மாணவர்களுக்கான டாப் 10 இண்டர்நெட் திட்டங்கள்..!

|

சமீபத்தில், ரிலையன்ஸ் ஜியோவின் மிகக் குறைந்த 4ஜி கட்டண தரவு, இலவச வாய்ஸ் கால்கள் மற்றும் வரவிருக்கும் மலிவு விலை திட்டங்களின் அறிமுகமானது பிற இணைய மற்றும் பிராட்பேண்ட் சேவை வழங்குநர்களின் கட்டணங்களை திருத்தவும், ஜியோவுடன் போட்டி போடும் சலுகைகளை (3ஜி மற்றும் 4ஜி) வழங்கவும் கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளன என்றே கூறலாம்.

அப்படியாக வெளியாகும் பெரும்பாலான திட்டங்கள் ஆனது அதிக அளவிலான இண்டர்நெட்டை பயன்படுத்தும் மாணவர்களை தான் மனதில் கொண்டு தான் வழங்குநர்கள் தங்களின் புதிய தீர்வைகளையும், திட்டங்களையும் வகுக்கின்றனர்.

அபப்டியாக, படிக்கும் மாணவர்களுக்காவே சில அருமையான இண்டர்நெட் திட்டங்களை அணைத்து சேவை வழங்குநர்களும் கொண்டுள்ளன அதில் டாப் 10 இணைய திட்டங்கள் பற்றிய தொகுப்பே இது..!

ரிலையன்ஸ் ஜியோ :

ரிலையன்ஸ் ஜியோ :

அறிமுக சலுகையின் கீழ் 3 மாத காலம் நீடிக்கும் 4 ஜிபி அளவிலான இலவச தரவை பெற முடியும். உடன் ஜிகாபைபர் பிராட்பேண்ட் திட்டத்தின் கீழ் ரூ.400/-க்கு ஒரு நாள் செல்லுபடியாகும் வரம்பற்ற தரவும், நாள் ஒன்றிருக்கு 3.5 ஜிபி அளவிலான மாதம் முழுவதும் நீடிக்கும் ரூ.5,000/- திட்டம் வரை ஜியோ இண்டர்நெட் சேவை நீள்கிறது.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பிஎஸ்என்எல் :

பிஎஸ்என்எல் :

ரிலையன்ஸ் ஜியோவை தொடர்ந்து இந்திய அரசு நடத்தும் பிஎஸ்என்எல் ரூ.249/-க்கு அறிமுகப்படுத்தியுள்ள திட்டத்தில் மாதத்திற்கு 300ஜிபி அளவிலான தரவு வரம்பு கொண்ட இண்டர்நெட் திட்டத்தை வழங்குகிறது

ஏர்டெல் :

ஏர்டெல் :

பார்தி ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூ.1,498/-க்கு ரீசார்ஜ் செய்ய ஒரு சிறப்பு சலுகையாக 28 நாள்கள் செல்லுபடியாகும் 1ஜிபி அளவிலான 4ஜி மற்றும் 3ஜி டேட்டாவை பெற முடியும். 1ஜிபி அளவிலான தரவு வரம்பு கடந்த பின்னர் வாடிக்கையாளர்கள் ரூ.53/- ரீசார்ஜ் செய்வதின் மூலம் மேலும் ஒரு மாத காலத்திற்கு 1ஜிபி அளவிலான 4ஜி/3ஜி தரவை பெற முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வோடாபோன் :

வோடாபோன் :

தன் பங்கிற்கு வோடபோன் 'ஃப்ளெக்ஸ்' என்ற சிறப்பு சலுகை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது அதில் 1 ஃப்ளெக்ஸ் என்றால் 1 எம்பி அளவிலான தரவு மற்றும் 1 நிமிட உள்வரும் அழைப்பிற்கு சமம் என்று அர்த்தம். அப்படியாக, ரூ.119/-க்கு தொடங்கும் ஃப்ளெக்ஸ் திட்டமானதில் 325 ஃப்ளெக்ஸ் வழங்கபப்டும் அதனை தரவு அல்லது குரல் அழைப்புகள் என ஏதாவது ஒன்றை பயன்படுத்த முடியும். அதிகபட்ச கட்டண திட்டமாக ரூ.399/-க்கு 1,750 ஃப்ளெக்ஸ்கள் வழங்கப்படுகிறது மற்றும் அது 28 நாட்கள் செல்லுபடியாகும்.

டாட்டா டோகோமோ :

டாட்டா டோகோமோ :

டாட்டா டோகோமோவிடம் வழங்க நிறைய சலுகைகள் உள்ளது. அதன் 3ஜி திட்டங்கள் 35 எம்பி அளவிலான ரூ.8/-ல் இருந்து 28 நாட்கள் செல்லுபடியாகும் வரம்பற்ற 3ஜி தரவை வழங்கும் ரூ.1,299/- வரை நீள்கிறது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஏர்செல் :

ஏர்செல் :

1 நாள் செல்லுபடியாகும் 40 எம்பி அளவிலான 3ஜி தரவு முதல் அதன் உயர்ந்த கட்டண விளையான ரூ.1,697/-க்கு 20ஜிபி அளவிலான 28 நாட்கள் செல்லுபடியாகும் 3ஜி டேட்டாவை வழங்குகிறது. எனினும் அதன் சிறந்த திட்டமாக ரூ.175 பேக் விளங்குகிறது (28 நாட்கள் செல்லுபடியாகும் 1ஜிபி அளவிலான 3ஜி டேட்டா)

ஐடியா :

ஐடியா :

ரூ.150/-க்கு 15 நாட்கள் செல்லுபடியாகும் 1ஜிபி அளவிலான 4ஜி தரவை ஐடியா வழங்குகிறது. மேலும், மாணவர்களுக்கான ரூ.299/-க்கு 1.25 ஜிபி அளவிலான 3ஜி தரவு பேக் ஒன்றையும் மாணவர்களுக்காக மலிவு விலையில் வழங்குகிறது. நீங்கள் நீண்ட கால திட்டங்களை தேடுபவர் என்றால் ரூ.952/-க்கு 3 மாத காலம் நீடிக்கும் 4ஜிபி அளவிலாம்னா ஐடியாவின் 3ஜி பேக்கை தேர்வு செய்யலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

டாட்டா ஃபோட்டான் :

டாட்டா ஃபோட்டான் :

டாடா ஃபோட்டான் பயனர்கள் ரூ.655/-க்கு 45 நாட்கள் செல்லுபடியாகும் 3.5 ஜிபி அளவிலான தரவை பெற முடியும். அதன் நீண்ட கால திட்டமானது ஒரு வருட காலம் செல்லுபடியாகும் 30ஜிபி அளவிலான மொத்த தரவு வரம்பு கொண்ட ரூ.4, 999/- வரை செல்கிறது. எனினும், அதன் மாத திட்டமானது ரூ.455/-ல் 2.5ஜிபி அளவிலான தரவையும் வழங்குகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

எம்டிஎஸ் :

எம்டிஎஸ் :

எம்டிஎஸ் எம்பிளேஸ் பயனர்கள் ரூ.101/-க்கு 28 நாட்கள் செல்லுபடியாகும் 200 எம்பி அளவிலான தரவை பெற முடியும். அதே நேரத்தில், அவர்கள் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் 28 ஜிபி அளவிலான தரவு மற்றும் 28 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.1,599/- திட்டத்தையும் பெற முடியும்.

ஆக்ட் பைபர்நெட் :

ஆக்ட் பைபர்நெட் :

பீம் ஃபைபர் என்று அறியப்படும் ஆக்ட் பைபர்நெட் சமீபத்தில் ரூ.1,999/-க்கு 100 எம்பிபிஎஸ் வேகம் கொண்ட ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

ஒரே ஒரு மிஸ்டு கால் மூலம் 1ஜிபி இலவச ஏர்டெல் 4ஜி டேட்டா பெறுவது எப்படி..?

Best Mobiles in India

Read more about:
English summary
Top 10 Internet Plans for Students in India. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X