ஜியோ முதல் ஏர்டெல் வரை எல்லோருக்கும் ஆப்பு.? உஷராகிக்கோ.!!

மிகவும் மெதுவான இணைய வேகம்.? மிகவும் மோசமான கவரேஜ்.? வரையறுக்கப்பட்ட ப்ரவுஸிங்கில் அதிகப்படியான டேட்டா செலவு.?

Written By:

நீங்கள் ஒரு விலையுயர்ந்த 4ஜி கட்டண திட்டத்தின் சந்தாதாரராக இருக்கும் போதிலும் கூட மிகவும் மெதுவாக இணைய வேகத்தை அனுபவிக்கிறீர்களா.? அல்லது மிகவும் மோசமான கவரேஜ் சிக்கலை அனுபவிக்கிறீர்களா.? அல்லது ஒரு வரையறுக்கப்பட்ட ப்ரவுஸிங்தனில் ஈடுபடும் போதிலும் கூட அதிகப்படியான டேட்டா செலவாகும் சிக்கலை எதிர் கொள்கிறீர்களா.?

இனிமேல் இதுபோன்ற நுகர்வோர் பிரச்சினைகள் சார்ந்த கவலைகள் உங்களுக்கு வேண்டாம். உங்களுக்காக களத்தில் குதிக்கிறது - ட்ராய்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

எதிரான முடிவு

இந்திய தொலைத்தொடர்புரெகுலேட்டர் ஆன ட்ராய், நாட்டில் உள்ள தொலைத்தொடர்பு விதி மீறல்களின் ஒரு பகுதியாக நுகர்வோர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு எதிரான முடிவுகளை எடுக்கவுள்ளது. இதனால் நமக்கு என்னென்ன நன்மைகளும், ஆர் ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்களுக்கு என்னென்ன சிக்கல்கள் உருவாகும்.?

வெளிப்படைத்தன்மை

'கட்டண மதிப்பீடு ஒழுங்குமுறை கோட்பாடுகள்' என்ற ஒரு ஆலோசனை காகிதத்தின் கீழ் கட்டண திட்டங்களின் வெளிப்படைத்தன்மை; விளம்பர திட்டங்கள் மற்றும் அவற்றின் நம்பகத்தன்மை; ஆப்ரேட்டர்களின் எதிர்ப்பு போட்டி நடத்தை; மொபைல் நிறுவனங்களின் வேட்டையாடும் விலை மற்றும் ஆதிக்கம் ஆகிய விடயங்கள் கவனத்திற்குள் கொண்டுவரப்பட உள்ளது.

ஏகப்பட்ட புகார்கள்

ஏற்கனவே கட்டண திட்டங்களின் வெளிப்படைத்தன்மை பற்றி நுகர்வோர்களிடம் இருந்து ஏகப்பட்ட புகார்கள் வந்தவண்ணம் இருக்க இனி நுகர்வோருக்கு போதுமான வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் மற்றும் பல ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் நிகழ்த்தப்படும் என்று ட்ராய் அறிவித்துள்ளது.

தரவு சேவைகள்

ரிலையன்ஸ் ஜியோவை குறிப்பிடாமல் "தரவு சேவைகள் மிகவும் பிரபலமாக உள்ளது மற்றும் டேட்டா சலுகைகள் வாடிக்கையாளர்களின் இழப்பில் ஒரு கணிசமான பகுதியாக மாறிவிட்டது. எனினும், இது தொடர்பாக பல புகார்களும் பெற்றுக்கொண்டே தான் இருக்கின்றோம்" என்று ட்ராய் கூறியுள்ளது.

கொள்கையின் கீழ்

தரவு சலுகைகள் என்று பார்க்கும் போது இரவு பயன்பாடு சார்ந்த அடித்தள நிலைமைகளை வெளிப்படுத்துவதும் மற்றும் நியாயமான பயன்பாடு கொள்கையின் கீழ் தரவு வேக குறைப்பு சார்ந்த தெளிவுகளையும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்துவதும் முக்கியமாகிறது என்று ட்ராய் அறிவித்துள்ளது.

விளம்பர தரவு

மேலும் வாக்களித்த வண்ணம் இல்லாத, அதாவது தரமில்லாத சேவை மற்றும் நெட்வொர்கிற்கு சிறந்த சேவைகளுக்காக வசூலிக்கப்படும் கட்டணம் குறித்தும் ட்ராய் பேசுகிறது. அதாவது "விளம்பர தரவு (ஜியோவை குறிப்பிடாமல்) வழங்கும் போது, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நுகர்வோர்களுக்கு சமீபத்திய தொழில்நுட்பம் மூலமான கவரேஜ் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது.

அதிருப்தி

"உண்மையில் தற்போதைய நெட்வொர்க்குகள் 2ஜி/3ஜி/4ஜி தொழில்நுட்பங்களின் ஒரு கலவையாக இருக்கும் சேவைகளையே வழங்குகிறது இதன் மூலம் இணைப்புகளில் மட்டுமே நுகர்வோர்கள் சமீபத்திய தொழில்நுட்பத்தை அனுபவிக்கின்றனர். இது நுகர்வோர்களுக்கு அதிருப்தியை வழிவகுக்கிறது" என்றும் ட்ராய் கூறியுள்ளது.

பிரதம பிரச்சினை

கட்டண திட்டங்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பது தான் கவனத்திற்கு கொண்டுவர வேண்டிய ஒரு பிரதம பிரச்சினையாக உள்ளது என்று தெரிவித்துள்ள ட்ராய், நுகர்வோர்களின் நலன்களை பாதுகாக்க கட்டண சலுகைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு பல திசைகளில் மற்றும் பல வழிமுறைகளை வெளியிட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளது.

குற்றசாட்டுகள் மற்றும் விமர்சனங்கள்

ரிலையன்ஸ் ஜியோ அறிமுகமான நாளில் இருந்தே இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் அனுதினமும் ஒரு சிக்கல் வெடிப்பதும், அதற்கான குற்றசாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் எழுவதும், ட்ராய் விளக்கம் கேட்பதுமாகேவ போய்க்கொண்டிருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

நம்ம மார்க்'கும் இந்திய பிரதமரும் போடும் புது 'அரசியல்' பிளான்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Trai looks into non-transparent data billing, poor 4G coverage by telcos. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்