மாய உலகம் கட்டமைக்கும் 'கலைஞர்கள்'..!

அறிவியலும் தொழில்நுட்பமும் இணைந்து நமக்குப் பல்வேறு நன்மைகளை வழங்கியுள்ளன. தொழில்நுட்ப நன்மைகளுக்குப் பின் இருக்கும் சில கருவிகள் எவை எனப் பாருங்கள்..

By Meganathan
|

சில ஆண்டுகள் பின்னோக்கி சென்றால் தான் நம் வாழ்க்கை எவ்வாறெல்லாம் மாறியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அன்று மிகப்பெரியதாக இருந்த கணினிகள், இன்று எல்லோரும் கையில் எடுத்துச் செல்லுமளவு மாறியிருக்கிறது.

ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன், தாமஸ் ஆல்வா எடிசன், நிகோலா டெஸ்லா, சார்லஸ் பாபேஜ், ஸ்டீவ் ஜாப்ஸ் என மனிதக் குலத்திற்கு நன்மை பயக்கும் கண்டுபிடிப்புகளை வழங்கிய பிரபலங்கள் ஏராளம். இவர்களின் பங்களிப்பு இன்றளவும் நமக்குப் பயன் தரும் ஒன்றாக இருக்கிறது.

மாய உலகம் கட்டமைக்கும் 'கலைஞர்கள்'..!

நிக்கோலா டெஸ்லாவின் காப்புரிமைகள், கோட்பாடுகளுடன் இவரது தொடக்கப் பணிகள் தற்கால மின் பொறியியலுக்கு முன்னோடியாக அமைந்ததுடன், இவருடைய பல கண்டுபிடிப்புக்கள், திருப்பங்களை உண்டாக்குமளவு முக்கியத்துவம் பெற்றவையாக அமைந்திருக்கின்றன.

நிகோலா டெஸ்லாவின் காப்புரிமைக் கண்டுபிடிப்பைப் பயன்படுத்தி, நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து உயர் அழுத்த மின்சாரம் தயார் செய்து பல மைல்கல் தூரத்திற்கு அதைக் கொண்டு செல்ல முடிந்தது. அமெரிக்கத் தொழிற்துறை வளர்ச்சியில் இவருக்குப் பெரும் பங்குண்டு. எக்ஸ்-ரே கதிர், டெஸ்லா சுருள் ஆகியவற்றில் இவர் செய்த கருவிகள் இன்றும் பயன்படுகின்றன.

இதே போல் உலகம் முழுக்க நமக்கு முன் வாழ்ந்த பல்வேறு கண்டுபிடிப்பாளர்களின் ஆய்வுகள் இன்றளவும் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்றது. அவை சார்ந்த பணிகள் இன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் ஒன்றாகவே இருக்கின்றது. நிலவு பயணம் என்பது வெறும் கனவாகவே இருந்த சமயத்தில், குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயித்து அதற்குள் நிலவில் கால் பதித்த பெருமை நமக்கு உண்டு. இன்று செவ்வாய் கிரகம் சென்று திரும்பும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது.

மாய உலகம் கட்டமைக்கும் 'கலைஞர்கள்'..!

முன்பொரு காலத்தில் உலகைச் சுற்றி வர ஆசைப்பட்ட மனித இனம் இன்று மற்ற கிரகங்களுக்கு டூர் போகத் திட்டமிட துவங்கி விட்டான். பூமி கிரகத்திற்கு ஏற்பட இருக்கும் இயற்கை ஆபத்துக்கள் மட்டுமின்றி, விண்வெளியில் இருந்து பூமிக்கு ஏற்பட இருக்கும் ஆபத்துக்கள் வரை அனைத்தையும் முன்கூடியே கணிப்பது வரை மனித இனம் வளர்ச்சியடைந்திருக்கின்றது.

தொழில்துறை வளர்ச்சி இப்படியிருக்கப் போக்குவரத்து வழிமுறைகளின் மாற்றம் இன்னும் வியப்படையச் செய்யும் ஒன்றாக இருக்கின்றது. மனிதனின் உதவியின்றித் தானியங்கி முறையில் இயங்கும் வாகனங்கள் சாத்தியமாகிவிட்டது. இன்று அசால்ட்டாகத் தெரியும் தானியங்கி கார்களைத் தயாரிக்கும் பணிகள் 1920களில் துவங்கியது. பின் 60 ஆண்டுக் கால முயற்சிக்குப் பின் உலகின் முதல் தானியங்கி கார் ஆய்வுப் பணிகளின் மூலம் உருவானது. இதைத் தொடர்ந்து பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தானியங்கி கார் தயாரிக்கும் பணிகளில் இறங்கின.

மாய உலகம் கட்டமைக்கும் 'கலைஞர்கள்'..!

உலகப் பிரபலமான கூகுள் நிறுவனமும் கூகுள் செல்ஃப் டிரைவிங் கார்களைச் சில ஆண்டுகளாகச் சோதனை செய்து வருகின்றது. இதோடு இந்தியாவின் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் டாட்டா நானோ கார் ஒன்றைத் தானியங்கி முறையில் இயக்கியிருக்கின்றார். எப்படியோ தானியங்கி வாகனங்கள் சாத்தியமாகி விட்டது என்பதை ஒற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன் தானியங்கி வாகனங்கள், பறக்கும் கார் உள்ளிட்டவை ஆய்வுப் பணிகளில் இருந்தன. ஆனால் இன்று அவை சாத்தியமாகிவிட்டதோடு சில நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கும் வந்து விட்டன. தானியங்கி முறையில் பறக்கும் கார்கள் நீண்ட கால ஆய்வில் இருந்து வருகின்றன. பல்வேறு நிறுவனங்கள் ஆய்வு செய்வதோடு சோதனைகளில் இறங்கியுள்ளன. இது ஒரு பக்கம் இருக்கட்டும், ஹைப்பர் லூப் பற்றித் தெரியுமா.?

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மாய உலகம் கட்டமைக்கும் 'கலைஞர்கள்'..!

ஹைப்பர்லூப் என்பது காற்றின் மூலம் உந்தித்தள்ளப்பட்டுத் தரைக்கு மேல் அந்தரத்தில் நகரக்கூடிய திறன் கொண்ட வாகன அமைப்பு ஆகும். இது பயணிகள் உட்கார்ந்துகொள்ளக் கூடிய ஒரு குழாய் போன்ற வடிவமைப்புக் கொண்டது. மிகக் குறைந்த உராய்வுடன், வெற்றிடத்தில் ஒலியின் வேகத்தில் அதாவது மணிக்கு சுமார் 757 மைல் வேகத்தில் செல்லக்கூடியது. சில சோதனைகளில் இந்தப் பயண முறை வெற்றி பெற்றிருக்கிறது. முழுமையான சோதனைகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் நாளில் எவ்வித வாகன நெரிசலும் இன்றி உலகின் பல்வேறு இடங்களுக்கும் அதிவேகமாகப் பயணம் செய்ய முடியும்.

மாய உலகம் கட்டமைக்கும் 'கலைஞர்கள்'..!

மின் பொறியியல், நிலவு பயணம், தானியங்கி கார், பறக்கும் கார், ஹைப்பர் லூப் என எந்தத் தொழில்நுட்பமும் உடனே சாத்தியமாகக் கூடியதில்லை. பல ஆண்டு உழைப்பு, சோதனை எனப் பல கட்ட பணிகளைக் கடந்தே அவை நமக்குக் கிடைக்கின்றன. இவை அனைத்தும் ஒரு காலத்தில் சாத்தியமற்றதாகப் பார்க்கப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று அவை சாத்தியமாகி இருக்கின்றன. இதே போல் இன்று சாத்தியமற்றதாகப் பார்க்கப்படுவனவற்றைச் சாத்தியமாக்க உழைத்துக் கொண்டிருக்கும் மாயக் கலைஞர்களுக்கு இந்தத் தொகுப்புச் சமர்ப்பணம்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
This is how technology evolved, exists, and will continue ruling our lives

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X