இலவசங்களை வாரி வழங்கும் வோடபோன்!

ஜியோவுடனான போட்டி தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் வோடபோன் நிறுவனம் புதிய ரோமிங்கின் போது சில இலவசங்களை அறிவித்துள்ளது.

Written By:

ரிலையன்ஸ் ஜியோவின் வாழ்நாள் இலவச வாய்ஸ் கால் சேவையினை ஓரளவு தாக்கு பிடிக்கும் நோக்கில் வோடபோன் இந்தியா இன்று புதிய வாய்ஸ் கால் திட்டங்களை அறிவித்து உள்ளது. இதன் படி பயனர்கள் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றிப் புதிய சேவைகளைத் தீபாவளி முதல் அனுபவிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வோடபோன் புதிய ரோமிங் திட்டம் குறித்த வரிவான தகவல்களை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

கொண்டாட்டம்

200 மில்லியன் பயனர் எண்ணிக்கையைக் கொண்டாடும் விதமாக எங்களது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தேசிய ரோமிங்கின் போது இலவச இன்கமிங் அழைப்புகளை வழங்குகின்றோம் என வோடபோன் இந்தியா நிறுவனத்தின் தலைவர் தன் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

தீபாவளி

வோடபோன் இந்தியா பயனர்கள் ரோமிங் அழைப்புகள் குறித்து எவ்வித தயக்கமும் இன்றி நாடு முழுக்கப் பயணம் செய்ய முடியும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டணம்

ரோமிங்கின் போது அழைப்புக் கட்டணங்கள் ஏற்கனவே குறைக்கப்பட்டிருக்கின்றது. ரோமிங்கின் போது இன்கிமிங் அழைப்புக் கட்டணங்கள் பயனர்களைக் கவலை கொள்ளச் செய்திருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்திருக்கின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இலவசம்

டெலிகாம் சந்தையில் புதுவரவு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ அனைத்து வித அழைப்புகளையும் முற்றிலும் இலவசமாக வழங்கி வருகின்றது. இது மற்ற நிறுவனங்களுக்குக் கடும் போட்டியாக அமைந்துள்ளது.

பிஎஸ்என்எல்

ஜூன் 15, 2015 முதல் பிஎஸ்என்எல் ரோமிங் கட்டணத்தை இலவசமாக வழங்கி வருகின்றது. இதோடு பல்வேறு நிறுவனங்களும் ரோமிங்கின் போது இலவச சேவைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!English summary
Vodafone Announces Free Incoming Calls on National Roaming
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்