இதெல்லாம் ஒரு பொழப்பு.. இதுக்கு பெருமை வேற.!!

By Super Admin
|

'நாதாரித்தனம் பண்ணாலும் நாசுக்காய் பண்ணனும்'னு நம்ம வடிவேலு சொல்வதைத் தொழில்நுட்ப நிறுவனங்கள் காலம் காலமாய் அப்பட்டமாக செய்திட்டு இருந்தது தெரிய வந்திருக்கு. வரலாற்றில் நாம் இன்று படிக்கும் முக்காவல்வாசி தகவல்கள் 100 சதவீதம் உண்மை கிடையாது என்ற கூற்று அனைவரும் அறிந்ததே.

ஏற்கனவே ஒருவர் கண்டுபிடித்த அல்லது அதிகம் பிரபலமாகாத விடயங்களைச் சற்று மாறுதல்களோடு, புதுப் பொலிவுடன் வெளியிட்டு அதனை வெற்றிபெற செய்திருக்கின்றன. அந்த வகையில் வெளியான தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகள் குறித்த தகவல்கள் ஸ்லைடர்களில்..

மலிவு

மலிவு

1970களில் கம்ப்யூட்டர் பிராசஸர்களின் விலை குறைய துவங்கியது, இதனால் கம்ப்யூட்டர் பிரியர்கள் கம்ப்யூட்டர் பாகங்களை வாங்கி அதனை ஒருங்கிணைத்துப் பயன்படுத்தினர்.

ஆப்பிள் II

ஆப்பிள் II

1977 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் II கணினிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றில் ஆப்பிள் அனைத்துப் பாகங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு பயனர்கள் ஒரே பட்டன் மூலம் இயக்க வழி செய்தது. இந்தக் கணினியே இன்றைய கணினிகளுக்கு முன்னோடியாக அமைந்தது.

தொடுதிரை

தொடுதிரை

2001 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் கணினி தயாரிப்பாளர்கள் தொடு திரை தொழில்நுட்பம் கொண்ட டேப்ளெட் கணினிகளைத் தயாரித்து வந்தனர். அதிகளவு எதிர்பார்ப்புகளுக்கிடையே அறிமுகமான இந்தக் கருவி விலை அதிகம், விரல்களின் மூலம் பயன்படுத்த முடியாதது போன்ற குறைபாடுகளால் தோல்வியைத்தழுவியது.

குரல் அறிதல்

குரல் அறிதல்

குரல் அறிதல் (voice recognition) தொழில்நுட்பத்தை உருவாக்கிய முதல் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனம் மைக்ரோசாப்ட். பல்வேறு காரணங்களால் இந்தத் தொழில்நுட்பம் வெளியிடப்படாமல் இருந்தது. 2001 ஆம் ஆண்டு உருவான எம்ஐபேட் குரல் அறிதல் தொழில்நுட்பம் இன்று வரை வெளியிடப்படவில்லை.

டிஜிட்டல் மீடியா பிளேயர்

டிஜிட்டல் மீடியா பிளேயர்

1998 ஆம் ஆண்டு ரியோ பிஎம்பி300 முதல் டிஜிட்டல் மீடியோ பிளேயர் என்ற பெருமை பெற்றது. இந்தக் கருவியில் 32 எம்பி மெமரி வழங்கப்பட்டது. இந்தக் கருவி நல்ல முயற்சி என்றாலும், கணினியில் இருந்து ரியோவிற்கு பாடல்களைப் பரிமாற்றம் செய்வது கடினமான ஒன்றாக இருந்தது.

ஐபாட்

ஐபாட்

2001 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபாட் கருவியை அறிமுகம் செய்தது. இந்தக் கருவியில் 5 ஜிபி மெமரி மற்றும் எளிய இந்டர்ஃபேஸ் வழங்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு விண்டோஸ் சேவையுடன் பொருந்தும் வசதி வழங்கப்பட்டதும் ஐபாட் கருவி மிகவும் பிரபலமானதாக மாறியது.

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

உண்மையில் ஸ்மார்ட்போன்களை கண்டறிந்தது யார் என்ற கேள்விக்கு உண்மையான விளக்கம் உங்களை பொறுத்ததே. 1994 ஆம் ஆண்டு ஐபிஎம் சிமான் கருவி அழைப்பு, மின்னஞ்சல் மற்றும் ஃபேக்ஸ் வசதிகளைக் கொண்டிருந்தது.

பிளாக்பெரி

பிளாக்பெரி

2003 ஆம் ஆண்டு பிளாக்பெரி ஸ்மார்ட்போன் உலகம் முழுக்க பிரபலமானது. ஐபிஎம் அல்லது பிளாக்பெரி கருவிகள் தான் உலகின் முதல் ஸ்மார்ட்போன்களா?

ஐபோன்

ஐபோன்

2007 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் ஒட்டு மொத்த தொழில்நுட்ப சந்தையையே புரட்டிப்போட்டது.

இ-புக்

இ-புக்

1998 ஆம் ஆண்டு ராக்கெட் இ-புக் கருவி தான் சந்தையின் முதல் மின்சார புத்தக கருவியாக அறிமுகமானது. ஆனால் இந்தக் கருவியில் 10 புத்தகங்களை மட்டுமே பதிவு செய்ய முடியும்.

அமேசான்

அமேசான்

ஆனால் 2007 ஆம் ஆண்டு அமேசான் இந்த வழிமுறையே மாற்றி கின்டில் ரீடர் மூலம் பிரபலமானது. பல்வேறு அம்சங்களைக் கொண்டு பயனர்களுக்கு எளிமையான பயன்பாடுகளை வழங்கியதால் இந்தக் கருவி மாபெரும் வெற்றி பெற்றது.

லிஸா

லிஸா

1983 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் லிஸா என்ற தனிப்பட்ட கம்ப்யூட்டர் ஒன்றை அறிமுகம் செய்தது. இந்த கம்ப்யூட்டர் கிராஃபிக்கல் யூஸர் இன்டர்ஃபேஸ் கொண்டிருந்தது. இருந்தும் இந்தக் கருவி வெற்றி பெறவில்லை.

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட்

ஆப்பிள் நிறுவனத்தின் லிஸா யோசனையை மெருகேற்றி மைக்ரோசாப்ட் விண்டோஸ்'ஐ உருவாக்கியது. இதுவே இன்று வரை பிரபலமானதாக இருந்து வருகின்றது.

இண்டர்நெட்

இண்டர்நெட்

எக்சைட், ஆல்டாவிஸ்ட, லைகோஸ் மற்றும் யாகூ போன்றவை இண்டர்நெட் யுகத்தின் துவக்க கால தேடுபொறி நிறுவனங்களாக இருந்தன.

கூகுள்

கூகுள்

கூகுள் நிறுவனம் பேஜ்ரேன்க் எனும் முறையை அறிமுகம் செய்தது. இந்த வழிமுறை தேடல்களுக்கு ஏற்ப தளங்களை பட்டியலிட்டது. இதன் மூலம் மக்கள் பிரபலமான தளங்களை அறிந்து கொண்டனர்.

மின்சார மகிழுந்து

மின்சார மகிழுந்து

உலகின் முதல் மின்சார மகிழுந்து உருவாக்கும் யோசனை 1800களை சேர்ந்ததாகும். 90களில் பிரபலமான இந்த யோசனை ஹோன்டா, கிரிஸ்லர் மற்றும் டொயோட்டா போன்ற நிறுவனங்களால் திரும்ப வந்தது.

டெஸ்லா

டெஸ்லா

2008 ஆம் ஆண்டு வரை பிரபலமாகாத மின்சார மகிழுந்துகள் டெஸ்லாவின் வருகைக்குப் பின் பிரபலமானது. இன்று டெஸ்லா நிறுவனம் மின்சார மகிழுந்து துறையில் உலக பிரபலமாக இருக்கின்றது.

இணையச் சேவை

இணையச் சேவை

1998 ஆம் ஆண்டின் துவக்கத்தில் கிளவெர்பாட் மற்றும் ஸ்மார்ட்டர்சைல்டு போன்ற நிறுவனங்கள் மக்களை குறுந்தகவல் அனுப்ப வழி செய்தன.

ஸ்லாக்

ஸ்லாக்

ஸ்லாக், $3.8 பில்லியன் சாட் ஆப் இதே யோசனையை முழுமையாக மாற்றி ஸ்லாக்பாட் என்ற அம்சத்தை அறிமுகம் செய்தது. ஸ்லாக்பாட் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு எளியப் பதில் மற்றும் நகைச்சுவைகளை வழங்கும்படி வடிவமைக்கப்பட்டது.

சமூக வலைத்தளம்

சமூக வலைத்தளம்

2002 ஆம் ஆண்டு அறிமுகமான பிரென்ட்ஸர் உலகின் முதல் சமூக வலைத்தளம் ஆகும். மூன்றே மாதங்களில் இந்தத் தளத்தினை 30,00,000 பேர் பயன்படுத்தினர்.

மைஸ்பேஸ்

மைஸ்பேஸ்

2003 ஆம் ஆண்டு மை ஸ்பேஸ் அறிமுகத்திற்கு பின் பிரென்ட்ஸ்டர் பயனர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

பின் 2004 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் வருகைக்குப் பின் மை ஸ்பேஸ் மோகம் குறைந்தது. இறுதியில் ஃபேஸ்புக் இன்று உலகின் பிரபலமான சமூக வலைத்தளமாக இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
Truth about where Tech breakthroughs really came from Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X