1ஜிபி விலைக்கு 10ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன்!

Written By:

ரிலையன்ஸ் ஜியோவுடனான போட்டி காரணமாக பல்வேறு நிறுவனங்களும் தங்களது சேவைக் கட்டணங்களை குறைப்பது தொடர் கதையாகி விட்டது. என்றாலும் சோர்வடையாமல் தனக்கு இருக்கும் பயனர்களை காப்பாற்றிக் கொள்ள வோடபோன் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது அப்படமாகத் தெரிகின்றது.

தனது பயனர்களை கவரும் முயற்சியில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து வரும் வோடபோன், புதிய டேட்டா பேக் திட்டங்களை அறிவித்துள்ளது. புதிய திட்டத்தில் வழங்கப்படும் சேவைகள் பின்வருமாறு..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

டேட்டா அளவு

வோடபோன் நிறுவனத்தின் புதிய டேட்டா பேக் திட்டங்களில் பயனர்கள் புதிய 4ஜி கருவியுடன் இணைந்து 10ஜிபி வரையிலான டேட்டா சேவைகளை 1ஜிபிக்கு செலவில் பெற முடியும். இந்தச் சேவையினை பயனர்கள் மூன்று மாதங்களுக்குப் பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

4ஜி கருவி

வோடபோன் தெரிவித்திருக்கும் புதிய 4ஜி கருவி என்பது கடந்த ஆறு மாதங்களில் வோடபோன் நெட்வர்க் பயன்படுத்தாத கருவி ஆகும்.

சூப்பர்நெட்

வோடபோன் சூப்பர்நெட் திட்டத்தின் படி பயனர்கள் 1ஜிபி சேவைக்கான கட்டணத்தை மட்டும் செலுத்தி சுமார் 9 ஜிபி வரை கூடுதல் டேட்டாவினை பெற முடியும். இதனால் புதிய 4ஜி கருவியின் மூலம் பயனர்கள் 10ஜிபி டேட்டாவினை மூன்று மாதங்களுக்கு 1ஜிபி டேட்டா கட்டணத்தில் பெற முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வட்டாரம்

இந்தச் சலுகையானது வோடபோன் தனது சொந்தமான 3ஜி அல்லது 4ஜி சேவைகளை வழங்கும் வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுவதோடு, அனைத்து பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்கள் டிசம்பர் 31 ஆம் தேதி வரை பெற முடியும்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சிறப்பு

தில்லி, மும்பை மற்றும் கொல்கத்தா வட்டாரங்களில் தேர்வு செய்யப்பட்ட சந்தா தாரர்களால் கூடுதலாக 9 ஜிபி வரை டேட்டாவினை பெற முடியும். இதற்குப் பயனர்கள் 1 ஜிபி அல்லது அதற்கும் அதிகமான டேட்டா பேக்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். கூடுதல் டேட்டாவனது 4ஜி நெட்வர்க்களில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற வட்டாரங்கள்

தமிழ் நாடு, கேரளா, மகாராஷ்ட்ரா, கோவா, அத்திர பிரதேசம் (மேற்கு), உத்திர பிரதேசம் (கிழக்கு), ஹர்யானா, கர்நாடகா, அஸ்ஸாம், குஜராத், மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் பயனர்கள் கூடுதலான 9 ஜிபி டேட்டாவினை 3ஜி வேகத்தில் பெற முடியும் என்றும் இந்த டேட்டா அதிகாலை 12.00 மணி முதல் காலை 6.00 மணி வரை மட்டுமே பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கும் 1ஜிபி அல்லது அதற்கும் அதிகமான டேட்டா பேக்களுக்கு ரீசார்ஜ் செய்வதோடு பயன்பாடு 4ஜி கருவிகளில் மட்டுமே வழங்கப்படுகின்றது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சேவை

1+9 ஜிபி டேட்டா வழங்கும் சிறப்பு சலுகையானது 1ஜிபி அல்லது அதற்கும் அதிகமான ரீசார்ஜ்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என வோடபோன் தெரிவித்துள்ளது. இதற்குக் குறைந்த பட்சம் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகின்றது.

இலவச சந்தா

மேலும் பல்வேறு சலுகைகளும் இணைக்கப்பட மாட்டாது என்றும் பயனர்களுக்கு வோடபோன் பிளே சேவையைப் பயன்படுத்த இலவச சந்தா வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பண்டிகை

"இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்குவதால் பயனர்கள் 4ஜி கருவிகளுக்கு மாற மிகப் பெரிய காரணத்தை வோடபோன் வழங்குகின்றது. இந்தச் சலுகையின் மூலம் புதிய 4ஜி ஸ்மார்ட்போன் பயனர்களை வோடபோன் சூப்பர்நெட் சேவையை அனுபவிக்க வழி செய்கின்றோம்," என வோடபோன் இந்தியா நிறுவனத்தின் சந்தீப் கட்டாரியா தெரிவித்துள்ளார்.

தேர்வு

பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் புதுப்புது சலுகைகளை வழங்குவதாக அறிவித்தாலும், இந்தியாவைப் பொருத்தவரை பயனர்களைக் கவரும் சிறப்பு சலுகைகளுக்கு மட்டுமே வரவேற்பு கிடைக்கும் என்பது உறுதி.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Vodafone Offers 10GB Data at Cost of 1GB Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்