யுசி ப்ரவுஸர் 10.7 அப்டேட் : அதிவேக மொபைல் ப்ரவுஸர்..!!

Written By:

இந்தியாவின் முன்னணி மொபைல் ப்ரவுஸரான யூசிவெப், தனது ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு மிக பெரிய அப்டேட் ஒன்றை வழங்கி இருக்கின்றது.

புதிய யுசி ப்ரவுஸர் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட பின்னணி புகைப்படங்களும் மிகவும் சீரான இணைய அனுபவத்தையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் 100 மில்லியன் பயனாளிகள் தகவல்களை அறிந்து கொள்ள புதிய ஹோம் பேஜ் வடிவமைப்பு மற்றும் பல்வேறு ஆப்ஷன்களை யுசி ப்ரவுஸர் வழங்குகின்றது. இதோடு அதிவேக செயல்திறன் மற்றும் தகவல்களை எளிமையாக கண்டறியும் படி இருக்கின்றது. இங்கு யுசி ப்ரவுஸர் 10.7 அப்டேட் மூலம் அந்நிறுவனம் வழங்கி இருக்கும் புதிய சிறப்பம்சங்களை பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

தனித்துவம்

ஆண்ட்ராய்டு சந்தையில் முதல் முறையாக வாடிக்கையாளர்களை தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைத்து கொள்ள அனுமதிக்கின்றது.

புகைப்படம்

முற்றிலும் வித்தியசமான பேக்கிரவுன்டு புகைப்படம் மற்றும் மேம்படுத்தப்பட்ட இணைய அனுபவத்தை வழங்குகின்றது.

வேகம்

புதிய அப்டேட் வாடிக்கையாளர்கள் தகவல்களை வேகமாகவும் மிகவும் எளிதாகவும் கண்டறிய உதவுகின்றது.

க்விக் அக்செஸ் கார்டு

செயலியில் இருக்கும் விட்ஜெட்களை உங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைத்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

கார்டு

ஹெட்லைன் கார்டினை பின் செய்தால் அனைத்து செய்திகளின் தலையங்கத்தையும் படிக்க முடியும்.

க்ளவுட் தொழில்நுட்பம்

இணையதளங்களை வேகமாக லோடு செய்ய அதிநவீன க்ளவுட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் வாடிக்கையாளர்கள் அதிவேகத்தை எட்ட முடிகின்றது.

மொழி

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உட்பட பல்வேறு விதமான ஃபான்ட்களை கொண்டிருக்கின்றது.

எச்டிஎம்எல் 5 சப்போர்ட்

வெப் அப்ளிகேஷன் சென்டர் எனும் அம்சத்தின் மூலம் எச்டிஎம்எல்5 மூலம் மற்ற இணைய செயலிகளை இயக்க முடியும்.

இலவசம்

புதிய யுசி ப்ரவுஸர் செயலியை ஆண்ட்ராய்டு பயனாளிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய முடியும்.

பதிவிறக்கம்

புதிய யுசி ப்ரவுஸர் வெர்ஷனினை ஆண்ட்ராய்டு பயனாளிகள் இங்கு க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
uc browser 10.7 update top 10 features the fastest android browser. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்