அமெரிக்கா வாங்கிடுச்சா..?? பீதியை கிளப்பும் ஸ்மார்ட் தொழில்நுட்பம்..!!

Written By:

பிரபலமாக இருப்பவர்கள் தினசரி வாழ்க்கையில் பல சுதந்திரங்களை இழக்க வேண்டியதும், சிறிய பிரச்சனைகளுக்கும் பெரிய பாதிப்புகளை எதிர்கொள்வதும் சாதாரணமான ஒன்றாகி விட்டது. அனைத்து துறைகளிலும் பிரபலங்களாக இருப்போர் சகஜமான வாழ்க்கை அனுபவிப்பது கடினமாக கருதும் நிலையில் உலகளவில் பிரபலமாக இருக்கும் முக்கிய நாடுகளும் இதே பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன என்று தான் கூற வேண்டும்.

அந்த வகையில் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான் என பல நாடுகள் தினசரி செய்திகளில் இடம் படித்து விடுகின்றன. அதன் படி அமெரிக்கா செய்திருக்கும் காரியம் ஒன்று அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் இருக்கின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

அமெரிக்க நிறுவனம்

அமெரிக்காவில் அமைந்திருக்கும் ட்ராக்கிங் பாயின்ட் இன்க் நிறுவனம் அதி நவீன தொழில்நுட்ப ஆயுதங்களை தயாரித்து வருகின்றது.

ராணுவம்

அதன் படி அமெரிக்க ராணுவம் ட்ராக்கிங் பாயின்ட் நிறுவனம் தயாரித்த அதி நவீன ஸ்மார்ட் துப்பாக்கிகளை வாங்கி இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலை

ப்ரெசிஷன் கைடெட் ஃபையர் ஆர்ம்ஸ் வகையை சேர்ந்த ஆறு துப்பாக்கிகளை அமெரிக்க ராணுவம் வாங்கி இருப்பதாகவும், இதன் விலை ஒவ்வொன்றும் ரூ.17,59,048.65 என கூறப்படுகின்றது.

சோதனை

அமெரிக்க ராணுவம் இந்த துப்பாக்கிகளை சோதனை மற்றும் மதிப்பீடு செய்ய வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

துப்பாக்கி

ப்ரெசிஷன் கைடெட் ஃபையர் ஆர்ம்ஸ் துப்பாக்கியில், மேம்படுத்தப்பட்ட அதிநவீன தாக்குதல் ஜெட் விமானங்களில் இருக்கும் ட்ராக்கிங் மற்றும் ஃபயர்-கண்ட்ரோல் தொழில்நுட்பம் இருக்கின்றது.

தேர்ச்சி

குறைந்த பயிற்ச்சி பெற்ற வீரர்களும் இலக்குகளை துல்லியமாக தாக்க இந்த துப்பாக்கி வழி செய்யும் என கூறப்படுகின்றது.

ட்ரிஃகர் லின்க்

இலக்கை துல்லியமாக அடைய ட்ரிஃகருடன் ட்ராக்கிங் பாயின்ட் இணைந்து கொள்ளும்.

டாக் அன்டு ஷூட்

டாக் அன்டு ஷூட் தொழில்நுட்பத்தின் மூலம் இலக்கை கன கச்சிதமாக அடைய துணை நிற்கும். இதன் பின் ட்ராக்கிங் சிஸ்டம் துணையுடன் இலக்கை சுடலாம்.

ஃபயர் கண்ட்ரோல்

ப்ரெசிஷன் கைடெட் ஃபையர் ஆர்ம்ஸ் துப்பாக்கியின் சிறப்பம்சமே ஃபயர் கண்ட்ரோல் தொழில்நுட்பம் தான், இந்த தொழில்நுட்பம் தான் குறைந்த தேர்ச்சி பெற்றவரையும் வெகு தூர இலக்குகளையும் துல்லியமாக தாக்க உதவுகின்றது.

துப்பாக்கி

ஃபயர் கண்ட்ரோல் சிஸ்டம் கொண்ட முதல் துப்பாக்கி என்ற பெருமையை ப்ரெசிஷன் கைடெட் ஃபையர் ஆர்ம்ஸ் துப்பாக்கி பெற்றிருக்கின்றது.

கணினி

குறி வைத்தல், மற்றும் இதர மனித தவறுகள் நடைபெறாமல் இருக்க ஃபயர் கண்ட்ரோல் சிஸ்டம்கள் வழி செய்யும்.

டிஸ்ப்ளே

ப்ரெசிஷன் கைடெட் ஃபையர் ஆர்ம்ஸ் துப்பாக்கியில் டிஜிட்டல் டிஸ்ப்ளே இலக்கு, துப்பாக்கியில் இருந்து இலக்கின் தூரம், காற்றின் அளவு, பேட்டரி நிலை, திசைகாட்டி, வெப்ப நிலை உள்ளிட்ட பல தகவல்களை காண்பிக்கும்.

ஷூட் வியூ

ஷூட்வியூ செயலியானது ப்ரெசிஷன் கைடெட் ஃபையர் ஆர்ம்ஸ் துப்பாக்கியில் இருந்து நேரலையில் ஸ்மார்ட்போன், அணியக்கூடிய கருவிகள் மற்றும் டேப்ளெட் கருவியில் வீடியோக்களை பார்க்க முடியும்.

விர்ச்சுவல் ரெஸ்ட்

இந்த ஆப்ஷன் மூலம் இலக்குகளை குறி வைத்த பின் சிறிய அசைவுகள் ஏற்பட்டாலும் துல்லியமாக இலக்கை சுட முடியும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
U.S. Military Begins Testing Smart Rifles. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்