தலைமறைவாகுவது எப்படி.? விசய் மல்லையா பார்த்து கத்துக்கோப்பா.!

குசும்புக்கார பில்லு.!

Written By:

என்னது அடுத்த தலைமறைவா..? என்று ஷாக் ஆகிட வேண்டாம், நீங்கள் நினைக்கும் அளவிலான சீரியஸ் மேட்டர் இல்ல இது. இது நம்ம பில்லு - அதாவது பில் கேட்ஸ் போல செம்ம கூலான ஜாலியான மேட்டர். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு எளிமையாக இருக்கிறோமோ, சரிக்கு சமமாக வாழ்க்கை எளிமையானதாக அமையும் என்பதற்கு ஏகப்பட்ட நிகழ்நேர ஆதாரங்கள் இருப்பினும் பில்லு தான் "சோக்கான" ஒரு எடுத்துக்காட்டு.!

பிரபலம் என்றாலே தலைமறைத்து தானே ஆகவேண்டும். அதற்காக கொள்ளைக்கொள்ளையாய் கடன் வாங்கிவிட்டு ஓடி ஒ(ழி)ளிந்த பிரபலங்களுக்கு ஆதரவு கரம் நீட்டிவிட்டான் என்று கூறி என் கைகளில் விலங்குபோட வேலை பார்த்து விடாதீர்கள். பொது இடங்களில் பிரபலங்கள் மறைவாக செயல்படுவது தான் அவர்களுக்கும் நல்லது பொதுமக்களுக்கும் நல்லது. இல்லையெனில் இரண்டு பக்கமும் தேவையில்லாத இடையூறுகள் ஏற்படும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

பில்லு டெக்னீக்

கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்க - மெரினா போராட்டத்தின் போது நடிகர் விஜய் முகத்தில் கர்சீப் காட்டாமல் போயிருந்தால் என்னவாகிக்கும்.? சரி, அம்மாதிரியான ஒரு தலைமறைவில் ஈடுபட நம்ம பில்லு கைவசம் உள்ள டெக்னீக் என்னவவென்று தெரியுமா.?

சுவாரசியமான கேள்வி

'அஸ்க் மீ எனிதிங்' (என்னிடம் என்ன வேண்டுமானலும் கேளுங்கள் ) என்ற கேள்வி பதில் நிகழ்வொன்றில் உலகின் மாபெரும் பணக்கார மனிதர்களில் ஒருவரான பில் கேட்ஸ் அவர்களிடம் ஒரு சுவாரசியமான கேள்வி கேட்கப்படுகிறது - அவர் அளித்த பதில் இருந்து கூட்டமான பகுதிகளில் அவர் மிக எளிமையாக மக்களோடு மக்களாய் கலந்து விடுவார் என்பதை நமக்கு உணர்த்துகிறார்.

அடையாளம்

ரொம்ப சிம்பிளாக "நான் சில நேரங்களில் ஒரு தொப்பி அணிந்து கொள்வேன் அவ்வளவுதான்" என்று கூறியுள்ளார். "எடுத்துக்காட்டுக்கு நான் என் மகனுடன் கல்லூரி சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளும் போது என் கவனம் முழுவதும் என் மகன் மீதிருக்கும் நோக்கத்தில் நான் ஒரு மறைநிலையில் இருக்க ஒரு தொப்பி அணிந்து கொள்வேன். அப்படி செய்ய என் மீதான மக்களின் கவனம் மிக குறைவாக ஏற்படும் என்னை அடையாளம் காணும் மக்களின் எண்ணிக்கையும் குறையும்" என்று கூறியுள்ளார்.

சுமையாக கருதுவதில்லை

அதுமட்டுமின்றி என்னை சரியாக அடையாளம் காணும் மக்கள் நிஜமாகவே "சூப்பர் நைஸ்" அதனால் மக்கள் என்னை கண்டுபிடிப்பதே பெரும்பாலான நேரங்களில் ஒரு சுமையாக நான் கருதுவதில்லை" என்றும் பொதுமக்களை புகழ்ந்து தள்ளுவதோடு பிரபலத்தன்மை ஒரு சிக்கல் அல்ல என்பதையும் நமக்கு கற்றுக்கொடுக்கிறார்.

பண்பு - வித்தை

நேரம், பணம், கடமை, சமூக வாழக்கை சார்ந்த விடயங்கள் மட்டுமின்றி இதுபோன்ற சில சுவரசியமான பண்புகளையும், வித்தைகளையும் நாம் பில் கேட்ஸ் என்ற மனிதரிடம் இருந்து கற்றுக்கொண்டே தீர வேண்டும்.

எம்மாதிரியான தொப்பி

மற்றும் பில்லு தனது தலைமறைவு ரகசியத்தை வெளிப்படுத்தும் அதே நேரத்தில் அவர் எம்மாதிரியான தொப்பிகளை பயன்படுத்துவார் என்பதை பற்றிய விவரங்களை அளிக்கவில்லை என்றாலும் கூட நிஜமாகவே தலைமறைவாக விரும்பும் வெள்ளைத்தாடிகூட்டம் எதோ ஒரு தொப்பியை போட்டு தற்காலிகமாக மறைந்து கொள்ளவும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
This incognito trick also we need to learn from Bill Gates. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்