ஏர்டெல், ஜியோவிற்கு நெருக்கடி : கூட்டணி அமைக்கிறது ஐடியா - வோடாபோன்.!

ஜியோவினால் தூண்டிவிடப்பட்ட கொடூரமான விலைப்போர் போட்டியில் நிலைக்கும் ஒரு முயற்சியாக இரண்டும் கூட்டு சேரவுள்ளதாய் தகவல் வெளியாகியுள்ளது

Written By:

பிரிட்டனின் வோடபோன் குழு மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய இரண்டு நிறுவனங்களும் புதிய போட்டியாளர் ஆன ரிலையன்ஸ் ஜியோவினால் தூண்டிவிடப்பட்ட கொடூரமான விலைப்போர் போட்டியில் நிலைக்கும் ஒரு முயற்சியாக இரண்டும் கூட்டு சேரவுள்ளதாய் தகவல் வெளியாகியுள்ளது.

இது நிகழ்ந்தால் ஏர்டெல் மற்றும் ஜியோவிற்கு எதிராய் இணைந்து வோடபோன்-ஐடியா குழு வியாபாரப்ப்பூர்வமாக அதிரடி கட்டண திட்டங்களை வகுக்கும் என்பதில் சந்தேகமில்லை. சட்டப்பூர்வமாக கிட்டத்தட்ட 400 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள இந்நிறுவனங்களும் கூட்டணி அமைத்தால் மேலும் திறம்பட போட்டியை நிகழ்த்தலாம் மற்றும் அதிக சவால்களை வழங்கலாம் என்று ஐடியா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளாது.

இந்திய மொபைல் தொழிலில் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகமானது ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்ததை நாம் அறிவோம். இந்தியாவின் பணக்கார தொழிலதிபர் ஆன முகேஷ் அம்பானியால் 20 டாலர்கள் பில்லியன் செலவில் கட்டப்பட்ட புதிய 4ஜி மொபைல் பிராட்பேண்ட் நெட்வொர்க்கின் வெளியீடு கடந்த ஆண்டு ஏர்டெல், ஐடியா, வோடாபோன் ஆகிய நிறுவனங்களுக்கு மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதையும் நாம் அறிவோம்.

இதனால் கட்டண சலுகையில் விலைக்குறைப்பு மற்றும் திருத்தங்கள் ஏற்பட்டு வந்த நிலையில் இப்போது ஐடியா - வோடாபோன் கூட்டணி வைத்துக்கொள்ளப்போவதாய் வெளியாகியுள்ளன தகவல் வாடிக்கையாளர்கள் யாரும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாகவே உள்ளது. இந்த கூட்டணியானது என்னென்ன சலுகைகளையும் இணைப்பு புள்ளி வசதிகளையும் வழங்கவுள்ளது என்பதை பொறுத்திருந்துதான் காண வேண்டும்.

மேலும் படிக்க
இந்திய டெலிகாம் நிறுவனங்களிடம் இரண்டாவது முறையும் ஏமாறக்கூடாது.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Vodafone, Idea Merger To Create New Market Leader, Displacing Airtel. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்