மைக்ரோசாப்ட் எக்ஸெல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

By Meganathan
|

மைக்ரோசாப்ட் நிறுவனம் எக்ஸெல் Excel 2010 பதிவை வெளியிட்டது. அந்த பதிவில் பல புதிய அம்சங்களையும் சேர்த்திருக்கின்றது. எக்ஸெல் மென்பொருள் மூலம் தினசரி வேலைகளை திட்டமிடுவதோடு பெரும் பங்காற்றுகின்றது எனலாம். அத்தகைய மென்பொருள் குறித்து உங்களுக்கு தெரிய வேண்டிய சில அம்சங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

 One Click to Select All

One Click to Select All

Ctrl + A க்ளிக் செய்தால் பக்கத்தில் இருக்கும் அனைத்தையும் செலக்ட் செய்ய முடியும் என்று அனைவருக்கும் தெரியும், ஆனால் படத்தில் காணப்படும் குறியை க்ளிக் செய்தாலும் எக்ஸெல் பக்கத்தில் இருக்கும் அனைத்தையும் செலக்ட் செய்ய முடியும்.

 Open Excel Files in Bulk

Open Excel Files in Bulk

பல எக்ஸெல் ஃபைல்களை ஒரே நேரத்தில் திறக்க முடியும், இதற்கு திறக்க வேண்டிய ஃபைல்களை தேர்வு செய்து கீபோர்டில் இருக்கும் என்டர் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது தேர்வு செய்த ஃபைல்கள் அனைத்தும் திறக்கும்.

 Shift Between Different Excel Files

Shift Between Different Excel Files

நிறைய ஸ்ப்ரெட்ஷீட்களை திறந்து வைத்திருக்கும் போது Ctrl + Tab பட்டனை க்ளிக் செய்தால் ஒவ்வொன்றையும் மாற்றி பார்க்க முடியும்.

Create a New Shortcut Menu

Create a New Shortcut Menu

டாப் மெனுவில் பொதுவாக சேவ், அன்டூ டைப்பிங் மற்றும் ரிப்பீட் டைப்பிங் ஆப்ஷன்கள் இருக்கும், இதை மேலும் ஆப்ஷன்களை கூட்ட File->Options->Quick Access Toolbar, ஃபைல் - ஆப்ஷன்ஸ் - க்விக் அக்செஸ் சென்று ஷார்ட்கட்களை சேர்த்து கொள்ளலாம்.

Add a Diagonal Line to a Cell

Add a Diagonal Line to a Cell

சில சமயங்களில் வரிசை மற்றும் பத்திகளை வித்தியாசப்படுத்தி காட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் அப்பொழுது பொதுவாக ஹோம் சென்று ஃபான்ட் தேர்வு செய்து பார்டர்களை பிரிக்க முடியும், வித்தியாசப்படுத்த முடியும் என்று உங்களுக்கு தெரியும். இதை செய்யும் போது அதிக முறை க்ளிக் செய்தால் அதிக பார்டர்களை உருவாக்கலாம்.

Add More Than One New Row or Column

Add More Than One New Row or Column

சில சமயங்களில் கூடுதலாக வரிசை மற்றும் பத்திகளை சேர்க்க வேண்டியிருக்கும், தேவையான செல்களை தேர்வு செய்து ரைட் க்ளிக் செய்து இன்ஸர்ட் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

Speedily Move and Copy Data in Cells

Speedily Move and Copy Data in Cells

வேகமாக டேட்டாக்களை காப்பி செய்ய பார்டரில் தெரியும் அம்பு குறியை க்ளிக் செய்து நகர்த்த முடியும்.

Speedily Delete Blank Cells

Speedily Delete Blank Cells

காலியாக இருக்கும் செல்களை அழிக்க டேட்டா சென்று பில்ட்டர் ஆப்ஷனை தேர்வு செய்து செலக்ட் ஆல் ஆப்ஷனில் ப்ளான்க் தேர்வு செய்து டெலீட் செய்யலாம்.

 Vague Search with Wild Card

Vague Search with Wild Card

Ctrl + F பயன்படுத்தி எதையும் வேகமாக தேட முடியும் ஆனால் இதை தவிர்த்து கேள்விகுறி மற்றும் ஆஸ்டெரிஸ்க் பயன்படுத்தி வேக் சர்ச் செய்லபடுத்தலாம்.
Generate a Unique Value in a Column

பில்ட்டர்

பில்ட்டர்

பிலட்டர் பற்றி அனைவருக்கும் தெரியும், ஆனால் சிலர் அட்வான்ஸ்சடு பில்ட்டர் பயன்படுத்த விரும்புவர். குறிப்பிட்ட எண்களுக்கு மட்டும் இதை மேற்கொள்ள டேட்டா - அட்வான்ஸ்டு ஆப்ஷனை க்ளிக் செய்தால் புதிய விண்டோ திறக்கும் அதை காப்பி செய்து வேற இடத்தில் வைக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Tricks That Can Make Anyone An Excel Expert. Here you will find Tricks That Can Make Anyone An Excel Expert and it is really interesting.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X