இப்படி யூஸ் பன்னா போன் வெடிக்காது, சும்மா கதை உடாதீங்க.!

நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் வெடிப்பது குறித்து இதுவரை நீங்க கேட்டு நம்பியது அனைத்தும் பொய் தான்.

Written By:

சாம்சங் கேலக்ஸி நோட் 7, ஐபோன் 7, சாம்சங் ஜெ5, சாம்சங் எஸ்7 எட்ஜ் போன்ற போன்கள் வெடித்துச் சிதறியது பலரையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. மொபைல் நிறுவனங்களைக் கேட்டால் போன்களைச் சார்ஜ் செய்யும் போது செய்யும் தவறு தான் காரணம் என்கின்றனர்.

ஸ்மார்ட்போன்களைச் சார்ஜ் செய்வது குறித்துப் பல்வேறு போலி கருத்துகள் நம்மிடையே பரவியுள்ளது. அப்படிச் செய்யக் கூடாது, இப்படிச் செய்தால் வெடிக்கும் என ஆயிரம் கருத்துக்கள் இதைச் சுற்றி நாமும் கேள்விப்பட்டிருப்போம்..

உண்மையில் போன்களை இப்படித் தான் பயன்படுத்த வேண்டும் என்பதே கிடையாது. சாம்சங், ஐபோன் மற்ற இதர நிறுவனங்களின் போன்கள் வெடிக்க நீண்ட நேரம் சார்ஜ் செய்வது, இரவு முழுக்கச் சார்ஜ் செய்யப்பட்டிருந்தது என்பன போன்றவை முழுமையான பொய் தான்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

சார்ஜிங் செய்வது

இன்றைய ஸ்மார்ட்போன்கள் லித்தியம்-அயன் பேட்டரிகளைப் பயன்படுத்துகின்றன. இதனால் பயனர்கள் தங்களது போன்களை எப்போதும் சார்ஜ் செய்யலாம். இது போன்களை எந்த நிலையிலும் பாதிக்காது.

சார்ஜர்

உங்களின் போன்களுக்கு எந்தச் சார்ஜர் கொண்டும் சார்ஜ் செய்யலாம். எந்தச் சார்ஜர் என்றாலும் கருவிக்குத் தேவையான சீரான மின்சாரத்தை வழங்கினாலே போதுமானது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இரவு முழுக்கச் சார்ஜ் செய்வது தப்பா

சமீபத்திய கருவிகள் வெடிக்கும் போது பெரும்பாலும் கூறப்படுவது இது தான், இரவு முழுக்கச் சார்ஜ் செய்ததாலேயே போன் வெடித்தது என்பர் - இது முற்றிலும் பொய் தான். இன்றைய ஸ்மார்ட்போன்கள் இரவு முழுக்கச் சார்ஜ் செய்வது எந்த வகையிலும் போனினை பாதித்து விடாது.

ஸ்விட்ச் ஆஃப்

போன் பயன்படுத்தாத போது அதனினை ஆஃப் செய்ய வேண்டும் எனக் கூறப்படுகிறது. இது முற்றிலும் தவறான ஒன்றாகும். பயன்படுத்தாத போது போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. வேண்டுமானால் பயன்படுத்தாத ஆப்களை அன் இன்ஸ்டால் செய்யலாம்.

சார்ஜிங் செய்யும் போது ஸ்விட்ச் ஆஃப்

போன்களைச் சார்ஜ் செய்யும் போது ஸ்விட்ச் ஆஃப் செய்தால் போன் வெடிக்காது எனக் கூறப்படுவதுண்டு. இதுவும் முற்றிலும் பொய்யான ஒன்றாகும். போன்கள் வெடிக்கும் ஒரே காரணம் தயாரிப்பின் போது ஏற்படும் கோளாறு மட்டுமே ஆகும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!English summary
Using Phone While Charging Is Not The Reason For Explosion
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்