விரைவில் இலவச டேட்டா கொடுப்போம் , டிராய் ஆலோசனை!!

இலவச டேட்டா என்றதும், எங்கு யார் தருகின்றார்கள் கட்டணம் எவ்வளவு எனக் கேட்காதீர்கள். இந்தத் திட்டம் மிக விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாகத் தற்சமயம் தகவல்கள் வெளியாகியுள்ளன..

Written By:

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி இண்டர்நெட் சேவை அறிவிக்கப்பட்டது துவங்கி இந்திய டெலிகாம் சந்தையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. இவை அனைத்தும் பயனர்களுக்குப் பணம் மிச்சம் செய்யும் படி அமைந்தது.

தீபாவளி பண்டிகை நெருங்கும் வேலையில் பல்வேறு நிறுவனங்களும் இலவச டேட்டா, ரோமிங் போன்ற திட்டங்களை அறிவித்து வருகின்றன. இவற்றைத் தொடர்ந்து பயனர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் தகவல் ஒன்றை டிராய் அறிவித்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

இலவச டேட்டா

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இலவச டேட்டா திட்டங்களைச் செயல்படுத்த இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

விவாதம்

ஐதராபாத் நதரில் நேற்று நடைபெற்ற பொது விவாதத்தில் இலவச டேட்டா திட்டம் செயல்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பரிசீலனை

இந்த விவாவதத்தில் டெலிகாம் நிறுவன அதிகாரிகள், ஸ்டார்ட்அப் நிறுவன அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்துப் பரிசீலனை செய்யப்படும் என டிராய் தலைவர் ஷர்மா தெரிவித்துள்ளார்.

பயன்பாடு

குறிப்பிட்ட இணையத்தளங்களைத் திறக்கும் போது அதில் இடம் பெற்றிருக்கும் தரவு மட்டுமின்றிப் பல்வேறு விளம்பரங்களில் மக்கள் டேட்டா வீணடிக்கப்படுகின்றது என ஷர்மா தெரிவித்துள்ளார்.

நடவடிக்கை

கூகுள், ஃபேஸ்புக் மற்றும் இதர நிறுவனங்களின் சார்பாக விவாதத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டுள்ளது. விளம்பரங்கள் தவிர்க்க முடியாது என்ற போதும் பயனர் டேட்டா செலவிடப்படுவது நியாயமற்றது என்றும் ஷர்மா தெரிவித்துள்ளார்.

தீர்வு

இந்தப் பிரச்சனைக்குத் தற்சமயம் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை என்றாலும் விரைவில் வல்லுநர் குழு பரிந்துரையின் கீழ் தீர்வு காணப்படும் என ஷர்மா உறுதியளித்திருக்கின்றார்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!English summary
Trai to come out with Free Data Architecture soon
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்