வேகமாக பரவும் 'ஸீக்கா' வைரஸ் : தடுப்பது எப்படி..??

Written By:

ஏடேஸ் எஜிப்டி (Aedes aegypti) என்ற மஞ்சள் காய்ச்சல் கொசுக்களின் மூலம் மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நோய் தான் - ஸீக்கா வைரஸ். கொசுக்கள் பரப்பும் நோய்களுக்கு எதிரான செயல்பாடுகளில் பல வகையான பழைய வழிமுறைகள் உள்ளனஎன்ற போதிலும், கட்டுப்பாட்டை மீறிப்போய் கொண்டிருக்கும் ஸீக்கா வைரஸ்க்கு எதிராக அவைகளை பயன்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

'எக்ஸ்ப்ளோஸிவ்' தொற்று :

ஸீக்கா வைரஸ் ஆனது ஒரு 'எக்ஸ்ப்ளோஸிவ்' தொற்று, அதாவது மிகவும் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் தொற்று நோய் என்று உலக சுகாதார அமைப்பு கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்தது.

பிரேஸில் :

குறிப்பாக பிரேஸில் நாடு ஸீக்கா வைரஸால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கர்ப்பம் :

பிரேஸில் மற்றும் அதனை சுற்றியுள்ள பிராந்தியததில் வாழும் பெண்களுக்கு ஸீக்கா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை கர்ப்பம் தரிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது.

200,000 குழுக்கள் :

பிரேசில் முழுவதும் 200,000 குழுக்கள் ஸீக்கா வைரஸ் கொசுக்களுக்கும், அதன் இனப்பெருக்கத்திற்கும் எதிரான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

முன்னெச்சிரிக்கை :

இதனை தொடர்ந்து ஸீக்கா வைரஸ்க்கு எதிரான பலமான முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளில் உலக நாடுகள் ஈடுப்பட்டு வருகின்றன.

உயிர்கொல்லி :

நல்ல செய்தி என்னவென்றால் கொசுக்களால் உயிர்கொல்லி நோய்கள் பரவுவது ஒன்றும் மனித இனத்திற்கு புதிய அச்சுறுத்தல் கிடையாது, இதை எப்படி சமாளிக்க வேண்டும் என்று நமக்கு தெரியும்.

செயல்பாடுகள் :

இருப்பினும் கூட மருந்து தெளிப்பது, தண்ணீர் தேங்க விடாது பார்த்துக் கொள்ளுவது, மக்களுக்கு அறிவுரை வழங்குவது போன்ற செயல்பாடுகள் பெரிய அளவிலான நேரத்தையும், உயிர்களையும் எடுத்துக்கொள்ளும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

விபரீத நிலை :

இதுபோன்ற விபரீத நிலையில் தான் தொழில்நுட்ப அணுகுமுறைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது, அதாவது செல்போன்கள் மற்றும் ஜீன் டிரைவ் போன்ற தொழில்நுட்பங்கள்.

ட்ராக் :

செல்போன்கள் மூலம் அவைகளின் உரிமையாளர்களை 'ட்ராக்' செய்ய முடியும், அவர்களின் இயக்கங்களையும் நடமாட்டாங்களையும் பதிவு செய்து கண்காணிக்க முடியும்.

ஹாட் ஸ்பாட் :

அந்த பதிவுகளை கொண்டே ஸீக்கா வைரஸின் 'ஹாட் ஸ்பாட்', அதாவது அதிகப்படியான தாக்கம் கொண்டிருக்கும் இடங்கள் மற்றும் அடுத்த பரவக்கூடிய சாத்தியமான இடங்கள் போன்றவைகளை கண்டறிய முடியும்.

ஜீன் டிரைவ் :

காட்டுத்தனமான இனப்பெருக்க வளர்ச்சியில் இருக்கும் உயிர் இனத்தை கட்டுப்படுத்தக்கூடிய சின்தெட்டிக் ஜீன் தொழில்நுட்பம் தான் - ஜீன் டிரைவ்..!

கோட்பாடு :

இது சார்ந்த கோட்பாடு ஒன்றில், ஒரு ஜீன் டிரைவ் ஆனது ஸீக்கா வைரஸ் பரப்பும் கொசுக்கள் முட்டையிட்டு அடைகாப்பபதை தடுக்கிறது மேலும் இறுதியில் அந்த கொசு இனமே அழியும் வாய்ப்பு உள்ளது என்று நம்புகிறது.

திரும்பி பெற முடியாத நிலை :

மறுபக்கம் சில விஞ்ஞானிகள் ஒரு முறை இந்த ஜீன் டிரைவ் ஏவப்பட்டு விட்டால், மீண்டும் அதை திரும்பி பெற முடியாத நிலை ஏற்படும் என்றும் எச்சரிததுள்ளனர்.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Two Technologies That Could Stop Zika Virus. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்