ஐஎஃப்ஏ 2015 செப்டம்பர் : வெளியாக இருக்கும் ஸ்மார்ட்போன்கள்..!

By Meganathan
|

இந்தாண்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப திருவிழா சில மணி நேரங்களில் துவங்க இருக்கும் நிலையில் பெரும்பாலான ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்களது புதிய கருவியினை வெளியிட தயாராகி வருகின்றன என்று தான் கூற வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் நடைபெறும் உலகின் மிக முக்கிய தொழில்நுட்ப திருவிழாவாக கருதப்படும் ஐஎப்ஏ இந்தாண்டும் சிறப்பாக துவங்க இருக்கின்றது. செப்டம்பர் 4 ஆம் தேதி துவங்கும் இவ்விழா செப்டம்பர் 9 ஆம் தேதி நிறைவு பெறுகின்றது.

ரூ.7000க்கு கிடைக்கும் தலைசிறந்த 4ஜி ஸ்மார்ட்போன்கள்..!

சோனி, சாம்சங், ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் பல நிறுவனங்களின் கருவிகள் இம்மாதம் அறிவிக்கப்பட்டு அடுத்த மாதத்தில் வெளியாகலாம் என எதிர்பார்ப்புகள் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் தருவாயில் அதிகம் எதிர்பார்க்கப்படும் சில ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

சோனி எக்ஸ்பீரியா இசட் 5 :

சோனி எக்ஸ்பீரியா இசட் 5 :

ஐஎப்ஏ விழாவில் சோனி நிறுவனம் ஏதேனும் ஒரு கருவியை வெளியிட்டு வரும் வேலையில் இந்தாண்டு அந்நிறுவனம் எக்ஸ்பீரியா இசட் 5 கருவியை வெளியிடலாம் என்றே சந்தை வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

எல்ஜி ஜி4 நோட் :

எல்ஜி ஜி4 நோட் :

இந்தாண்டின் இறுதியில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட எல்ஜி நிறுவனத்தின் ஜி4 நோட் கருவி ஐஎப்ஏ விழாவிகல் அறிமுகம் செய்யப்படலாம். மேலும் வளைந்த டிஸ்ப்ளே கொண்டு இந்த கருவியானது கேலக்ஸி எஸ்6 எட்ஜ் கருவிக்கு போட்டியாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

சாம்சங் ஓ :

சாம்சங் ஓ :

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஓ பிரிவில் புதிய கருவிகளை உருவாக்கி வருவதாகவும் இது குறித்த அறிவிப்புகள் நாளை செப்டம்பர் 3 ஆம் தேதி அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

எச்டிசி ஓ2 :

எச்டிசி ஓ2 :

எச்டிசி நிறுவனம் தனது அடுத்த பெரிய கருவியாக எச்டிசி ஓ2 கருவியினை ஐஎப்ஏ 2015 விழாவில் வெளியிடலாம்.

மைக்ரோசாப்ட் லூமியா :

மைக்ரோசாப்ட் லூமியா :

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய இயங்குதளமான விம்டோஸ் 10 கொண் புதிய லூமியை கருவிகளை அந்நிறுவனம் இவ்விழாவில் அறிவிக்கலாம் என்றும் அவை பெரும்பாலும் லூமியா 950 மற்றும் 950எக்ஸ்எல் ஆக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹூவாய் மேட் எஸ் :

ஹூவாய் மேட் எஸ் :

ஐஎப்ஏ விழாவில் தவறாது கலந்து கொள்ளும் நிறுவங்களில் ஒன்றான ஹூவாய் மேட் எஸ் மாடலில் மேட் 7எஸ் மற்றும் மேட் 8எஸ் போன்ற கருவிகளை வெளியிடலாம்.

லெனோவோ வைப் :

லெனோவோ வைப் :

வைப் எஸ்1 எனும் புதிய கருவியினை லெனோவோ நிறுவனம் தயாரித்து வருவதாகவும் அந்த கருவியானது இவ்விழாவில் அரிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

ஏசர் விண்டோஸ் 10 :

ஏசர் விண்டோஸ் 10 :

விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்ட புதிய கருவிகளை ஏசர் நிறுவனம் வெளியிட திட்டமிட்டிருப்பதாக தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்பிள் ஐபோன் 6 எஸ் :

ஆப்பிள் ஐபோன் 6 எஸ் :

செப்டம்பர் 9 ஆம் தேதி ஆப்பிள் நிறுவனம் ஊடகங்களை சந்திக்க அழைத்திருப்பதை கொண்டு அந்நிறுவனம் ஐபோன் 6எஸ் கருவி வெளியீடு சார்ந்த தகவல்களை வழங்கலாம் என்றே தெரிகின்றது.

ஆப்பிள் ஐபோன் 6எஸ் ப்ளஸ் :

ஆப்பிள் ஐபோன் 6எஸ் ப்ளஸ் :

செப்டம்பர் 9 ஆம் தேதியே ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் ஐபோன் 6எஸ் ப்ளஸ் கருவியை அறிவிக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Checkout here about the Top 10 smartphones expected to launch September. Read more about this in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X