ஜியோ,ஏர்டெல்,வோடபோன்,பிஎஸ்என்எல்- 3ஜி மற்றும் 4ஜி டேட்டா ஆபர்.!

தற்போது 3ஜி மற்றும் 4ஜி டேட்டா மற்றும் கால்அழைப்புகளின் சிறப்பு திட்டங்கள்.!

By Prakash
|

ரிலையன்ஸ் உரிமையாளர் அம்பானி அவர்கள் பல்வேறு ஜியோ இலவச சலுகைகளை வழங்கியதால் மற்ற நிறுவனங்களும் கால் அழைப்பு கட்டணம் மற்றும் டேட்டா போன்றவற்றில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.

தற்போது அனைத்து நிறுவனங்களும் அதிகப்படியான வாடிக்கையாளர்களை பெற, பல்வேறு சிறப்பு திட்டங்கள் மற்றும் கட்டணக்குறைப்பு போன்றவற்றை அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

ஏர்டெல் ரூ.244 ரீசார்ஜ்:

ஏர்டெல் ரூ.244 ரீசார்ஜ்:

ஏர்டெல் பொருத்தவரை இன்டர்நெட்வேகம் மிக அதிகமாக இருக்கும். ஏர்டெல் ரூபாய் 244க்கு ரீசார்ஜ் செய்தால் 4ஜி டேட்டா ஒருநாளைக்கு 1ஜிபி வீதம் 70 நாட்களுக்குப் பயன்படுத்தலாம். மேலும் ஒருநாளைக்கு 300 நிமிடங்கள் கால் அழைப்புகள் இதன் மூலம் பெறலாம்.

ரிலையன்ஸ் ஜியோ  ரூ.309 ரீசார்ஜ்:

ரிலையன்ஸ் ஜியோ ரூ.309 ரீசார்ஜ்:

ஜியோ ரூபாய் 309க்கு ரீசார்ஜ் செய்தால் இலவச கால் அழைப்புகள் மற்றும் 4ஜி டேட்டா ஒருநாளைக்கு 1ஜிபி பயன்படும் வகையில் உள்ளது. இவற்றை 84 நாட்களுக்குப் பயன்படுத்தலாம். மற்றும் இலவச ரோமிங் இதனுள் அடக்கம். தினசரி 100 எஸ்எம்எஸ் பெற முடியும்.

பிஎஸ்என்எல் ரூ.333 ரீசார்ஜ்:

பிஎஸ்என்எல் ரூ.333 ரீசார்ஜ்:

பிஎஸ்என்எல் எஸ்.டி.விஇ ரூபாய் 333க்கு ரீசார்ஜ் செய்தால், 3ஜி டேட்டா ஒருநாளைக்கு 3ஜிபி பயன்படும் வகையில் உள்ளது. மேலும் இவற்றை 90நாட்களுக்கு உபயோப்படுத்தமுடியும். மேலும் இவற்றில் உள்ள இன்டர்நெட் வேகம் 80கேபிபிஎஸ் ஆகும்.

ஏர்டெல் ரூ.345 ரீசார்ஜ்:

ஏர்டெல் ரூ.345 ரீசார்ஜ்:

ஏர்டெல் ரூபாய் 345க்கு ரீசார்ஜ் செய்தால், 4ஜி டேட்டா ஒருநாளைக்கு 3ஜிபி பயன்படும் வகையில் உள்ளது. மேலும் இவற்றுடன் இலவச கால் அழைப்புகள் இடம்பெரும். இவை 28 நாட்களுக்குப் பயன்படும் வகையில் உள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.349 ரீசார்ஜ்:

பிஎஸ்என்எல் ரூ.349 ரீசார்ஜ்:

பிஎஸ்என்எல் ரூபாய் 345க்கு ரீசார்ஜ் செய்தால், 3ஜி டேட்டா ஒருநாளைக்கு 2ஜிபி பயன்படும் வகையில் உள்ளது. மேலும் இந்தத் திட்டம் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளையும் உள்ளடக்கியுள்ளது. இவை 28 நாட்களுக்குப் பயன்படும் வகையில் உள்ளது..

வோடபோன் ரூ.346 ரீசார்ஜ்:

வோடபோன் ரூ.346 ரீசார்ஜ்:

வோடபோன் ரூபாய் 346க்கு ரீசார்ஜ் செய்தால், 4ஜி டேட்டா ஒருநாளைக்கு 1ஜிபி பயன்படும் வகையில் உள்ளது. இவை 56 நாட்களுக்குப் பயன்படுத்த முடியும். ஒரு நாளைக்கு 300 நிமிடங்கள் வரை கால் அழைப்புகள் பெற முடியும்.

பிஎஸ்என்எல் ரூ.339 ரீசார்ஜ்:

பிஎஸ்என்எல் ரூ.339 ரீசார்ஜ்:

பிஎஸ்என்எல் ரூபாய் 339க்கு ரீசார்ஜ் செய்தால், 3ஜி டேட்டா ஒருநாளைக்கு 3ஜிபி பயன்படும் வகையில் உள்ளது. இவை 28 நாட்களுக்குப் பயன்படுத்த முடியும்.

பிஎஸ்என்எல் ரூ.395 ரீசார்ஜ்:

பிஎஸ்என்எல் ரூ.395 ரீசார்ஜ்:

பிஎஸ்என்எல் ரூபாய் 395க்கு ரீசார்ஜ் செய்தால், 3ஜி டேட்டா ஒருநாளைக்கு 2ஜிபி பயன்படும் வகையில் உள்ளது. மேலும் 3000 நிமிடங்கள் கால் அழைப்புகள் பெற முடியும். இவற்றை 71 நாட்களுக்குப் பயன்படுத்த முடியும்.

ஏர்டெல் ரூ.399 ரீசார்ஜ்:

ஏர்டெல் ரூ.399 ரீசார்ஜ்:

ஏர்டெல் ரூபாய் 399க்கு ரீசார்ஜ் செய்தால் 4ஜி டேட்டா ஒருநாளைக்கு 1ஜிபி வீதம் 70 நாட்களுக்குப் பயன்படுத்தலாம். ஒரு வாரத்திற்கு 1,200 நிமிடங்கள் கால் அழைப்புகள் பெற முடியும. இலவச உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை 70 நாட்களுக்குப் பயன்படுத்த முடியும்.

ரிலையன்ஸ் ஜியோ  ரூ.509 ரீசார்ஜ்:

ரிலையன்ஸ் ஜியோ ரூ.509 ரீசார்ஜ்:

ஜியோ ரூபாய் 509க்கு ரீசார்ஜ் செய்தால் இலவச கால் அழைப்புகள் மற்றும் 4ஜி டேட்டா ஒருநாளைக்கு 2ஜிபி வரை பயன்படும் வகையில் உள்ளது. இவற்றை 84 நாட்களுக்குப் பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Value for money 3G/4G data and voice call plans right now ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X