சிம் அப்கிரேடு செய்தால் 2ஜிபி டேட்டா இலவசம்.!!

வெறும் சிம் அப்கிரேடு மட்டும் செய்தால் 2 ஜிபி டேட்டா கிடைக்குமா என யோசிக்க வேண்டாம். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பாருங்கள்..

Written By:

ரிலையன்ஸ் ஜியோ ஏற்படுத்திய பாதிப்பில் வோடபோன் கடுமையான போட்டியை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் வோடபோன் தனது வாடிக்கையாளர்களுக்குப் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.

பதிய வோடபோன் சலுகையானது தமிழ் நாடு, மும்பை, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சலுகையைப் பெறும் வழிமுறைகள் மற்றும் விதிமுறைகளை இங்குப் பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சூப்பர்நெட்

வோடபோன் சேவையின் சூப்பர்நெட் 4ஜி (SuperNet 4G) சேவைக்கு அப்கிரேடு செய்யும் அனைத்துப் பயனர்களுக்கும் 2ஜிபி இலவச டேட்டாவினை வோடபோன் வழங்குகிறது. புதிய 4ஜி சிம் கார்டுகள் அனைத்து வோடபோன் ஸ்டோர், வோடபோன் மினி ஸ்டோர் மற்றும் மல்டி-பிரான்டு விற்பனை நிலையங்களில் கிடைக்கிறது என வோடபோன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிப்பு

ரிலையன்ஸ் ஜியோ வரவிற்குப் பின் பாரதி ஏர்டெல் நிறுவனத்தை விட வோடபோன் அதிகளவு பாதிக்கப்படலாம் என ஆய்வு அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பிரீபெயிட்

வோடபோன் வழங்கும் 2ஜிபி டேட்டா பிரீபெயிட் பயனர்கள் 10 நாட்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும். போஸ்ட்பெயிட் பயனர்கள் இந்தச் சலுகையினை அடுத்த மாத கட்டணம் செலுத்தும் தேதி வரை பெற முடியும் எனத் தெரிவித்துள்ளது. 4ஜி சேவை இல்லாத வட்டாரங்களில் 3ஜி வேகம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுகம்

வோடபோன் நிறுவனத்தின் 4ஜி சேவைகள் கேரளா, கொல்கத்தா, கர்நாடகா, தில்லி, மும்பை, குஜராத், ஹர்யானா, கிழக்கு உத்திர பிரதேசம் போன்ற இடங்களில் வழங்கப்படுகிறது. இந்த நிதியாண்டிற்குள் சுமார் 2400 நகரங்களில் வோடபோன் 4ஜி சேவைகளை அறிமுகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

வட்டாரம்

வோடபோன் 4ஜி சேவைகள் தமிழ் நாடு, பஞ்சாப், ஒடிஷா, மேற்கு உத்திர பிரதேசம், கோவா, அஸ்ஸாம் உள்ளிட்ட பகுதிகளில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Vodafone Offers 2GB Free Data With SIM Upgrade
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்