வழங்கத் தொடங்கியுள்ளது.

Written By:

"எல்லாம் அவன் செயல்" என்பது போல இந்திய தொலைத்தொடர்பு துறையில் நடக்கும் புரட்சிக்கும், விலை குறைப்பிற்கும், இலவசங்களுக்கும், புதிய சலுகைகளுக்கும் காரணம் - ரிலையன்ஸ் ஜியோ தான்.!

ஏர்டெல் போன்ற இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் தொடங்கி இந்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனம் வரை அனைத்துமே ஜியோவுடன் போட்டியிடும் நோக்கத்திலும் முக்கியமாக இருக்கும் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ளவும் விலைக்குறைப்பையும், புதிய சலுகைகளையும் வழங்கியே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன.

அப்படியான ஒரு நிலைபாட்டிற்குள் வோடோபோன் இந்தியா நிறுவனமும் உள்ளது. அந்நிறுவனம் பல அதிரடி சலுகைகளை ஏற்கனவே வெளியிட்ட நிலையில் இப்பொது புதிய 4ஜி சலுகை ஒன்றை வெளிப்படுத்தியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

அவசியம்

(நினைவூட்டும் வண்ணம், வோடாபோனின் ப்ளெக்ஸ் ரீசார்ஜ் மூலம் 1 ப்ளெக்ஸ் என்பது 1எம்பி அளவிலான டேட்டா அலல்து ஒரு நிமிட உள்வரும் அழைப்புகளுக்கு சமம்) தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய சலுகைகளை அனுபவிக்க ரூ.255/-க்கும் மேலான ரீசார்ஜ் செய்ய வேண்டியது அவசியம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வரவு

உடன் முன்பு கூறியது போல, இந்த புதிய சலுகையின் மூலம் பயனர்கள் நிகழ்த்தும் ஒவ்வொரு 4ஜி டேட்டா ரீசார்ஜ் மூலமாக இரண்டு அளவிலான தரவு கிடைக்கும். அதாவது நீங்கள் 1ஜிபி தரவு பேக் ரீசார்ஜ் செய்தல் உங்கள் கணக்கில் 2ஜிபி டேட்டா வரவு வைக்கப்படும்.

மட்டுமே

இந்த புதிய வாய்ப்பானது ரூ.255/-க்கு மேலே ரீசார்ஜ் செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது முக்கியமாக கவனிக்கக்கூடிய விடயமாக இருக்கிறது. எனவே, 1ஜிபி அளவு டேட்டா என்று தொடங்கும் திட்டத்தில் இருந்து இந்த வாய்ப்பை பெற முடியும்.

செல்லுபடி

வாய்ப்பின் கீழ் கொடுக்கப்படும் இரண்டாம் அளவிலான தரவுக்கும் திட்ட நன்மைகளுக்கு வழங்கபப்டும் அதே வழக்கமான செல்லுபடி நாட்களுக்குள் முடியும். எனவே, அனைத்து ரீசார்ஜகளும் நிகழ்த்தப்பட்ட தேதியிலிருந்து 28 நாட்கள் செல்லுபடியாகும்.

மேலும் படிக்க

இப்போ வா போட்டி போடலாம், கொக்கரிக்கும் ரூ.53/- ஆபர் வழங்கும் வோடபோன்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!Read more about:
English summary
Vodafone Started Offering Double Data Benefits on All the 4G Recharges. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்