2016-ல் மாபெரும் குழப்பத்தை உருவாக்கிய டாப் 5 போலி செய்திகள்.!

இந்த 2016-ஆம் ஆண்டில் ஆம் ஆண்டில் ஆன்லைன் / சமூக வலைத்தளங்கள் மூலம் லட்சோப லட்சம் மக்களை சென்றடைந்த 5 அதிர்ச்சி தரும் போலி செய்திகள்.

Written By:

இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் தான் நாம் அதிக அளவிலான தகவல்களை எளிமையாக கண்டறிய உதவும் பெரிய வளங்கள் ஆகும். ஆனால், அவற்றில் வெளியாகும் சில தவறான தகவல்களும் காட்டுத்தீ போல பரவி, பெறும் குழப்பங்களையும் கூச்சல்களையும் கிளப்பி விடும் நிகழ்வுகள் ஆன்லைன் உலகில் படு சாதாரணம்.!

அப்படியான போலி செய்திகள் மூலம் ஏற்படும் குழப்பங்கள் இந்த 2016-ஆம் ஆண்டையும் விட்டுவைக்கவில்லை.!

இன்னும் சொல்லப்போனால் எந்தவொரு ஆண்டை விடவும் இந்த 2016-ஆம் ஆண்டில் பெருவாரியாக உலகம் முழுவதும் பல போலி செய்திகள் ஆன்லைனில் - முக்கியமாக பேஸ்புக் மற்றும் ட்விட்டர் மூலம் பரவி பெருங் குழப்பத்தை ஏற்படுத்தின. அவ்வாறான 2016-ஆம் ஆண்டின் டாப் 5 போலி செய்திகள் என்னென்ன.? எந்த செய்திக்கு முதல் இடம் என்பதை பற்றிய தொகுப்பே இது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

போலி செய்தி #05 : விண்வெளியில் இருந்து பேஸ்புக் லைவ்.?!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்து பேஸ்புக் லைவ் ஒன்று நடப்பதாக பேஸ்புக் சமூக ஊடகம் முழுவதும் பரவி கிட்டத்தட்ட 2 மில்லியன் லைக்ஸ், 400 ஆயிரம் ஷேர்ஸ் மற்றும் 280 ஆயிரம் வியூஸ் பெற்றது. அது ஒரு போலியான தகவலாகும். நீங்களும் இதை ஷேர் அலல்து லைக் செய்தவர்களில் ஒருவராக இருப்பின் - ஐ யம் வெரி சாரி..!!

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

போலி செய்தி #04 : அமெரிக்க தேர்தல் முடிவு வரைபடம்.??

அமெரிக்க அதிபர் தேர்தலில் டோனல் டிரம்ப் எதிர்பாராத வெற்றியை தொடர்ந்து, அந்த வெற்றி சார்ந்த அவநம்பிக்கை பெருமளவு சமூக ஊடகங்களில் கிளம்பின, அதாவது அந்த வெற்றியை முதலில் யாரும் நம்பவே இல்லை. அதை நிரூபிக்கும் முயற்சியாக சமூக ஊடகங்களில் அமெரிக்க தேர்தல் முடிவு சார்ந்த ஒரு வரைபடம் வெளியானது. அதில் பெருவாரியான இடத்தை டிரம்ப் கைப்பற்றியுள்ளதை அதை காட்சியும் படுத்தியது. அது போலியான ஒரு வரைபடம் ஆகும். உண்மையில் அது 2013--ஆம் ஆண்டின் அமெரிக்க குற்ற விகிதம் சார்ந்த வரைபடம் ஆகும்.

போலி செய்தி #03 : தி சிம்ப்சன்ஸ் கார்டூன் ஒரு தீர்கதரசி.!!?

மூன்றாவது இடத்தை பிடித்திருப்பதும் டிரம்ப் தான். பிரபல கார்ட்டூன் கதாபாத்திரமான தி சிம்ப்சன்ஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றியை முன்னரே கணித்து என்ன நடக்கும்.? எப்படி நடக்கும் என்பது முதற்கொண்டு அனைத்தயும் முன்னரே நிகழ்ச்சியாக வழங்கியதாக சமூக ஊடகங்கள் முழுதுவதும் செய்திகள் பரவின. ஆனால் இது அனைத்துமே உண்மையில்லை என்று பின்னர் கண்டறியப்பட்டது. இதை அப்பட்டமாக அப்படியே நம்பி மாறி மாறி லைக்ஸ் போட்டவர்களில் அடியேனும் ஒருவன் (ஹா ஹா ஹா).!!

போலி செய்தி #02 : 'இது' அம்பானிக்கு முன்னரே தெரியும்.!

நான்காவது இடத்தை பிடித்திருப்பது திரு.நரேந்திர மோடியின் ஆதரவோடு நமது ரிலையன்ஸ் ஜியோ 'சூறாவளி' முகேஷ் அம்பானி. அதாவது, இந்தியாவில் ரூ.1000/- மற்றும் ரூ.500/- நோட்டுகள் தடை செய்யப்படுவதை முன்னரே அறிந்துதான் முகேஷ் அம்பானி தனது அனைத்து கருப்பு பணத்தையும் ரிலையன்ஸ் ஜியோ என்ற புதிய நிறுவனம் மூலம் இலவசங்கள் என்ற பெயரில் அள்ளியள்ளி வழங்கினார் என்று தீயாக வாட்ஸ்ஆப் செய்தி ஒன்று பரவியது. பின்னர் அது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பரவியது. ஆர்.ஜியோ நிறுவனம் அதன் ஹேப்பி நியூ இயர் ஆபரை வழங்கியபின்னரும் கூட இன்று வரை அந்த செய்தி பரவிக் கொண்டே தான் இருக்கிறது.

போலி செய்தி #01 : ஜே.ஜெயலலிதாவின் மரணம்.!?

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்துவிட்டார் என்று அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகும் முன்னரே தனியார் சேனல் ஒன்று ஜெயலலிதாவின் உயிர் பிரிந்தது என்று செய்தியிட பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்ஆப் என அனைத்து வகையாக சமூக வலைத்தளங்களிலும் #ரிப்_அம்மா என்ற ஹேஷ்டேக் பதிவுடன் இரங்கல் செய்திகள் பொங்கி வழிந்தன. பின்னர் அது வெறும் புரளி என்று அறிவிக்கப்பட்டது. (மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் பல மர்மமங்கள் இருப்பினும் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவிய போலி செய்திகள் என்ற தலைப்பின்கீழ் இந்த செய்தியும் வருவது நியாயமானது தான் வாசகர்களிடம் பகிர விரும்புகிறோம்).

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Top 5 fake news which create chaos on online and social media in 2016. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்