யூஎஸ்பி-C: அனைத்து உபகரணங்களையும் சார்ஜ் செய்யும் அடுத்த தலைமுறை உபகரணம்

ஒரு உபகரணம், பல உபயோகம். அதுதான் இந்த தலைமுறையின் யூஎஸ்பி-C சார்ஜர்

By Siva
|

யூஎஸ்பி போர்ட்ஸ் என்று கூறப்படும் சாதனம் இன்று பலவிதங்களில் பயன்படும் ஒரு உபகரணமாக மாறிவிட்டது. இந்த ஒரு உபகரணம் இருந்தால் போதும், பல உபகரணங்கள் தேவையில்லாமல் போய்விடும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.

யூஎஸ்பி-C: அனைத்து உபகரணங்களையும் சார்ஜ் செய்யும் அடுத்த தலைமுறை உபகரண

ஆப்பிள் மேக்புக் முதன்முதலில் அறிமுகம் செய்த இந்த யூஎஸ்பி போர்ட்ஸ் தற்போது கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நிறுவனங்களும் பயன்படுத்த தொடங்கிவிட்டன. ஒரே ஒரு யூஎஸ்பி போர்ட்டில் சார்ஜ் செய்ய, டேட்டாக்கள் பரிமாற்றம் செய்து கொள்ள ஏன், ஆடியோ கேட்க கூட இந்த யூஎஸ்பி போர்ட்ஸ் பயன்படுகிறது.

இந்த உலகத்திற்கு யூஎஸ்பி போர்ட்ஸ்-ஐ அறிமுகம் செய்த ஆப்பிள் நிறுவனம் தற்போது புதிய வகை யூஎஸ்பி-C என்ற அதிநவீன உபகரணம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. அனைத்து மொபைல்களுக்கும் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட உள்ள இந்த யூஎஸ்பி-C தற்போது நடைமுறையில் இருக்கும் அனைத்து உபகரணங்களையும் வீட்டுக்கு அனுப்பிவிடும் என்றே தெரிகிறது.

ஒரு ரிசார்ஜ் செய்தால் மற்றொன்று இலவசம் - ஜியோ அட்டகாசம்.!

இந்த யூஎஸ்பி-C அனைத்து தரப்பினர்களாலும் மிக விரைவில் விரும்பப்பட முக்கிய காரணமாக இருப்பது இதன் நிப்ட் சார்ஜர்தான். சிறிய அதே நேரத்தில் பவர்புல் சார்ஜராக செயல்படும் இந்த யூஎஸ்பி-C USB-C மற்றும் USB-A மூலம் அனைத்து கேட்ஜெட்களையும் மிக விரைவாக சார்ஜ் செய்து விடும்

இந்த போர்ட்டபிள் சார்ஜர் அல்லது பவர்பேங்க் என்று சொல்லப்படும் இந்த சார்ஜர், நார்மல் சார்ஜரை விட ஆறு மடங்கு விரைவாக செயல்பட்டு சார்ஜ் செய்துவிடுவதால் நேரம் மிச்சமாகிறது. இதற்கு முழுமுதல் காரணம் இந்த யூஎஸ்பி-C , குஅல்காம் 2.0 டெக்னாலஜியில் செயல்படுகிறது என்பதுதான்.

அதனால் அதற்குத்தான் நாம் நன்றி கூற வேண்டும். இந்த சார்ஜர் உங்கள் கையில் இருந்தால் போதும், நீங்கள் எந்தவித பயமும் இல்லாமல் நீண்ட தூரம் பயணம் செய்யலாம். பவர் பேங்க் போலும் இந்த யூஎஸ்பி-C சார்ஜர் செயல்படுவதால் உங்கள் மொபைல் போனில் சார்ஜ் குறைந்தால் நீங்கள் எந்தவித டென்ஷனும் இல்லாமல் உடனே சார்ஜ் செய்து கொள்ளலாம்

டுவிட்டரை தேடுதளமாக மாற்ற ஒருசில டிப்ஸ்கள்

இந்த பவர்புல் சார்ஜர் மூலம் நீங்கள் உங்களுடைய ஐபோன், டேப்ளட், புதிய மேக்புக் அல்லது கோபுரோ ஆகிய அனைத்து சாதனனங்களையும் மற்ற சார்ஜர்களை விட மிக வேகமாக சார்ஜ் செய்து கொள்ளலாம்.

இதன் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட் என்னவெனில் இது போர்ட்டபிள் சார்ஜராக இருப்பதுதான் .இது உங்களுடைய பணம், நேரம் மற்றும் எந்தவித சிரமமும் இன்றி செயல்படலாம்.

பல்வேறு விதங்களில் பயன்படுவதால் இந்த யூஎஸ்பி-C அனைத்து தரப்பினர்களையும் மிகக்குறுகிய காலத்தில் கவர்ந்திழுதுவிட்டது எனலாம். இதுபோன்ற லேட்டஸ் உபகரணங்களை வாங்கி பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய அப்டேட் சரியாக இருக்கின்றது என்பது அர்த்தம்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
USB-C the future port of devices, said to replace all other ports in the coming times. NIFTY portable charger to introduce USB-C to portable chargers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X