பல ஸ்மார்ட்போன்களில் சேவையை நிறுத்துகிறது வாட்ஸ்ஆப், கவனம்.!

இந்த ஆண்டு இறுதியோடு 'பழைய' கருவிகளில் வாட்ஸ்ஆப் சேவை நிறுத்தப்பட இருக்கிறது. எந்தெந்த கருவிகளில் சேவை ஆதரவு நிறுத்தப்பட இருக்கிறது.?

|

நம்மை சுற்றியுள்ள பல ஸ்மார்ட்போன் பயனர்கள் இன்னும் தற்காலத்திற்குரிய கைபேசிகளைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள் அதாவது அப்கிரேட் செய்யப்படாத ஸ்மார்ட்போன்கள். ஆனால் இப்போது உங்கள் கருவிகளை மாற்றி புதிய கருவிகளை சொந்தமாக்க வேண்டிய சரியான நேரத்தில் உள்ளீர்கள்.

நம்மில் பெரும்பாலோர்கள் பயன்படுத்தும் முதன்மை பயன்பாடான வாட்ஸ்ஆப் இந்த ஆண்டு இறுதிக்குள் பழைய கருவிகளுக்கு அளித்த வந்த ஆதரவை நிறுத்திக்கொள்ள இருக்கிறது. இது சார்ந்த அறிவிப்பில் வாட்ஸ்ஆப் நிறுவனம் 2016 ஆம் ஆண்டு இறுதிக்குள் லட்சக்கணக்கான அவுட் டேட்டட் கருவிகளில் வாட்ஸ்ஆப் இயங்காது என்று அறிவித்துள்ளது.

காரணம்

காரணம்

வாட்ஸ்ஆப் நிறுவனத்தால் பழைய கருவிகளுக்கு ஏற்ற மற்றும் அதில் பொருந்தும்படியான தொழில்நுட்ப மேம்படுத்தல்களை வழங்க முடியாது என்ற காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வாபஸ்

வாபஸ்

பழைய ஸ்மார்ட்போன்கள் தங்கள் (வாட்ஸ்ஆப்) கதையின் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கும், ஆனால் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்த உள்ள பயன்பாட்டின் புதிய அம்சங்கள் அவைகளில் பொருந்தக்கூடிய வண்ணம் இல்லை என்பதால் அப்படியான கருவிகள் மீதான ஆதரவை வாபஸ் பெறுவதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது.

அடுத்து வரும் ஏழு ஆண்டு

அடுத்து வரும் ஏழு ஆண்டு

மேலும் நாங்கள் அடுத்து வரும் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக அதிக அளவிலான மக்கள் பயன்படுத்தும் மொபைல் தளங்களில் எங்களின் கவனத்தை செலுத்த திட்டமிட்டுள்ளோம் என்றும் வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது.

கேள்வி

கேள்வி

இந்த தருணத்தில் நீங்கள் வைத்திருக்கும் ஸ்மார்ட்போன் 2017-ல் வாட்ஸ்ஆப்பை ஆதரிக்குமா..? ஆதரிக்காதா..? என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். என்ன தகுதிகள் சேவை துண்டிக்கப்பட வழிவகுக்கும்.? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்..!

ஐஓஎஸ்

ஐஓஎஸ்

வாட்ஸ்ஆப்பின் அடுத்த மேம்படுத்தலில் இருந்து, ஐபோன் 3ஜிஎஸ் ஹேண்ட்செட் மற்றும் ஐஓஎஸ் 6 மூலம் இயங்கும் சாதனங்கள் வாட்ஸ்ஆப் ஆதரவை இழக்கும். மேலும் முதலாம், இரண்டாவது, மூன்றாவது அல்லது நான்காவது தலைமுறை ஐபாட்களிலும் வாட்ஸ்ஆப் வேலை நிறுத்தம் செய்யப்படும். பயனர்கள் சேவையை பயன்படுத்த ஐஓஎஸ் 9.3 மேம்படுத்தல் நிகழ்த்த வேண்டும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஆண்ட்ராய்டு,  விண்டோஸ்

ஆண்ட்ராய்டு, விண்டோஸ்

மறுபக்கம் ஆண்ட்ராய்டு ஸ்மார்போன்கள் அல்லது டேப்ளெட்களின் வெர்ஷன் 2.1 அல்லது 2.2 ஆகியவைகளில் இயங்கும் மற்றும் விண்டோஸ் 7 -ல் இயங்கும் சாதனங்கள் ஆகியவைகள் வாட்ஸ்ஆப் ஆதரவை இழக்கும்.

ஆதரவு நீட்டிக்கப்படும்

ஆதரவு நீட்டிக்கப்படும்

இது தவிர வாட்ஸ்ஆப் நிறுவனம் ஜூன் 30, 2017-ஆம் ஆண்டு வரை பிளாக்பெர்ரி ஓஎஸ், பிளாக்பெர்ரி 10, நோக்கியா எஸ்40 மற்றும் நோக்கியா சிம்பியன் எஸ்60 ஆகியவைகள் மீதான அதன் ஆதரவு நீட்டிக்கப்படுவதையும் சேர்த்தே அறிவித்துள்ளது.

விரைவில் வாட்ஸ்ஆப் ஆதரவு முடிவுக்கு வரும் தளங்கள்

விரைவில் வாட்ஸ்ஆப் ஆதரவு முடிவுக்கு வரும் தளங்கள்

பிளாக்பெர்ரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10,
நோக்கியா எஸ்40,
நோக்கியா சிம்பியன் எஸ்60,
ஆண்ட்ராய்டு 2.1 மற்றும் ஆண்ட்ராய்டு 2.2,
விண்டோஸ் போன் 7,
ஐபோன் 3ஜிஎஸ் / 6ஐஓஎஸ்

வாங்கியேதான் ஆக வேண்டும்

வாங்கியேதான் ஆக வேண்டும்

நம்மை சுற்றியுள்ள பெரும்பாலான ஸ்மார்ட்போன் பயன்ரகள் முதன்மை பயன்படான வாட்ஸ்ஆப்பை பயன் படுத்திவருகிறார்கள். சிலர் வாட்ஸ்ஆப் பயன்படுத்த வேண்டியே ஸ்மார்ட்போன்களை வைத்துள்ளார்கள் என்பதை நாம் அறிவோம். அப்படியான பயனர்கள் வேறு வழியே இன்றி புதிய கருவிகளை வாங்கியேதான் ஆக வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப்பின் இந்த அறிவிப்பின் ,மூலம் ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரிக்கும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது இதனால் ஸ்மார்ட்போன்கள் உற்பத்தியாளர்களுக்கு சில நன்மைகள் உறுதி.

மேலும் படிக்க

மேலும் படிக்க

வாட்ஸ்ஆப்பும் நவம்பரும் : தயவு செய்து இதை வீட்டில் முயற்சித்து பார்க்கவும்.!

Best Mobiles in India

English summary
Upgrade your phone: WhatsApp will stop working on older ones in 2017. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X