டிரான்ஸ்ஃபார்‌மர்ஸ் பட பாணியில் காராக மாறும் ரோபோட்..!

|

ஹாலிவுட் அதிரடிப் படங்களை நாம் அதிகம் விரும்ப காரணம், கற்பனைக்கு எட்டாத அதன் புதுமைகளும், விந்தைகளும்தான். அப்படியான படங்களில் ஒன்றுதான் டிரான்ஸ்ஃபார்‌மர்ஸ்.

டிரான்ஸ்ஃபார்‌மர்ஸ் பட பாணியில் காராக மாறும் ரோபோட்..!

அந்த படத்தில் வரும் கார்கள் சட்டென்று பெரிய பெரிய ரோபோட்களாக உருமாறி நடக்கும், பறக்கும், சண்டை போடும், மீண்டும் கார்களாக மாறி விடும். அதுதான் அந்த படத்தின் மிகப் பெரிய கற்பனை விந்தை..!

ஸ்மைலிக்கள் தான் இனி உங்கள் பாஸ்வேர்டு..!

அந்த கற்பனையை நிஜமாக்கி அதே போல காராக மாறும் ரோபோட்டை, குவியல் குவியலாக பணத்தைக் கொட்டி ஜப்பானிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். 3 மீட்டர் உயரமும், 700 கிலோ எடையும் கொண்ட இந்த ரோபோட், டிரான்ஸ்ஃபார்‌மர்ஸ் படத்தில் வரும் ஆப்டிமஸ் பிரைம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இரண்டு பேர் அமரக் கூடிய மாதிரியான ஒரு சிறிய காராக உருமாறக்கூடியது.

டிரான்ஸ்ஃபார்‌மர்ஸ் பட பாணியில் காராக மாறும் ரோபோட்..!

மனிதனை போல நடக்கவும், கை கால்களை அசைக்கும் படியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள இது மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் நடக்க கூடியது. இந்த ரோபோட், 10 நொடிகளில் காராக உருமாறி மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் செல்லக் கூடியது. 2017-க்குள் இதன் சிறப்பான வோர்க்கிங் மாடலை சந்தைக்கு கொண்டு வரும் முனைப்போடு இருக்கிறது ப்ரொஜெக்ட் ஜே-டெய்டீ குழு விஞ்ஞானிகள்.

டிரான்ஸ்ஃபார்‌மர்ஸ் பட பாணியில் காராக மாறும் ரோபோட்..!

கற்பனையில் சாத்தியம் என்றால், அது நிஜத்திலும் சாத்தியமே என்பதற்கு இந்த படைப்பு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு..!

Best Mobiles in India

Read more about:
English summary
This is a Transformer-style humanoid robot that morphs into a car that can drive over 60km/h*.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X