மீண்டும் குறைக்கப்பட்ட விலையில் டேட்டா திட்டங்கள் : வோடபோன் அறிவிப்பு.!

By Meganathan
|

ரிலையன்ஸ் ஜியோ வரவு நாட்டின் அனைத்து டெலிகாம் நிறுவனங்களையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது அனைவரும் அறிந்ததே. ஜியோவுடனான போட்டியைச் சமாளிக்க வோடபோன் நிறுவனமும் விலை குறைப்பில் இறங்கியுள்ளது. அதன் படி வோடபோன் 4ஜி போஸ்ட்பெயிட் சேவைக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

டேட்டா திட்டம்

டேட்டா திட்டம்

புதிய போஸ்ட்பெயிட் டேட்டா திட்டங்களின் படி 2 ஜிபி 4ஜி / 3ஜி டேட்டா கட்டணம் ரூ.450 இல் இருந்து ரூ.350 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. 3 ஜிபி 4ஜி / 3ஜி டேட்டா கட்டணம் ரூ.650இல் இருந்து ரூ.450க்கு குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் 5ஜிபி 4ஜி / 3ஜி டேட்டா கட்டணம் ரூ.850 இல் இருந்து ரூ.650க்கு குறைக்கப்பட்டுள்ளது.

திட்டம்

திட்டம்

மேலும் 6ஜிபி 4ஜி / 3ஜி டேட்டா கட்டணம் ரூ.750, 7 ஜிபி 4ஜி / 3ஜி டேட்டா கட்டணம் ரூ.850 மற்றும் 10 ஜிபி 4ஜி / 3ஜி டேட்டா கட்டணம் ரூ.999 என்றும் 15 ஜிபி 4ஜி / 3ஜி டேட்டா கட்டணம் ரூ.1,499, 20 ஜிபி 4ஜி / 3ஜி டேட்டா கட்டணம் ரூ.1,999 என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வோடபோன் ஃபிளெக்ஸ்

வோடபோன் ஃபிளெக்ஸ்

வோடபோன் ஃபிளெக்ஸ் அறிமுக விழாவில் ரிலையன்ஸ் ஜியோவுடனான போட்டி குறித்து வோடபோன் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த சந்தீப் கட்டாரியா கூறும் போது, "இந்தியாவின் மிகப் பெரிய ஸ்பெக்ட்ரமில் சுமார் 95 சதவீதம் பேர் 4ஜி ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதில்லை." எனத் தெரிவித்தார்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இலக்கு

இலக்கு

வோடபோன் ஃபிளெக்ஸ் பெரிய அளவிலான பயனர்களுக்கானது, "நாங்கள் ஒன்றும் புதிய நிறுவனம் கிடையாது, நாங்கள் 5 அல்லது 10 மில்லியன் பயனர்களைக் குறி வைக்கவில்லை, மாறாக எங்களது இலக்கு 200 மில்லியன் பயனர்கள்" என்றும் சந்தீப் தெரிவித்திருந்தார்.

சுவாரஸ்யம்

சுவாரஸ்யம்

ரிலையன்ஸ் ஜியோ போட்டியை சமாளிக்கும் அதே வேலையில் பயனர்களுக்கு சிறப்பான சேவையையும் வழங்கும் நிறுவனம் எது என்பதில் சுவாரஸ்யம் மேலும் அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Vodafone Cuts Rates of Postpaid 4G Data Plans Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X