இந்தியாவிற்குள் மூக்கை நுழைக்கும் அமெரிக்கா..!

|

இந்தியாவின் அணு சக்தி உற்பத்தி பற்றி அமெரிக்காவை சேர்ந்த அறிவியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிறுவனம் (Institute for Science and International Security) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அசத்தல் : இந்தியாவின் புதிய 'அல்ட்ரா-டெக்' உளவாளி..!

அந்த அறிக்கையானது முழுக்க முழுக்க இந்தியாவின் அணுசக்தி வளர்ச்சி மற்றும் அணு ஆயுதம் பற்றியே பேசுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பல தகவல்களை கீழ்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

அறிக்கை :

அறிக்கை :

அமெரிக்காவின் அறிவியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிறுவன அறிக்கையின்படி உலக நாடுகளில் மாபெரும் அணுமின் திட்டங்களை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அளவு :

அளவு :

மேலும் 2014-ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவிடம் அணுஆயுதம் தயாரிக்க உதவும் ப்ளூட்டோனியத்தின் அளவு மிக அதிகமாக இருந்திருக்கும் என்ற கணிப்பையும் அந்த அறிக்கை மூலம் அமெரிக்கா வெளிப்படுத்தி உள்ளது.

அணுஆயுதங்கள் :

அணுஆயுதங்கள் :

அதாவது 2014-ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவிடம் சுமார் 75 முதல் 125 வரையிலாக அணுஆயுதங்கள் இருக்கலாம் என்கிறது அந்த அறிக்கை.

சராசரி :

சராசரி :

அதிலும், அந்த அறிக்கையின் மதிப்பீடு படி சராசரியாக 97 அணு ஆயுதங்களாவது இந்தியாவிடம் இருக்கிறது என்று கூறுகிறது அமெரிக்காவின் அறிவியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிறுவனம்.

இருப்பு :

இருப்பு :

அணு ஆயுதம் செய்யத்தகுந்த புளூட்டோனியத்தின் இருப்பு அதிகமாக இருந்தும், இந்தியா மிக குறைந்த அளவிலான அணு ஆயுதங்களைத்தான் உருவாக்குகிறது என்பதையும் அந்த அறிக்கை குறிப்பிட்டு கூறியுள்ளது.

வளர்ச்சி :

வளர்ச்சி :

இருப்பினும் வளரும் நாடுகளிலேயே அணுசக்தி தொழில்நுட்பத்தில் மிகவும் வளர்ச்சி அடைந்த நிலையில் இருக்கும் நாடு இந்தியா தான் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்கட்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொள்கை நிறுவனங்கள் :

கொள்கை நிறுவனங்கள் :

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிராக இந்தியா செயல்படுவது போன்று தெரிவதாக அமெரிக்காவின் சில கொள்கை நிறுவனங்கள் எண்ணுகிறது என்றும் அந்த அறிக்கை கருத்து தெரிவித்துள்ளது.

எடை :

எடை :

மேலும் அந்த அறிக்கையின்படி இந்தியா 100 முதல் 200 கிலோகிராம் எடை அளவிலான அணு ஆயுதங்களை உற்பத்தி செய்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

செறிவூட்டப்பட்ட யுரேனிய ஆயுதங்கள் :

செறிவூட்டப்பட்ட யுரேனிய ஆயுதங்கள் :

மேலும் இந்தியா மிகவும் செறிவூட்டப்பட்ட யுரேனிய ஆயுதங்கள் தயாரிப்பதாக தனது சந்தேகத்தை அமெரிக்கா வெளிப்படுத்தியுள்ளது.

ஆதாரங்கள் :

ஆதாரங்கள் :

மேலும் தங்களின் சந்தேகத்திற்கு எந்த விதமான அதிர்காரப்பூர்வமான தகவலும் இல்லை ஆனாலும் சில ஆதாரங்கள் இருக்கிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியப்படை :

வெளியப்படை :

இதுபோன்ற அணுசக்தி தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அணு ஆயுத சார்ந்த விடயங்களில் இந்தியா வெளியப்படையாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கை கேட்டுக் கொண்டுள்ளது.

பாகிஸ்தான் :

பாகிஸ்தான் :

மேலும் சமீபத்தில் வெளியான மற்றொரு அறிக்கையின்படி இந்தியாவை விட அதன் அண்டை நாடான பாகிஸ்தான் அதிக அளவிலான அணு ஆயுதங்களை கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
இந்திய அணு ஆயுத தொழில்நுட்ப வளர்ச்சியை பற்றி அமெரிக்கா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X