2014 ஆம் ஆண்டின் தலைசிறந்த தொழில்நுட்ப கருவிகள்

Posted by:

2014 ஆம் ஆண்டு பல்வேறு புதிய வகை கருவிகளின் வரவுகளை கண்டது. சில கருவிகள் ஏற்கனவே வெளியான கருவிகளின் மேம்படுத்தப்பட்ட விதமாகவும் சில ஸ்மார்ட்வாட்ச்களும் இந்த பட்டியலில் அடங்கும்.

[2014 ஆம் ஆண்டின் தலைசிறந்த ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்கள்]

அவற்றில் சிறந்த கருவிகளை பட்டியலிடுவது சற்றே சிரமமான காரியமாக இருந்தாலும் இந்தாண்டின் இறுதியில் சிறந்த கருவிகளின் பட்டியலை தொகுத்து இங்கு பட்டியலிட்டுள்ளோம். இந்தாண்டு வெளியானதில் சிறந்த கருவிகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பார்க்க தவறாதீர்கள்...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

1

இதன் விலை ரூ. 62,500
ஆப்பிள் நிறுவனத்தின் முதல் பேப்ளெட் என்ற பெருமையுடன் 5.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டு வெளியிடப்பட்டது ஆப்பிள் ஐபோன் 6+.
மேம்படுத்தப்பட்ட பேட்டரி கொண்டு நீண்ட நேரம் சார்ஜ் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதுடன் புதுமையான கேமரா அம்சங்களும் இதன் விசேஷமாக உள்ளது.

2

இதன் விலை ரூ. 58,300
சாம்சங் பேப்ளெட் வகைகளில் புதிய மாடலாக நோட் 4 வெளியானது. மெட்டல் ப்ரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதோடு பார்க்க சிறியதாகவும், எடை குறைவாகவும் இருக்கின்றது.
5.7 இன்ச் டிஸ்ப்ளே, 2.7 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 805 பிராசஸர், 3 ஜிபி ராம், 32 ஜிபி மெமரியும் கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் உள்ளது. 16 எம்பி ப்ரைமரி கேமராவும், 3.7 எம்பி முன்பக்க கேமராவும் இருப்பதோடு 2014 ஆம் ஆண்டின் சிறந்த பேப்ளெட்கான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது கேலக்ஸி நோட் 4

3

இதன் விலை ரூ. 35,900
ஐபேட் ஏர் பல மேம்படுத்தல்களை கடந்து தங்க வண்னம், கைரேகை ஸ்கேனர், வேகமான பிராசஸர் மற்றும் 8 எம்பி கேமரா இருப்பதோடு 6.1 எம்எம் மெலிதாக இருக்கின்றது.
டச் சென்சார், எல்சிடி பேனல், கவர் கிளாஸ் என மூன்று அடுக்குகளை கொண்ட ஸ்கிரீன் மற்றும் ஏ8எக்ஸ் பிராசஸர் 64-பிட் சிப்செட் கொண்டிருப்பதோடு அட்டகாசமான பேட்டரியையும் கொண்டுள்ளது.

4

இதன் விலை ரூ.17,999
துவக்க காலத்தில் இருந்தாலும் பல நிறுவனங்களின் ஸ்மார்ட்வாட்ச்களை இந்தாண்டு நாம் கடந்து விட்டோம், இருந்தும் மோட்டோ 360 சிறந்தவையாக இருக்கின்றது.
லெதர் ஸ்ட்ராப் கொண்ட மோட்டோ 360 இதய துடிப்பு சென்சார், வயர்லெஸ் சார்ஜிங் டாக் இருப்பதோடு கூகுளின் ஆன்டிராய்டு வியர் மூலம் இயங்குகின்றது.

5

இதன் விலை ரூ.5,999
டச் ஸ்கிரீன் வசதி கொண்ட புதிய கின்டிள் புத்தகங்களை வாசிப்பவர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கின்றதோடு டைப்பிங் வேகமாகவும் முடிகின்றது. மேலும் இதில் கின்டிள் ஃப்ரீடைம், வொகாபுளரி பில்டர் என புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
6th gen கின்டிளை விட 20 சதவீதம் வேகமான பிராசஸர் கொண்டிருப்பதுடன் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற பொருள் கிடைக்கின்றது.

6

இதன் விலை ரூ.2,999
சில தினங்களுக்கு முன் இந்தியாவில் வெளியான கூகுள் க்ரோம்காஸ்ட் குறைந்த விலையில் உங்களது டிவி ஸ்கிரீன்களில் ஆன்லைன் மல்டிமீடியாவை அளிக்கின்றது.
க்ரோம்காஸ்ட் மூலம் ஸ்மார்ட்போன், கணினி, டேப்ளெட்களில் இணைத்து ஆன்லைன் டிவிக்களை பார்க்க முடியும்.

7

இதன் விலை ரூ. 65,900 முதல் கிடைக்கின்றது
செயல்திறன், பேட்டரி மற்றும் வேகம் என அனைத்தும் சிறப்பாக இருக்கும் நோட்புக் என்றால் ஆப்பிளின் மேக்புக் ஏர் மாடலை குறிப்பிடலாம். இன்டெல் 4th gen பிராசஸர் கொண்டு இயங்கும் மேம்படுத்தப்பட்ட மேக்புக் ஏர் 11 மற்றும் 13இன்ச்களில் கிடைக்கின்றதோடு 1.4 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் இன்டெல் கோர் ஐ5 பிராசஸர் கொண்டு இயங்குகின்றது.
இரு மாடல்களிலும் 4 ஜிபி ராம், டூயல் மைக்ரோபோன், ஜிகாபைட் வைபை, யுஎஸ்பி போர்ட் மற்றும் தன்டர்போல்ட் ஆப்ஷன்களும் இதில் இருக்கின்றது.

8

இதன் விலை ரூ.39,990
தற்சமயம் வாங்கக்கூடிய வகையில் கிடைக்கும் பெரிய கேமிங் கன்சோலாக ப்ளே ஸ்டேஷன் 4 உள்ளது. இதில் 1.6 ஜிகாஹெரெட்ஸ் கஸ்டம் எக்ஸ்86 8-கோர் பிராசஸர் GDDR5 ராம் 8ஜிபி மற்றும் டூயல்ஷாக் 4 க்ன்ட்ரோலர்கள் இதன் முக்கிய அம்சங்களாக இருக்கின்றது.

9

இதன் விலை ரூ.11,138
மிகச்சிறந்த ஆடியோ கருவிகளுக்கு பெயர் போன போஸ், நிறுவனம் புது வகை போர்டபிள் ஸ்பீக்கர் ஒன்றை வெளியிட்டுள்ளது. பெயருக்கு ஏற்றவாரு ப்ளூடூத் ஸ்பீக்கர் பல வண்னங்களில் கிடைக்கின்றது.
மேலும் 8 மணி நேர பேட்டரி பேக்கப் மற்றும் வயர்லெஸ் ஸ்பீக்கர்களும் இதில் உள்ளது.

10

இதன் விலை ரூ.54,990
சோனி நிறுவனம் இந்தாண்டு சைபர்ஷாட் RX 100 III புதிய உயர் ரக கேமராவை வெளியிட்டது. துள்ளியமான படங்கள், வேகமான லென்ஸ் கொண்டுள்ளது. மெட்டல் வடிவமைப்பில் OLED டிஸ்ப்ளே இருப்பதால் சூரிய வெளிச்சத்தில் எந்த பாதிப்பும் இருக்காது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Top 10 best gadgets of 2014. Check out the best of 2014 in Technology, here are the list of Top 10 best gadgets of 2014.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்