ஃபேஸ்புக் : பாதுகாப்பு முக்கியம் மக்களே..!!

Posted by:

'மார்க் சூக்கர்பர்க்' இன்று பெரும்பாலான வீடுகளில் ஏற்படும் சண்டைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கும் ஒரு தனி நபர் என்பதோடு இதற்காகவே பெரிய நிறுவனத்தையே நடத்தி வருகிறார் என்றும் கூறலாம்.

தினமும் அதிக பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் ஃபேஸ்புக் உலகை விட்டு நிரந்திரமாக வெளிவேற முடியாதவர்கள், இந்த சமூக வலைதளத்தில் பாதுகாப்பாக இருக்க சில வழி முறைகளையே இங்கு தொகுத்திருக்கின்றோம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

காண்டாக்ட்

ஃபேஸ்புக்கில் எக்காரணத்தை கொண்டும் உங்களது மொபைல் நம்பரை என்டர் செய்யவே கூடாது.

மின்னஞ்சல்

மின்னஞ்சல்களின் மூலம் அதிகளவிலான ஸ்பேம் வருவதோடு இதன் மூலம் ஹேக்கர்கள் உங்களது மின்னஞ்சலினை ஹேக் செய்ய அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.

லாக் இன்

ஃபேஸ்புக் லாக் இன் செய்யும் போது கீப் மீ லாக்டு இன் எனும் ஆப்ஷனை க்ளிக் செய்வது உங்களது பாதுகாப்பினை குறைத்து விடும். என்றாவது உங்களது லாப்டாப் தொலைந்து போனால் உங்களது ஃபேஸ்புக் கணக்கு, லாப்டாப் பயன்படுத்துவரோக்கு மிகவும் எளிமையாக கிடைத்து விடும்.

பொது கணினி

முந்தைய ஸ்லைடரில் குறிப்பிட்டதை போன்றே பொது இடங்களில் கணினிகளை பயன்படுத்தினால் கீப் மீ லாக்டு இன் ஆப்ஷனை க்ளிக் செய்யாமல் இருப்பது நல்லது.

ஃப்ரென்டு ரிக்வஸ்ட்

முன்பின் தெரியாவதர்களின் ஃப்ரென்டு ரிக்வஸ்ட்களை ஏற்பது என்றாவது பிரச்சனையில் தான் முடியும்.

மின்னஞ்சல்

ஃபேஸ்புக் மூலம் உங்களது மின்னஞ்சல் முகவரியை தெரியாத நபர்களிடம் அளிக்க வேண்டாம், இவ்வாறு செய்வது பல பின் விளைவுகளுக்கு காரணமாக அமையும்.

பயணம்

வெளியூர் பயணங்களை மேற்கொஷள்ளும் போது அவைகளை ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்வது திருட்டு சம்பவங்களுக்கு வழி வகுக்கலாம்.

ஃப்ரென்டு ரிக்வஸ்ட்

இவ்வாறு செய்வது கட்டாயம் இல்லை, உங்களது அலுவக நண்பர்களின் ஃப்ரென்டு ரிக்வஸ்ட்களை ஏற்க வேண்டாம், ஃப்ரென்டு ரிக்வஸ்ட்களை ஏற்று பின் அவர்களை தவிர்க்க வேண்டிய சில போஸ்ட்களை போடுவதில் சிரமம் ஏற்படலாம்.

பொது

ஸ்டேட்டஸ் அல்லது புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் போடும் போது குறிப்பிட்ட போஸ்ட் நண்பர்களுக்கு மட்டும் தெரியும் படி வைப்பது நல்லது. பொதுவாக வைப்பது பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். குறிப்பாக உங்களது புகைப்படங்கள் தவறான காரியங்களுக்காக பயன்படுத்தப்படலாம்.

ஆன்டிவைரஸ்

வாரம் ஒரு முறை உங்களது ஆன்டிவைரஸ் மென்பொருளை அப்டேட் செய்வது நல்லது. அதிகப்படியான மால்வேர் தாக்குதல்களுக்கு ஃபேஸ்புக் உட்படுத்தப்படுகின்றது மிகவும் சாதாரண விஷயமாகி விட்டது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Check out here the Top 10 Security Tips for Facebook. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்