அதிவேகம் ஆபத்தில் முடியும் : ஆய்வு முடிவில் அதிர்ச்சி.!!

Written By:

கணினியில் டைப் செய்யும் போது மிதமான வேகத்தில் டைப் செய்வோரின் எழுத்து திறமை நாளடைவில் அதிகரிக்கும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்திருக்கின்றது. அதன் படி வாட்டர்லூ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் கணினியில் டைப் செய்வோரின் வேகத்தை ஆய்வு செய்தனர்.

 அதிவேகம் ஆபத்தில் முடியும் : ஆய்வு முடிவில் அதிர்ச்சி.!!

இந்த ஆய்வில் பங்கேற்றோரின் எழுத்து திறனை கண்டறிய ஒரே கையிலும் இரு கைகளிலும் கட்டுரைகளை டைப் செய்ய வைக்கப்பட்டனர். அதன் பின் அவர்களின் கட்டுரைகள் ஆய்வு செய்யப்பட்டன. டெக்ஸ்ட் அனாலசிஸ் எனும் மென்பொருள் மூலம் கட்டுரைகளை ஆய்வு செய்யும் போது ஒரே கையில் டைப் செய்வோரின் கட்டுரை சிறப்பானதாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

 அதிவேகம் ஆபத்தில் முடியும் : ஆய்வு முடிவில் அதிர்ச்சி.!!

டைப்பிங் செய்வதில் வேகத்திற்கு ஏற்ப எழுத்தின் தரம் மாறும் என வாட்டர்லூ பல்கலைக்கழக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளர். மேலும் இந்த ஆய்வில் பங்கேற்றோரில் குறைந்த அல்லது மிதமான வேகத்தில் டைப் செய்தோர் வித்தியாசமான வார்த்தைகளை தங்களது கட்டுரைகளில் பயன்படுத்தியிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இதோடு டைப்பிங் செய்வதில் எழுத்து தரம் குறித்து ஆய்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை என பேராசிரியர் எவான் எஃப் ரிஸ்கோ தெரிவித்திருந்தார்.

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Typing quickly ruins your writing skills. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்