டோரண்ட் உடன் இண்டர்நெட்டில் உள்ள 6 சட்டவிரோத செயல்கள் எவை தெரியுமா?

Written by: Super Admin

இண்டர்நெட்டை பயன்படுத்தாத நபர்களே தற்போது இல்லை என்று கூறலாம். இண்டர்நெட்டில் நல்லதும் கெட்டதும் கோடிக்கணக்கில் குவிந்துள்ளதால் எது தேவை என்றாலும் நாம் இண்டர்நெட்டைத்தான் அணுகுகிறோம்.

டோரண்ட் உடன் இண்டர்நெட்டில் உள்ள 6 சட்டவிரோத செயல்கள் எவை தெரியுமா?

அதே நேரத்தில் டோரண்ட் உள்பட காப்பிரைட் உள்ள பகுதிகளை நாம் பயன்படுத்தினால் சட்டவிரோதம் என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ஐபோன் 7 ரகிசய புகைப்படம் மற்றும் வெளியீட்டுத் தேதி கசிந்துள்ளது.!!

டோரண்ட் உபயோகித்து காப்பி பேஸ்ட் செய்தால் மூன்று வருடம் ஜெயில் என வதந்தி பரவி வந்தாலும் டோரண்ட் கண்டிப்பாக ஒரு சட்டவிரோதம் என்பதை மட்டும் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்

ரிலையன்ஸ் ஜியோ மீது எகிறும் எதிர்பார்ப்புகள், பீதியில் மற்ற நிறுவனங்கள்.??

இதுபோக வேறு என்னவெல்லாம் இண்டர்நெட்டில் சட்டவிரோதம் என்பதை பார்ப்போமா?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

டோரண்ட் காப்பிரைட் சட்டவிரோதமா?

டோரண்ட் என்பது சட்டவிரோதம் இல்லை. ஆனால் அதே நேரத்தில் காப்பிரைட் உரிமை உள்ள திரைப்படங்கள், பாடல்கள், ஃபைல்கள் போன்றவற்றை குறிப்பிட்டவர்களின் அனுமதி இல்லாமல் டவுண்லோடு செய்வது அல்லது அப்லோட் செய்வது சட்டவிரோதம்.

சமூக வலைத்தளங்களில் கேலி செய்வது:

சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகள் ஆரம்பித்து தனக்கு பிடிக்காதவர்களையோ அல்லது பிரபலங்களையோ அளவுக்கு மீறி கேலி செய்வது குற்றமாகும். எதுவுமே எல்லை மீறுவது குற்றம் என்பதை போல இதுவும் குறிப்பிட்ட எல்லையை மீறினால் உங்களுக்கு தொல்லைதான்.

மனதளவில் கொடுமைப்படுத்துதல்:

இண்டர்நெட்டில், சமூக வலைத்தளங்களில் மற்றவர்களை அசிங்கமாக விமர்சனம் செய்வது குறிப்பாக பெண்களை கேலி செய்வது கடுமையான குற்றமாக கருதப்படுகிறது. எப்போதுமே சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற நபர்களிடம் இருந்து ஒதுங்கியிருப்பது நமக்கும் நமது மன நிம்மதிக்கும் நல்லது.

வீடியோ அழைப்பை பதிவு செய்யலாமா?

தற்போது வீடியோ அழைப்பில் பேசுபவர்களின் வீடியோவை பதிவு செய்யும் முறை வந்துவிட்டது. இது உற்சாகமானதுதான் என்றாலும் வீடியோ அழைப்பில் வீடியோவை சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியின்றி பதிவு செய்யக்கூடாது. மேலும் அவ்வாறு பதிவு செய்த வீடியோவை பொது இடத்தில் பயன்படுத்துவது மிகப்பெரிய குற்றம்

பொய்யான முகம் தேவையா?

பலர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறும்போது போலியான பெயர்களையும் பயன்படுத்தாத இமெயிலையும் பதிவு செய்வார்கள். இதுவும் குற்றம்தான். கண்டனக் கருத்துகளாக மென்மையாகவும், அதே நேரத்தில் ஒரிஜினல் பெயருடன் பதிவு செய்யுங்கள்.

வேறொருவரின் இண்டர்நெட்டை பயன்படுத்தலாமா?

தற்போது வைஃபை வசதி அனைத்து இடங்களிலும் வந்துவிட்டது. ஒருசிலர் தங்கள் வைஃபை இணைப்பை பாஸ்வேர்டு போட்டு வைக்காமல் பயன்படுத்துவார்கள். அவ்வாறான இணைய இணைப்பை அவர்களுடைய அனுமதி இன்றி பயன்படுத்துவது குற்றமாகும். எவ்வளவோ செலவு செய்றோம். ஒரு இண்டர்நெட் பேக் நம்மால் போட முடியாதா? இதில்கூட ஏன் திருட்டுத்தனம் தேவை

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!Read more about:
English summary
Using torrents and downloading and uploading copyrighted content via the same has become illegal right now. Take a look at some things such as trolling, cyberbullying, etc. that are illegal online. Read more...
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்