மே 18 : அப்துல் கலாம் ஐயாவின் அறியப்படாத இரகசிய பக்கங்கள்.!

செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவருக்கு அப்துல் கலாம் ஐயா செய்த ஒரு மரியாதை என்னவென்று உங்களுக்குத் தெரியுமா.?

|

இதே மே 18-ஆம் (1974) தேதிக்கும் அப்துல் காலம் ஐயாவிற்க்கும் ஒரு நெருங்கிய தொடர்புண்டு அது என்னவென்று தெரியுமா.? ஒருமுறை அப்துல் கலாம் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும் போது 'கரண்ட்' போய் விட்டது, அப்போது கலாம் என்ன செய்தார் தெரியுமா..? ஒரு முறை மதிற்சுவர்களில் கண்ணாடி பீங்கான்காளை பொருத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார் அது ஏன் என்று தெரியுமா..?

அதற்கான பதில்கள் எல்லாமே அப்துல் கலாம் ஐயாவின் பெரும்பாலும் அறியப்படாத ரகசிய 'பக்கங்களில்' புதையுண்டு கிடக்கிறது. வாருங்கள் அதை அனைத்தையும் தூசித்தட்டி உலகம் அறியச்செய்வோம்.!

புனிதமான மனிதப்பிறவி

புனிதமான மனிதப்பிறவி

அப்துல் கலாம் முதலில் ஒரு சிறந்த மனிதப்பிறவி, பின் தான் மாபெரும் விஞ்ஞானி, இந்தியாவின் ஏவுகணை மனிதன், மக்களின் குடியரசு தலைவர், தலைச்சிறந்த குடிமகன், எல்லாம். அவர் வாழ்வில் நடந்த சுவாரசியமான சின்ன சின்ன கதைகளை கேட்டால், அப்துல் கலாம் எவ்வளவு பெரிய புனிதமான மனிதப்பிறவி என்பது புரியும்.

மே 18-ஆம் தேதி

மே 18-ஆம் தேதி

மறைந்த பின்னும் கூட இந்தியாவின் அணுசக்தி ஆயுதத்தின் முதுகெலும்பாக இன்றுவரை திகழும் டாக்டர். அப்துல் கலாம் ஐயாவிற்கு 1974-ஆம் ஆண்டு மே 18-ஆம் தேதி இந்தியாவின் இராஜஸ்தானில் நிகழ்த்தப்பட்ட முதல் போக்ரான் அணுசக்தி பரிசோதனைக்கு பின்னர் 1998-ஆம் ஆண்டு வரை வேறு எந்த அணு ஆயுத சோதனைகளும் நடத்தப்படவில்லை என்ற நினைப்பிலேயே மே 18 என்ற தேதியை அப்துல் கலாம் மறக்காமல் இருந்திருக்கலாம்.

அணுசக்தி நிலை

அணுசக்தி நிலை

அதன் வெளிப்பாடே அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி மற்றும் விஞ்ஞான பாதுகாப்பு ஆலோசகர் அமைச்சர் ஆன டாக்டர். அப்துல் கலாம் ஆகிய இருவரும் நாட்டின் அணுசக்தி நிலையை ஒரு பெரிய களமிறக்கத்துடன் அறிவிக்க வேண்டிய நேரத்தை முடிவு செய்தனர் - அதுதான் பொக்ரான் 2.!

கர்வ குரல்

கர்வ குரல்

பொக்ரான் சோதனை வரம்பில் மேற்கொள்ளப்பட்ட பல அணு சோதனைகளுக்கு பின்னால் மூளையாக செயல்பட்ட அப்துல் கலாம் ஐயா அதை வெற்றிகரமாகவும் முடித்தும் காட்டினார். 2015-ஆம் ஆண்டில் ஒரு ட்வீட் மூலம் "மே 11, 1998-ஆம் ஆண்டு பொக்ரானில் ஒரு சூடான நாள் : 53சி என்பது நினைவிருக்கிறது. உலகின் பெரும்பகுதி தூங்கும் போது இந்தியாவின் அணுசக்தி வெளிப்பட்டது" என்ற தனது கர்வ குரலை எப்போதும் எழுப்ப தவறாத அப்துல் கலாம் ஐயா பற்றிய சுவாரசியமான விடயங்கள் அத்தோடு முடிந்துபோகவில்லை.!

கண்ணாடி பீங்கான்

கண்ணாடி பீங்கான்

ஒருமுறை தன் பாதுகாப்பிற்காக மதிற்சுவரில் கண்ணாடி பீங்கான்களை பொறுத்துவதை நிராகரித்து விட்டார். ஏனெனில் அவைகள் பறவைகளை காயப்படுத்தக் கூடும் என்பதால். ஒருமுறை மாணவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று அவர்களோடு நேரம் செலவிட்டது மட்டுமின்றி அவர்களின் யோசனைகளை மிகவும் கவனமாக கேட்டறிந்தாரம்.!

கரண்ட் போய்விட்டது

கரண்ட் போய்விட்டது

ஒரு முறை மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது 'கரண்ட்' போய்விட்டது. உடனே கீழே இறங்கி வந்து சுமார் 400 மாணவர்களுக்கு நடுவே நின்று, தன்னால் முடிந்த கனத்த குரலை கொண்டு உரையை தொடர்ந்தாரம். கலாம் அவர்கள் தன் வாழ்நாள் சேமிப்பு மற்றும் தன் சம்பளம் ஆகிய அனைத்தையும் பூரா (PURA) என்ற ஒரு தொண்டு நிறுவனத்திற்க்கு வழங்கி கொண்டிருந்தாராம்.

எல்லா குழந்தைகளுடனும்

எல்லா குழந்தைகளுடனும்

தனக்கு வரும் அத்துணை பரிசு மற்றும் கடிதங்களுக்கும் அவரே தன் கைப்பட எழுதிய நன்றி கடிதத்தை அனுப்புவதை வழக்கமாய் கொண்டிருந்தார், அப்துல் கலாம். ஒரு முறை நிகழ்ச்சி ஆரம்பிக்க நேரம் ஆகி கொண்டே போன போதும், எல்லா குழந்தைகளுடனும் புகைப்படம் எடுத்துக் கொண்ட பின்னர் நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாம் என்று சொன்னாராம்.

வேறொரு நாற்காலியில்

வேறொரு நாற்காலியில்

ஒரு நிகழ்ச்சியில் தனக்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தன்னை விட பெரிய நாற்காலி ஒன்றில் அமர மறுத்துவிட்டாராம், வேறொரு நாற்காலியில் தான் அமர்ந்தாராம் அப்துல் கலாம். குடியரசு தலைவராக இருக்கும் போது 'யாஹூ ஆன்சார்ஸ்' வலைதளத்தில் தீவிரவாதம் சார்ந்த கேள்வி ஒன்றையும் கேட்டார் அப்துல் கலாம்.

துண்டு கீரை

துண்டு கீரை

கலிஃபோர்னியாவில் நடைப்பெற்ற மாநாடு ஒன்றில் இந்திய மாணவர் ஒருவரை தன் தட்டில் சாப்பிடும்படி சொன்னாராம்..! ஒரு துண்டு கீரையை எடுத்து அந்த மாணவர் சாப்பிட்டாராம். கேரளாவின் ராஜ் பவனில் நடைப்பெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு, குடியரசு தலைவரின் விருந்தினராக இருவரை உடன் அழைத்து சென்றார் அப்துல் கலாம். ஒருவர் செருப்பு தைக்கும் தொழிலாளி, மற்றொருவர் சிறிய ஓட்டல் ஒன்று வைத்து நடத்துபவர்.

வீதி வீதியாக பேப்பர்

வீதி வீதியாக பேப்பர்

அணு இயற்பியல் தொடங்கி ஆன்மீக அனுபவம் வரை மொத்தம் 15 புத்தகங்களை எழுதி உள்ள அப்துல் கலாமை பற்றி 'ஐ யம் கலாம்' (I am kalam) என்ற ஒரு ஹிந்தி திரைப்படம் (2011) வெளியானது குறிப்பிடத்தக்கது. ஏழ்மை காரணமாக தன் இளம் வயதிலேயே வீதி வீதியாக பேப்பர் போடும் வேலையை செய்தாராம் அப்துல் கலாம். பள்ளியல் படிக்கும் போது, அப்துல் கலாம் ஒரு சராசரி மாணவர் தானாம். பெரிய அறிவியல் விஞ்ஞானியான அப்துல் கலாம், உண்மையில் பள்ளியில் இருந்தே, அறிவியலை விட கணித்த்தில் தான் அதிகம் கை தேர்ந்தவராம்.

மிரட்டினாராம்

மிரட்டினாராம்

காலாமின் சீனியர் கிளாஸ் ப்ராஜக்ட்டில் திருப்தி அடையாத 'டீன்' (DEAN) இன்னும் 3 நாட்களில் முடிக்கவில்லை எனில் காலாமின் உதவி தொகையை தர மாட்டேன் என்று மிரட்டினாராம். சொன்ன தேதிக்குள் ப்ராஜக்ட்டை முடித்து கொடுத்தாரம், அப்துல் கலாம். ஒரு ராணுவ 'பைலட்'டாக ஆக வேண்டும் என்றுதான் கலாம் முதலில் ஆசைப்பட்டாராம். அதற்கான தேர்வில், முதலில் வரும் எட்டு பேர் மட்டுமே தகுதி பெறுவார்கள் என்ற நிலையில், ஒன்பதாவது இடத்தை பிடித்தாராம் - கலாம். அப்துல் காலம், ஒரு திருக்குறள் ( ஏ கிளாசிக் ஆஃப் குறள்ஸ்) அறிஞர் ஆவார், அவர் மேடை பேச்சுகளில் நிச்சயம் ஒரு திருக்குறளை நாம் கேட்கலாம்.

கேலி

கேலி

இந்தியாவின் முதல் ராக்கெட் பாகங்கள் சைக்கிளில் வைத்தும், மாட்டு வண்டியில் வைத்தும் கொண்டு வரப்பட்டன, அதை பெரிய அளவில் கேலி செய்தன பிற நாடுகள். இப்போது வளர்ந்த நாடுகள் அனைத்தும் இஸ்ரோவின் வளர்ச்சியை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கிறது, சில நாடுகல் இஸ்ரோவின் உதவியை நாடுகிறது. இதற்கெல்லாம் பிரதான காரணம் - டாக்டர் அப்துல் கலாம்.

இந்திய ராணுவத்திற்காக ஹெலிக்காப்பட்டர்

இந்திய ராணுவத்திற்காக ஹெலிக்காப்பட்டர்

1960-இல் மெட்ராஸ் இன்ஸ்ட்டியூட் ஆஃப் டெக்னாலஜி-யில் படிப்பை முடித்த பின், டிபன்ஸ் ரிஸர்ச் அண்ட் டெவலப்மெண்ட்டில் இணைந்து இந்திய ராணுவத்திற்காக ஹெலிக்காப்பட்டர்களை உருவாக்கினார். 1969-இல் அரசு ஒப்புதல் பெற்று, அந்த பணியில் மேலும் நிறைய என்ஜினீயர்கள் மற்றும் விஞ்ஞானிகளை இணைத்துக்கொண்டார்.

முதல் சாட்டிலைட்

முதல் சாட்டிலைட்

இஸ்ரோவிற்கு இடமாற்றம் செய்த பின் அங்கு அவர் எஸ்எல்வி-3 க்கு ப்ராஜக்ட் டைரக்டராக பணியாற்றினார். எஸ்எல்வி 3 - இந்தியாவின் முதல் சாட்டிலைட் விண்கலமாகும். 1980-களில் ஏவுகணை தயாரிப்பை முன்னடத்தினார். அந்த காலகட்டம் அக்னி, ப்ரித்திவ் போன்ற ஏவுகணைகள் ராணுவத்திற்கு பெரும் பலம் சேர்த்தன.

மீண்டும் வேண்டும் ஒரு அப்துல் கலாம்

மீண்டும் வேண்டும் ஒரு அப்துல் கலாம்

பின் அப்துல் கலாம், அப்போதைய பிரதமரின் முக்கிய ஆலோசகராகவும் பணியாற்றினார். பின் 2002-ஆம் ஆண்டு இந்தியாவின் 11-வது குடியரசு தலைவர் ஆனார். ஐநா மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இவர் ஆற்றிய உரை வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகும். ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் கனவு காண சொல்லிக் கொடுத்த மாமனிதர், நேற்று (27 ஜூலை 2015) மீளா உறக்கத்தில் ஆழ்ந்தார். இவரை போல் மாபெரும் நல்ல மனிதரை கண்டு நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் கோடி விடயங்கள் உள்ளது - மீண்டும் வேண்டும் ஒரு அப்துல் கலாம்.!

Best Mobiles in India

Read more about:
English summary
Unknown facts of the man behind India's launch vehicle technology era. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X