கேவலமான வரலாற்று துரோகம் : தகுதியே இல்லாதவர்களுக்கு பெயரும் புகழும்.!

வரலாற்றில் தவறாக பதிவாகி உள்ள மிகப்பெரிய அபத்தம்..!

By Gizbot Bureau
|

ஓட்ட பந்தயத்தில் இரண்டாவதாக வந்தவருக்கு முதல் பரிசு கொடுத்தது போல, வரலாற்றில் சில தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கண்டுப்பிடிப்புகளுக்கு தவறான கௌரவம் (Wrong Credit) வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு பொருளை முதலில் கண்டுப்பிடித்தவர்களின் பெயர்களுக்கு பதிலாக, அதற்கு பிறகு அதே பொருளை கண்டுப்பிடித்தவர்களின் பெயர்கள் 'கண்டுப்பிடிப்பாளர்கள்' என்று வரலாற்றில் தவறாக பதிவாகி உள்ளது.

<strong>ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் வாங்க 8 காரணங்கள்.!</strong>ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் வாங்க 8 காரணங்கள்.!

இந்நாள் வரையிலாக நாம் அனைவரும் 'அதைத்தான்' புத்தகங்களில் படித்தும், இவர்கள் தான் 'இதையெல்லாம்' முதலில் கண்டுபிடித்தவர்கள் என்று நம்பியும் வருகிறோம் என்பது தான் வரலாற்றில் தவறாக பதிவாகி உள்ளதை விட மிகப்பெரிய அபத்தம்.!

வீடியோ கேம்ஸ் (Video Games)

வீடியோ கேம்ஸ் (Video Games)

வீடியோ கேம் என்பதை யார் கண்டுப்பிடித்தார்கள் என்பது இன்றுவரை நிலுவையில் உள்ள மிகப்பெரிய விவாத பொருள் ஆகும். அப்படியாக, பாங்க் (Pong) என்ற வீடியோ கேம் தான் வணிக ரீதியாக முதலில் வெளியாகி அந்த தொழில் துறையையே கலக்கியது.

டென்னிஸ்

டென்னிஸ்

ஆனால் அதற்கு முன்பே வெளியான வீடியோ கேம் தான் இரண்டு பக்கம் விளையாடக் கூடிய - டென்னிஸ் ஃபார் டூ (Tennis for Two).

வீடியோ கேம்

வீடியோ கேம்

டென்னிஸ் ஃபார் டூ கேமை கண்டுப்பிடித்தவர்கள் - தாமஸ் டி. கோல்ட்‌ஸ்மித் (Thomas T. Goldsmith Jr.) மற்றும் எஸ்ட்லே ரே மான் (Estle Ray Mann). டிஜிட்டல் மியூசிக் ப்ளேயர்ஸ் (Digital Music Players) : இன்றுவரை பல வகையான தொழில்நுட்ப புரட்சிகளில் ஈடுபடும் துறைகளில் ஒன்று தான், டிஜிட்டல் மியூசிக் ப்ளேயர்ஸ் துறை.

டிஜிட்டல் மியூசிக் ப்ளேயர்ஸ் (Digital Music Players) :

டிஜிட்டல் மியூசிக் ப்ளேயர்ஸ் (Digital Music Players) :

இன்றுவரை பல வகையான தொழில்நுட்ப புரட்சிகளில் ஈடுபடும் துறைகளில் ஒன்று தான், டிஜிட்டல் மியூசிக் ப்ளேயர்ஸ் துறை. நமக்கு மிகவும் பிடித்த பாடல்களை விரல் நுனியில் வைத்துக்கொள்ளும் படியாக உருவாக்கப்பட்ட டிஜிட்டல் மியூசிக் ப்ளேயர்ஸ்கள் முதலில் கண்டுப்பிடிக்கப்பட்டது - மார்ச் 1998, என்கிறது வரலாறு.

சேஹன் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ்

சேஹன் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ்

அதாவது தென் கொரியாவை சேர்ந்த சேஹன் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் (Saehan Information Systems) என்ற நிறுவனம் தான் முதன்முதலில் டிஜிட்டல் மியூசிக் ப்ளேயர்களை வெளியிட்டது என்கிறது வரலாறு.

ஆப்பிள்

ஆப்பிள்

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள், ஆப்பிள் நிறுவனம் தனது முதல் ஐபாட் கருவியை வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துப்படிவம்

கருத்துப்படிவம்

ஆனால், 1979-ஆம் ஆண்டிலேயே கானே க்ராமர் (Kane Kramer) என்பவர் டிஜிட்டல் மியூசிக் ப்ளேயர் கருத்துப்படிவம் (Concept) ஒன்றை உருவாக்கி உள்ளார். பின் நாட்களில் அவர் ஆப்பிள் நிறுவனம் மூலம் அங்கீகரிக்கப்பட்டார் இருப்பினும் அவர் பெயர் வரலாற்றில் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.

ஹெலியோசென்ட்ரிஸ்ம் (Heliocentrism)

ஹெலியோசென்ட்ரிஸ்ம் (Heliocentrism)

ஹெலியோசென்ட்ரிஸ்ம் - அதாவது பூமி என்ற கிரகம் பிரபஞ்சத்தின் நடுவில் இல்லை என்பதை முதன்முதலில் கண்டுப்பிடித்து கூறியது கோபெர்னிகஸ் (Copernicus) தான் என்று, நாம் அனைவரும் பள்ளி பாட புத்தகத்தில் படித்திருக்கிறோம்.

கணிதவியல் மேதை கோபெர்னிகஸ் :

கணிதவியல் மேதை கோபெர்னிகஸ் :

மிகப்பெரிய கணிதவியல் மேதையான கோபெர்னிகஸ் (Copernicus ) தான், சூரியன் தான் நடுவில் இருக்கிறது என்று கண்டுப்பிடித்து வான்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு எல்லாம் தெளிவை பிறப்பித்தார் என்கிறது வரலாறு.

கிரேக்க நாட்டு தத்துவவாதி

கிரேக்க நாட்டு தத்துவவாதி

ஆனால், கோபெர்னிகஸுக்கு முன்பாகவே கிரேக்க நாட்டு தத்துவவாதியான அரீஸ்டார்சஸ் ஆஃப் சமோஸ் (Aristarchus of Samos) என்பவர் சூரியன் தான் பிரபஞ்சத்தின் நடுவில் உள்ளது பூமி கிரகம் இல்லை என்பதை கண்டுப்பிடித்துள்ளார். 1400 ஆண்டுகள் : அதாவது, கோபெர்னிகஸ் கண்டுப்பிடிப்பதற்கு 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இது கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.

பரிணாமம் (Evolution)

பரிணாமம் (Evolution)

உயிரினங்களின் தோற்றம் அதாவது ஆன் தி ஆர்ஜின் ஆஃப் ஸ்பிசீஸ் (On The Origin of Species) என்ற கருத்தை 1959-ஆம் ஆண்டு வெளியிடும் போதுதான் சார்லஸ் டார்வினுக்கு பரிணாமம் என்ற அடித்தளம் கிடைத்தது.

கருத்துப்படிவம்

கருத்துப்படிவம்

ஆனால், ஆய்வாளர் மற்றும் குறிப்பிடத்தக்க புவியியலாளர் ஆல்ஃப்ரெட் ரஸல் வாலேஸ் (Alfred Russel Wallace) என்பவர் டார்வினுக்கு முன்னரே பரிணாமம் சார்ந்த கருத்துப்படிவத்தை கொண்டிருந்துள்ளார். மேலும், சார்லஸ் டார்வின் மற்றும் ஆல்ஃப்ரெட் ரஸல் வாலேஸ் ஆகிய இருவருமே கிட்டத்தட்ட சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரிலேட்டிவிட்டி (Relativity)

ரிலேட்டிவிட்டி (Relativity)

1905-ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சார்பியல் கோட்பாடை (Theory of relativity) கண்டுப்பிடித்தார். மேலும் தனது கோட்பாடை 1915-ஆம் ஆண்டில் தான் செயல் விளக்கமளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜேம்ஸ் கிளர்க் மாக்ஸ்வெல்

ஜேம்ஸ் கிளர்க் மாக்ஸ்வெல்

ஆனால், 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கணித மேதையான ஜேம்ஸ் கிளர்க் மாக்ஸ்வெல் (James Clerk Maxwell) என்பவர் மின்காந்தவியல் பற்றி தெளிவான ஆய்வு செய்துள்ளார். அந்த ஆய்வின் மூலமாகவே தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், சார்பியல் கோட்பாடு சார்ந்த கருத்தை விரைவில் அடையாளம் கண்டுகொண்டுள்ளார் என்பதே நிதர்சனம்.

ஃப்லேம் த்ரோவர்ஸ் (Flame throwers)

ஃப்லேம் த்ரோவர்ஸ் (Flame throwers)

நவீன நெருப்பைக் கக்கும் ஆயுதக்கருவியை உருவாக்கியது ரிச்சர்ட் ஃபீட்லர் (Richard Fiedler) என்றும், அது உருவாக்கம் பெற்ற காலம் 1990-களுக்கு முன் என்றும் கூறுகிறது வரலாறு.

பண்டைய கிரேக்க காலம்

பண்டைய கிரேக்க காலம்

ஆனால், நெருப்பை கக்கும் கருவியானது பண்டைய கிரேக்க காலத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது. அப்படியாக, முதன்முதலில் நெருப்பு கக்கும் ஆயுதக்கருவியை உருவாக்கியது கல்ளினிகோஸ் ஆஃப் ஹெலியாபோலிஸ் (Kallinikos of Heliopolis) என்பது தான் நிதர்சனம்.

கரோக்கீ (Karaoke)

கரோக்கீ (Karaoke)

2010-ஆம் ஆண்டில் இருந்து ஜப்பானில் மிக அதிகமான லாபம் ஈட்டும் ஒரு துறை தான் கரோக்கீ. அதாவது பாடலில் குரல் ஒளி இன்றி, வெறும் பின்னணி இசை மட்டுமே ஒலிக்கும் படியாக உருவாக்கப்படும் மியூசிக் ட்ராக் (Music Track) தான் கரோக்கீ எனப்படும்.

இசைக்கலைஞர் :

இசைக்கலைஞர் :

ஆனால், 1960-களிலேயே டிரம் இசைக்கலைஞரான (Drummer) டைசுகே இனோ (Daisuke Inoue) கரோக்கீயை கண்டுப்பிடித்து பயன்படுத்தியுள்ளார்.

டெட்ரிஸ் (Tetris)

டெட்ரிஸ் (Tetris)

வீடியோ கேம் வரலாற்றில் மிகவும் பிரபலமான மற்றும் இன்று வரையிலாக நிலைத்து இருக்க கூடிய ஒரு கேம் தான் - டெட்ரிஸ், இருப்பினும் இதனை உருவாக்கியவரின் பெயர் வரலாற்றில் பெரிதளவில் காணப்படவில்லை. இதை உருவாக்கியவர் சோவியத் அறிவியல் அகாடமியை சேர்ந்த அலெக்ஸே பஜிட்னோவ் (Alexey Pajitnov) என்பவர் ஆவார்

வேலைப்பளு

வேலைப்பளு

தன் சக ஊழிய நண்பர்கள் நாள்தோறும் சந்திக்கும் வேலைப்பளுவில் இருந்து சிறிது ஓய்வெடுத்துக் கொள்ளும் நோக்கத்தில் டெட்ரிஸ் கேமை, அலெக்ஸே உருவாக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பின் இந்த டெட்ரிஸ் கேம் மக்களிடம் செலுத்தும் ஆதிக்கத்தை உணர்ந்த சோவியத் அரசாங்கம் வணிக நோக்ககத்தில் 1984-ஆம் ஆண்டு டெட்ரிஸ் கேமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

Best Mobiles in India

Read more about:
English summary
This is how Famous inventions Credited To The Wrong Person. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X